பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, 17 December 2016

பூங்காவனம் இதழ் 26 பற்றிய பார்வை

பூங்காவனம் இதழ் 26 பற்றிய பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல.

கலை, இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் இதுவரை மூத்த படைப்பாளிகள், இலக்கியவாதிகளான பெண் எழுத்தாளர்களை நேர்காணல் செய்து அவர்களது புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து அவர்கள் பற்றிய தகவல்ளையும் பிரசுரித்து வந்தது. 26 ஆவது இதழில்; பன்முகப் படைப்பாளியாக விளங்கும் இளம் தலைமுறை எழுத்தாளரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் அழகிய புகைப்படம் முன் அட்டையை அலங்கரிக்கின்றது. வழமை போன்று சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என பல்வேறுபட்ட அம்சங்கள் இதழில் இடம்பெற்றுள்ளன.

யுனெஸ்கோ 1965 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்திய எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8 ஆம் திகதி என்பதை ஆசிரியர் வாசகர்களுக்கு நினைவுபடுத்தி எழுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இலக்கியத்தின் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார்.

அட்டைப்படத்தை அலங்கரிக்கும் எச்.எப். ரிஸ்னாவைப் பற்றி இலக்கிய உலகம் நன்கு அறிந்திருந்தாலும் இதழிலுள்ள குறிப்புக்கள் அவர் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன. மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஜனாப். கே.எம். ஹலால்தீன் - பீ.யூ. நஸீஹா தம்பதியரின் புதல்வியாவார். தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இதனால் இவரது கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எச்.எப். ரிஸ்னா கஹகொல்லை அல் பத்ரியா மு.ம.வி, வெலிமடை மு.ம.வி, பண்டாரவளை சேர் ராசிக் பரீட் மு.ம.வி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளதுடன் தனியார் நிறுவனங்களில் கணினிப் பயிற்சிப் பாடநெறிகளை பூர்த்தி செய்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை பாடநெறியையும் மேற்கொண்டுள்ளார். தற்பொழுது கல்வி வெளியீட்டுத்த திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றார்.

பாடசாலைக் காலத்திலேயே கவிதைத் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் பாடசாலை மட்டப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைத் தட்டிக்கொண்டுள்ளார். காத்திருப்பு என்ற கவிதையை 2004 இல் எழுதியதைத் தொடர்ந்து இலக்கியத் துறையில் நுழைந்து இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டிருக்கின்றார். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம், மெல்லிசைப் பாடல்கள் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.  இவரது பாடல்கள் நேத்ரா அலைவரிசையில் ஒலி, ஒளிபரப்பப்பட்டுள்ளதுடன் பாடகர் கலைக்கமல் அவர்களால் வெளியிடப்பட்ட ஷஷமண் வாசனையில் மகரந்தப் பூக்கள்|| இறுவட்டிலும் வெளிவந்திருப்பது இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

இவர் அகில இலங்கை மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுள்ளதோடு சிறந்த பாடலாசிரியர், சிறந்த சிறுகதை எழுத்தாளர், காவிய பிரதீப, எழுசுடர் ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இதழில் நாட்காட்டிகளோடு நாம், வாழ்க்கைச் சங்கிலி, புலப்பெயர்வு, செறிவோம் தமிழ்மொழி, சுயநலம், தடம் மாறிய மனிதம், தண்ணீரும் கண்ணீரும், விடை கேட்கிறேன், நினைவுகள் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவற்றை முறையே பதுளை பாஹிரா, பி.ரி. அஸீஸ், திக்வல்லை கமால், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, மிஹிந்தலை பாரிஸ், என். சந்திரசேகரன், ஆ. முல்லைதிவ்யன், காத்தான்குடி றுஷ்தா ஆகியோர் எழுதியியுள்ளனர்.

பயண அனுபவம், மனித மனங்கள், நல்ல உம்மா, மாற்றங்கள், உண்மை பேசும் இதயங்கள் என்ற தலைப்புகளில் சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. இவற்றை முறையே சூசை எட்வேட், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, கலாபூஷணம் எம்.எம். அலி அக்பர், ச.முருகானந்தன், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர்., இலக்கிய அனுபவ அலசலை கவிஞர் ஏ. இக்பாலும், கவிதைகளுடனான கைகுலுக்கல் நூல் பற்றிய மதிப்பீட்டை பதுளை பாஹிராவும், எழுத்தாளர் முத்துமீரான் பற்றிய குறிப்புகளை ரிம்ஸா முஹம்மதும் எழுதியுள்ளனர்.

நூலகப் பூங்காவில் 16 நூல்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் வாசகர் கடிதமும் இடம்பெற்றிருக்கின்றமை இதழில் காத்திரத்துக்கு வலு சேர்க்கின்றது. மொத்தத்தில் பூங்காவனம் இதழ் பல்சுவைக் களஞ்சியமாக இருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்

பூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

பூங்காவினுள்ளே ஆசிரியர் தனது பக்கத்தில் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய செய்தியை குறிப்பிட்டிருக்கின்றார். 2016 மே மாதம் இலங்கையின் வெள்ள அனர்த்தங்களால் அநேக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். மனித உயிர்கள் மாத்திரமன்றி கால்நடைகள், சொத்துக்கள், உடமைகள் என்பனவும் காவுகொள்ளப்பட்டன. வெள்ள அனர்த்தம் மாத்திரமன்றி மண் சரிவினாலும் பல அழிவுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவிலே ஏற்பட்ட மாபெரும் மண்சரிவு அனர்த்தம் அரநாயக்காவில் ஏற்பட்ட அனர்த்தம் என கணிப்பிடப்பட்டிருக்கின்றது. இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காததால் ஓர் எச்சரிக்கையாக இந்த நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன. இது பற்றிய கருத்துக்களை ஆசிரியர் தனது பக்கத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

இதழின் உள்ளே வழமை போன்று நேர்காணல், சிறுகதைகள், கவிதைகள் உட்பட இலக்கிய அனுபவ அலசல், கட்டுரைகள், உருவகக் கதை என பல்வேறுபட்ட ஆக்கங்களை உள்ளடக்கியதாக இந்த இதழ் வெளிவந்திருக்கின்றது.

நேர்காணலில் எழுத்தாளர் திருமதி. மைதிலி தயாபரனை சந்தித்து அநேக இலக்கிய விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இதழாசிரியர். திருமதி. மைதிலி தயாபரன் பற்றிய தகவல்களை பார்க்கும்போது இவர் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையில் கல்வி பயின்று 1996 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 2001 ஆம் ஆண்டு பொறியியலாளராக பட்டம் பெற்று இலங்கை மின்சார சபையில் வவுனியா பிரதேசத்தில் பிரதம பொறியிலாளராகவும், வடக்கின் வசந்தம் என்ற செயற் திட்டத்தின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார். முழுக்க முழுக்க இவர் ஓர் இலக்கியவாதியாக இல்லாமல் துறை சார்ந்த தொழில்களோடு இடையே தனது இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இலக்கியச் செயற்பாடுகளில் அவ்வப்போது ஈடுபட்டு வரும் ஓர் இலக்கியவாதி மைதிலி தயாபரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபுக் கவிதை, புதுக் கவிதை, நாவல், ஆய்வு என பல்முக இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் வாழும் காலம் யாவிலும், சொந்தங்கள் வாழ்த்தி என்ற இரு நாவல்களை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி ஒரே நாளில் வெளியிட்டதோடு பின்னர் விஞ்சிடுமோ விஞ்ஞானம் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கின்றார். அதேபோன்று 2015 ஆம் ஆண்டு அநாதை எனப்படுவோன் என்ற நாவலையும் சீதைக்கோர் ராமன், தவறுகள் தொடர்கின்றன ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார்.

இவர் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களின் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களையும்  சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிப் போட்டியில் என் செல்வ மகளே என்ற நாவலுக்கான பரிசையும் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதழின் உள்ளே அஸாத் எம். ஹனீபாவின் பக்கவாத தேசம், பதுளை பாஹிராவின் நிஜங்களைத் தொலைத்தல், மாளிகா அஸ்ஹரின் வேகா வெயில், வெலிப்பன்னை அத்தாஸின் கூலிகள்,  பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் தேர்வுகள், எஸ்.ஆர். பாலசந்திரனின் ஒப்பற்ற அழகி, ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் தொலைந்த நிம்மதி, வில்லூரானின் அச்சம் தவிர், கவிதாயினி சஹீகாவின் மழைநாள், செதுக்குகிறேன் ஆகிய இரண்டு கவிதைகள் போன்றவை இந்த இதழில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் சூசை எட்வேர்டின் எது சரி?, கினியம இக்ராம் தாஹாவின் காலம் மாறிவிட்ட போதிலும் என்ற இரண்டு சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன.

கவிஞர் ஏ. இக்பாலின் 20 ஆவது இலக்கிய அலசலில் சரித்திர விரிவுரையாளர் முஹம்மது சமீம் அவர்களைப் பற்றிய பல பிரயோசனமுள்ள தகவல்களைத் தந்திருக்கின்றார். மிகவும் அருமையான இந்தக் கட்டுரை மூலம் முஹம்மது சமீம் அவர்களது இலக்கிய ஈடுபாடுகளினால் இலக்கிய உலகுக்குக் கிடைத்துள்ள நன்மைகளைப் பற்றியும், கவிஞர் அவர் பால் கொண்டிருந்த பற்றுதல் பற்றியும் தகவல்களை மிகத் தெளிவாகவும், விபரமாகவும் தந்திருக்கின்றார்.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா சமூக ஊடகங்களைப் பற்றி சிறப்பானதொரு கட்டுரையைத் தந்திருக்கின்றார். இக்கட்டுரையின் வாயிலாக சமூக ஊடகங்கள் என்றால் என்ன? அவை எவ்வகையின? அவற்றின் செயல்முறைத் தொழிற்பாகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? போன்ற விபரங்கள், சூத்திரங்கள் மூலம் தெளிவாக விளக்கியிருக்கின்றார்.

சூசை எட்வேர்டின் எது சரி? என்ற சிறுகதை தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் காணப்படும் சமூகப் பண்பாடுகளை விளக்கி நிற்கின்றது. இரண்டு சமூகங்களுக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் இருபக்க நியாயங்களை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

கினியம இக்ராம் தாஹாவின் காலம் மாறிவிட்ட போதிலும் என்ற சிறுகதை மனிதன் இன்னும் மாறாமல் மூட நம்பிக்கையிலேயே மூழ்கியிருக்கின்றான். திருந்தாத சமூகமும், திருத்த முடியாத சமூகமும் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனங்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதோடு எத்தனையோ குமரிப் பெண்களின் வாழ்க்கை வரன் இன்றி வரண்டு போய்விடுகின்றது என்பதையும் தெளிவு படுத்துகின்றது.

மருதூர் ஜமால்தீனின் போட்டியால் மலர்ந்த உறவு என்ற உருவகக்கதை வித்தியாசமான கோணத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. ஆமையும் முயலும் என்ற கதை பல்லாண்டு காலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் ஒரு சாதாரண கதைதான். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் கதை. ஆனால் இந்தக் கதையை ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் தந்திருக்கின்றார். வித்தியாசமான கதை, வித்தியாசமான முடிவு.

எழுத்தாளர் அறிமுகத்தில் வெலிமடையைச் சேர்ந்த எம்.எப். சஹீகா பற்றிய குறிப்புகளும் அவரது இரு கவிதைகளும் தரப்பட்டிருக்கின்றன. தாய் நிலம் என்ற நூல் பற்றிய மதிப்புரையை நிலாக்குயில் எழுதியிருக்கின்றார். ஆ. முல்லை திவ்யன் என்ற இளம் எழுத்தாளரால் எழுதப்பட்ட இச்சிறுகதை நூல் பற்றிய ஆய்வு மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நூலகப் பூங்காவில் பதினான்கு நூல்களைப் பற்றிய விபரங்களையும் பூங்காவனம் ஏந்தி வந்திருக்கின்றது. அத்தோடு வாசகர் கடிதமும் வழமை போல இடம்பெற்றிருக்கின்றது. மொத்தத்தில் சகல விடயங்களும் உள்ளடங்கியதாக வெளிவந்திருக்கும் பூங்காவனம் இதழ் வாசகரை திருப்திப்படுத்திவிடும் என்பதில் ஐயம் இல்லை!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 24 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்

பூங்காவனம் 24 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்


கலாபூஷணம் மாவனல்லை எம்.எம். மன்ஸூர்


பூங்காவனம் 24 ஆவது இதழ் வழமை போன்று அழகாகவும், நேர்த்தியாகவும் வெளிவந்துள்ளது. ஆசிரியர் தன் தலையங்கத்தில் கவிதை தினத்;தை வாசகர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டு உள்ளே என்னென்ன தலைப்புக்களில் எத்தகைய விடயங்கள் இடம்பிடித்திருக்கின்றன என்பதை அறியும் ஆவலைத் தூண்டியிருக்கின்றார்.

மார்ச் மாதம் 21 ஆம் திகதி உலக கவிதைத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனால் கவிதையின் பண்புகள் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சியின் இன்றைய நிலை எப்படியிருக்கின்றது என்பதைப் பற்றியும் கருத்துக்கள் ஆசிரியர் தலையங்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கவிதை வெறும் காதலுக்காகவும் சுவாரஷ்யத்துக்காகவும் கையாளப்படாமல் சமூக எழுச்சிக்காகவும் சிந்தனை மலர்ச்சிக்காகவும் எழுதப்பட வேண்டும் என்பது ஆசிரியர் தலையங்கத்தில் ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய பெரும்பாலான கவிதைகள் காதலை மையப்படுத்தியே எழுதப்படுகின்றன. காதல் என்பது இளம் வயதில் ஏற்படும் ஒரு உணர்வு. இது இளம் வயதில் தவிர்க்க முடியாததாயினும் வயோதிபத்தில் நிலைக்கும் காதலானது உணர்வுகள் நிரம்பியதாகக் காணப்படுகின்றது.

திருமதி. செல்வி திருச்சந்திரனை நேர்காணல் செய்திருக்கும் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் பல தகவல்களை அதிதியிடமிருந்து வாசகர்களுக்கு அறியத் தந்துள்ளார். திருமதி. செல்வி திருச்சந்திரன், குமாரி ஜெயவர்தனவின் வொய்ஸ் ஒப் வுமன் என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியரானதோடு அதன் தமிழ் சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்று பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று தந்தையின் ஆதரவில் முற்போக்கு இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு பின் எயார் லைன்ஸில் உயர் பதவியில் அமர்ந்து சேவையாற்றியதன் பின்னர் மேற்குறிப்பிட்ட பெண்கள் குரல் சஞ்சிகையில் சேர்ந்து கொண்டார். தற்போது பெண்ணிலைவாதியாக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் பணிப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களின் விமோசனத்துக்காகவும் பாடுபட்டு உழைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் பல்வேறு பணிகளும் சேவைகளும் என்ற வகையில் பெண்களுக்கு அறிவூட்டல், சாதி நிலையிலும் வர்த்தக நிலையிலும் தாழ்ந்த பெண்கள், அகதிகள், போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு துறைசார்ந்த பயிற்சிகளையும் வலுவூட்டல்களையும் மேற்கொண்டு பெண்களின் உயர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இலக்கிய செயற்பாடுகளைவிட, இவர் இவற்றில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார்.

குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பன்னிரண்டு பெண்களை நல்வழிப்படுத்தி அவர்களை நாட்டின் நற்பிரஜைகளாக மாற்றி அவர்களுக்கு நியாயமான தொழில்களையும் பெற்றுக்கொடுத்த பெருமை இவரையே சாரும். சமூகவியல், மானுடவியல் என்ற கற்கை நெறிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை வாசித்தலையும் அரசியல் கட்டுரைகளை வாசித்தலையும் தனது வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் மேற்கொண்டு வந்ததால் இலக்கிய ஆர்வம் என்று சொல்லும் அளவுக்கு அதிதீவிரம் அவரிடம் காணப்படவில்லை. எனினும் பெண்ணிலைவாதக் கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்களை வாசித்து ஆய்வுகள் மேற்கொள்வதும் பெண்களுக்கு எதிராக பழமைசார் இலக்கியங்களுக்கு எதிர்வாதம் செய்வதும் இவரது சிறப்புக்களுள் ஒன்று எனலாம். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மொத்தம்; 14 நூல்களை இவர் எழுதியிருக்கின்றார்.

பூங்காவனத்தில் பதுளை பாஹிராவின் கடலோரக் கவிதைகள், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் இறுதி இலக்கு, கவிதாயினி சஹீகாவின் தேவதை, சம்மாந்துறை பீ.எம். கியாஸ் அகமட்டின் தாங்கிடாத உள்ளம், ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் மரணம், உ. நிஸாரின் வாழ்க்கை, அட்டாளை நிஸ்ரியின் விடுதலை மீதான பாடல், டாக்டர் நாகூர் ஆரிபின் நட்பு ஆகிய சிறப்பான கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சூசை எட்வேர்டின் மரியாதை வேண்டும், எஸ். முத்துமீரானின் சுல்தான் காக்கா, எஸ்.ஆர். பாலசந்திரனின் உண்மையின் சொரூபம், புதுக்குடியிருப்பு அலெக்ஸ் பரந்தாமனின் துரோகங்கள் ஆகிய சிறுகதைகளோடு ஏ.ஆர். மாஹிராவின் அகோரம் குறுங்கதையும் பூங்காவனத்தில் இடம்பிடித்திருக்கின்றன.

மரியாதை வேண்டும் என்ற கதை மக்களின் இன்றியமையாத தேவையான வங்கி நடவடிக்கைகளில் நடந்தேறும் யதார்த்தங்களை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. அப்பாவிகளும், வயோதிபர்களும் படுகின்ற துன்பமும் இக்கதையினூடே நன்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுல்தான் காக்கா என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாக இன்னொரு ஊருக்கு வந்து அங்கு  எல்லோர் மனதையும் கவர்ந்த சுல்தான் காக்கா என்பவரின் கதையாகும்.  தன் மண்ணின் பெருமையைப் பேசிப்பேசி தனக்குள்ளே திருப்தி கண்டவர் அவர். திடீரென ஒருநாள் அவர் மரணித்த பின்பு முழு ஊரும் இவரது மரணக்கிரியைகளில் கலந்துகொள்கிறது. சொந்த மண்ணில் தன் உடல் அடக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆசை கடைசியில் நிறைவேறவே இல்லை என்ற கதையின் முடிவு வாசகரின் உள்ளத்தைப் பிழிகிறது.

உண்மையின் சொரூபம் என்ற கதை பெண்களின் இயல்புகளையும், அவர்களின் எண்ணவோட்டத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. ஆபரணங்களுக்கு ஆசைப்படாத பெண்கள் இல்லை. இரவல் நகைகளைப் பெற்று அதன் பின் படுகின்ற பாட்டை இக்கதை நன்கு தெளிவுபடுத்தியுள்ளது.

என்ன நடந்தது, ஏது நடந்தது  என்று தெரியாமல் தாலி கட்டிய கணவன் இன்னொருத்தியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அத்தகையதொரு வேதனையையும் வலியையும் உணர்த்தும் கதையாக துரோகங்கள் என்ற கதை அமைந்திருக்கின்றது.

சாரதியின் கையில்தான் பயணிகளின் உயிர் தங்கியிருக்கின்றது. கவனக் குறைவாக வாகனம் செலுத்தினால் இறுதியில் விபத்து நடந்துவிட ஏதுவான காரணியாகின்றது. அத்தகைய ஒரு விபத்து நல்லாசிரியர் ஒருவருடைய உயிரையும் குடித்துவிட்ட உண்மைச் சம்பவத்தை விளக்குகிறது அகோரம் என்ற குறுங்கதை.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசலில் கவிதை பற்றிய விளக்கங்களும்,  கவிதை இதழ்கள் பற்றிய விளக்கங்களும் இதழின் ஆசிரியர் பெயர்களோடு தரப்பட்டிருக்கின்றது. அதேவேளை வெலிப்பண்ணை அத்தாஸ், ஈழமேகம் எம்.ஐ.எல். பக்கீர்தம்பி (1923 – 1985) பற்றி தனது அனுபவங்களையும் பூங்காவனத்தில் பதிவு செய்துள்ளார்.

பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், பதினாறு நூல்கள் பற்றிய குறிப்புக்களும் பூங்காவனம் இதழ் 24 இல் காணப்படுகின்றது. இதில் எனது பட்டி பற்றிய நூலின் குறிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றமை எனக்கு மகிழ்வைத் தருகின்றது. பூங்காவனம் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனத்தின் 23 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனத்தின் 23 ஆவது இதழ் மீதான பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் - மாவனல்லை.                                                                                                                                                                          

பூங்காவனத்தின் 23 ஆவது இதழ் வழமையான அம்சங்களுடன் நேர்த்தியான அட்டை, படைப்பாளி திருமதி. லறீனா அப்துல் ஹக்கின் படத்தை தாங்கி வெளிவந்திருக்கிறது. வாசகரை ஒரு நிமிடம் நிற்கச் செய்து நல்ல பல செய்திகளைத் தந்து இதழின் உள்ளே நுழையச் செய்யும் ஆசிரியரின் கருத்து அழகானது. இலங்கை வருவாயில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் தேயிலை, தோட்ட மக்களின் அவல நிலை பற்றி நினைவு படுத்தியிருக்கின்றது ஆசிரியர் தலையங்கம். இலங்கையில் குறைந்த வருமானத்தைப் பெறும் மிகவும் கஷ்டமான வாழ்க்கை நடத்தும் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இது டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச தேயிலை தின நினைவுச் செய்தியாக எடுத்து நோக்கத்தக்கது.

அட்டைப் படத்தை அலங்கரிக்கும் திருமதி லரீனா அப்துல் ஹக் பிரபல சிங்களப்பட இசையமைப்பாளர் திரு எம்.எம்.ஏ. ஹக் - பௌசுல் இனாயா தம்பதியரின் புதல்வியாவார். கலையும் இலக்கியமும் கைவந்த குடும்பத்தில் மாத்தளையில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று மொழிபெயர்ப்புக் கற்கைகளில் நான்கு வருடங்களாகப் பணியாற்றியவர். தற்போது சிங்களத் துறையில் வருகை நிலை விரிவுரையாளராகப் பணிபுரியும் இவர், மும்மொழிப் புலமை பெற்றுள்ளார். அக்காலத்தில் மாத்தளை பர்வீன் என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் தொடர்களை எழுதி வந்தவர் இவரது தாயார் பௌசுல் இனாயா. தாயின் வழியில் தனது இலக்கியப் பயணத்தையும் இவர் அமைத்துக் கொண்டுள்ளார். தந்தை எம்.எம்.ஏ. ஹக் அவர்கள் சுஜீவா, சுனேத்திரா, சூகிரி கெல்ல, கீதா, ஒபய் மமய் போன்ற பிரபல சிங்களப் படங்களுக்கு இசையமைத்த பிரபல சிங்களப்பட இசையமைப்பாளராக மாத்திரமன்றி பயிற்சி பெற்ற ஒரு ஆங்கில ஆசிரியரும் அதிபரும் ஆவார். இவர் இசையமைத்து பாடகர் எச்.ஆர். ஜோதிபால பாடிய ''சந்தன அல்லென் நாலா...'' என்ற பாடல் விருது பெற்ற பாடலாகும்.

திருமதி. லறீனா அப்துல் ஹக் அவர்கள் எருமை மாடும் துளசிச் செடியும், வீசுக புயலே, தமிழ் மொழியும் இலக்கியமும் சில சிந்தனைகள், ஒரு தீப்பிழம்பும் சில கரும்புகளும், செ. கணேசலிங்களின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள் ஒரு நோக்கு, மௌனத்தின் ஓசைகள், வார்த்தைகளின் வலி தெரியாமல், பொருள் வெளி, நீட்சி பெறும் சொற்கள் ஆகிய தொகுதிகளையும், சுயமி எனும் பெயரில் மெல்லிசைப் பாடல் இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார். மேலும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்துக்கும் மொழிபெயர்த்து அசல்வெசி அப்பி என்ற சிறுகதைத் தொகுதிக்காக ஐந்து சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்திருக்கிறார். ஆய்வு, சிறுகதை, கவிதை, கட்டுரை, பாடல், சிறுவர் இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் பல பட்டங்களும், பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

பதுளை பாஹிராவின் மனச்சாட்சி, ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பரிதாப நிலை, பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியின் பெருமைகொள், புத்தளம் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ்வின் மௌனத்தின் சபதம், மருதூர் ஜமால்தீனின் உயிரை நோட்டமிடு, மொரட்டுவ கா. தவபாலனின் பரம ரகசியம், கெக்கிராவ சாஜஹானின் தாய்க்கு ஒரு மடல் ஆகிய கவிதைகள் பூங்காவனத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் எஸ்.ஆர். பாலசத்திரன், சூசை எட்வேட், கிண்ணியா எம்.எம். அலி, ஆகியோரின் சிறுகதைகளும் எஸ். முத்துமீரானின் உருவகக் கதையும் இந்த இதழை அலங்கரித்துள்ளன.

காதலை உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கக் கூடாது. சந்தர்ப்பம் வரும்போது சொல்லிவிட வேண்டும் என்ற உண்மையை சொல்லியிருக்கிறது எஸ்.ஆர் பாலசந்திரனின் உறங்கும் உண்மைகள் என்ற கதை. அதேபோன்று சூசை எட்வேட்டின் இவன் நல்ல சேவகன் என்ற சிறுகதை ஐயறிவு ஜீவனான நாயின் பக்குவத்தை எடுத்துக்காட்டுகின்றது. கிண்ணியா எம்.எம். அலி அக்பரின் மறக்க முடியாதவர்கள் குறுங்கதையும், எஸ். முத்துமீரானின் ஈசான் சிரிக்கிறான் என்ற உருவகக் கதையும் இடம்பெற்றுள்ளன.
இலக்கிய அனுபவ அலசலில் கவிஞர் ஏ. இக்பால், பேராசிரியர் க. கைலாசபதி வானொலி தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்காக வழங்கிய பேட்டிக்கான கேள்வியையும் பதிலையும் தந்திருக்கின்றார். தலைப்பு அறிஞர் சித்தி லெப்பை பற்றியது.  

நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் தனது கட்டுரையில் மறைந்த இந்திய விஞ்ஞானி குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களைத் தந்திருக்கின்றார். அப்துல் கலாமின் மரணம், அவர் பெற்ற விருதுகள், பெற்ற பட்டங்கள், எழுதிய நூல்கள், மறைவின் பின்னரான நிகழ்வுகள், அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் என பலதரப்பட்ட தகவல்களை பல தலைப்புகளின் கீழ் முக்கியமான நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக நிரல்படுத்தியிருக்கின்றார்.

மற்றும் பூங்காவனம் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள், 12 நூல்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கா. தவபாவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நூல் அறிமுக விழாவில் பூங்காவனம் 22 ஆவது இதழ் அறிமுகப்பட்டுத்தப்பட்ட செய்தியும் காரணப்படுகின்றது. மொத்தத்தில் ஏனைய பூங்காவனம் இதழ்களைப் போலவே இவ்விதழும் சிறப்புற்று விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்
தொடர்புகளுக்கு - 0775009222                                                                                                       மின்னஞ்சல் - poetrimza@gmail.com

பூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை

பூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

பூங்காவனத்தின் 22 ஆவது இதழ் சுற்றுலாத் தினத்தை நினைவுபடுத்துவதோடு ஆசிரியரின் கருத்துக்களுடன் திறந்து கொள்கிறது. 1970 ஆம் ஆண்டு ஐ.நா. சபை செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதியை சுற்றுலா தினமாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து வருடாந்தம் அத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பாரிய வெளிநாட்டுச் செலாவணியை ஒவ்வொரு நாட்டுக்கும் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை மூலம் மனம் களிப்படைந்து உடல் புத்துயிர் பெறுவது போலவே ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப் பார்வையிடும் போது அப்பகுதியின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாய நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல பாடசாலை மாணவர்களின் சுற்றுலாவின் மூலம் மாணவர்களுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடிகிறது என்ற கருத்தினை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். அதேபோல ''சிரமங்கள் உங்கள் வாழ்வை அழிக்க வருவதில்லை. உங்கள் சக்தியைப் பரிசோதிக்கவே வருகின்றன. அந்தச் சிரமங்கள் உங்களை நெருங்க சிரமப்படும் அளவுக்கு உழையுங்கள்'' என்ற மறைந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமின் கூற்றினை எடுத்துக் காட்டி நமக்குக் கிடைத்திருக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுரை பகன்றுள்ளார்.

வழமைபோன்று பூங்காவினுள்ளே நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள் என்பவற்றோடு, நூல் மதிப்புரை, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

கா. தவபாலன், சூசை எட்வேட், பதுளை பாஹிரா, உ. நிசார், வெலிப்பண்ணை அத்தாஸ், குறிஞ்சி நிலா, ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, மருதூர் ஜமால்தீன், பூவெலிகட சப்ரி எம். ஷாஃபி ஆகியோரது கவிதைகளும், சஞ்சிகையில் இடம்பெற்றிருக்கக் கூடிய இரண்டு சிறுகதைகளையும் கினியம இக்ராம் தாஹாவும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் எழுதியுள்ளார்கள்.

திருமதி சுகிலா ஞானராசாவின் முன்னட்டைப் படத்தைத் தாங்கி வந்துள்ள இந்த இதழில் அவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான இவர், ''சின்னச் சிட்டுக் குருவி'' என்ற சிறுவர் இலக்கிய நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்தி சபையினால் 2010 ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ஞானராசா சிறந்ததொரு எழுத்தாளரும், கவிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி சுகிலாவின் எழுத்துப் பணிக்கு கணவரின் ஒத்தாசை எப்பொழுதும் கிடைத்தே வந்திருக்கிறது. பட்டதாரி ஆசிரியையான இவருக்கு கடமை நேரம் போக ஏனைய நேரத்தை வாசிப்பிலும் எழுதுவதிலும் செலவிடுவதாகச் சொல்லுகிறார்.

அத்துடன் இச்சஞ்சிகையில் கா. தவபாலனுடைய நேர்காணலொன்றையும் காண முடிகிறது. திரு. கா. தவபாலன் 2009 ஆம் ஆண்டு ஞானம் சஞ்சிகையில் எழுதிய சிறுகதையின் மூலமாகவே எழுத்துலகை எட்டிப் பார்க்கிறார். இவர் பூங்காவனம், ஜீவநதி, தாயக ஒலி, மல்லிகை, நீங்களும் எழுதலாம், சுவைத்திரள், செங்கதிர் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வருகின்றார். கா. தவபாலன் அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

இதழில் இடம்பெற்றிருக்கும் இரண்டு சிறகதைகளையும் கினியம இக்ராம் தாஹாவும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் தந்திருக்கிறார்கள். கினியம இக்ராம் ''தீர்வு'' என்ற தனது சிறுகதை மூலமாக கஷ்டத்துக்காக வெளிநாடு செல்லும் சில இளம் பெண்கள் பொய்த் தகவல்களைக் கொடுத்து வயதையும், பெயரையும் மாற்றி வெளிநாட்டுக் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாகப் பெறப்பட்ட கடவுச் சீட்டின் மூலமாக வெளிநாடு சென்று கடைசியில் மரண தண்டனை அளிக்கப்பட்ட ரிஸானா நபீக் போன்றவர்கள் உருவாகாமல் இருப்பதற்காக வெளிநாட்டு முகவர் நிலையங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், வசதி குறைந்தவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

''கிளை இழந்த விருட்சங்கள்'' என்ற ரிஸ்னாவின் சிறுகதை உறவுகள் இருந்தும் இறுதியில் ஒருவருமற்ற அநாதையாக ஆகிப்போன ஒரு தாயின் வலியைக் கூறி நிற்கிறது. தான் வளர்த்த பிள்ளை தனது மனைவியின் பேச்சுக்களை நம்பி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தது பெற்ற தாய்க்கு பொறுக்க முடியாத இதய வலியை ஏற்படுத்தி வைக்கிறது. பெற்றோர்களை இறுதிக் காலத்தில் நல்லபடியாக காப்பாற்றுவதுதான் ஒவ்வொரு பிள்ளையினதும் கடமையாகும். என்றாலும் இன்றைய காலத்தில் தாயையும் தகப்பனையும் மதிக்காத பிள்ளைகளைத்தான் இன்றைய சமூகத்தில் காண முடிகிறது.

மேலும் எஸ்.ஆர். பாலசந்திரனின் குறுங்கதைகள் இரண்டு இடம்பெற்றிருக்கிறது. ''பாவபலன்'' என்ற குறுங்கதை ஒருவருக்குச் செய்யும் கெடுதியானது முடிவில் தன்னையே வந்து தாக்கும் என்பதை விளக்குகிறது. ''எதிர்பாரரதது'' என்ற சிறுகதை வேலியே பயிரை மேய்வதைப் போல குற்றம் செய்பவர்கள் பொது மக்களாகவே அல்லாமல் பொலீஸ் உத்தியோகத்தரே குற்றமிழைத்து கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் நிலையை எடுத்துக் காட்டகிறது. குற்றங்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சட்டத்தின் பிடியில் சிக்கியதன்பின்னால் எல்லோரும் ஒரே சமன் என்பதைப் போல கந்தசாமி ஐயாவும் ஏனைய குற்றவாளிகளுடன் ஒருவராக கம்பிக் கூட்டுக்குள் காணப்பட்டார். காரணம் அவர் வேலைக்காரனை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இலக்கிய அனுபவ அலசல் அம்சத்தில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தன்னைக் கவர்ந்தவர்கள் பட்டியலில் பாடகர் நாகூர் ஹனீபா, எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒளிபரப்பாளர் இஸட்.எல்.எம். முஹம்மத் என்ற மூன்று துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் பற்றி எழுத எண்ணி முதலில் பாடகர் நாகூர் ஈ.எம். ஹனீபா பற்றிய சில குறிப்புக்களைத் தந்திருக்கிறார். தனது மாணாக்கருக்கு ஒரு துறையைப் பற்றி விளக்குவதற்காக நாகூர் ஈ.எம். ஹனீபாவைப் பற்றிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்.

நிலாக்குயில் மதிப்பிட்டுள்ள நூல் மதிப்பீட்டில் கிழக்கிலங்கை எழுத்தாளரான ஜெனீரா கைருல் அமானின் ''மழலையர் மாருதம்'' நூலைப் பற்றிய கண்ணோட்டத்தைச் செலுத்தியிருக்கிறார். ஜெனீரா கைருல் அமான் ஓர் ஆசிரியராக இருப்பதால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஏற்ற விதத்தில் சிறுவர் இலக்கியம் படைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறுவர் பாடல், சின்னக் குயில் பாட்டு, மிதுஹாவின் நந்தவனம், கட்டுரை எழுதுவோம், முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் என்பன பாடசாலைப் பிள்ளைகளுக்காகவே படைக்கப்பட்ட சிறுவர் நூல்கள் என இனங்கான முடிகிறது. இவர் பிரியமான சிநேகிதி என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

எஸ். முத்துமீரானின் உருவகக் கதைகள் மூலம் எது எது நடக்க வேண்டுமோ அது அது அந்ந அந்த நேரத்தில் அணுபிசகாமல் நடக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். படைத்த இறைவனுக்கும் படைக்கப்பட்ட உயிருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் நுளம்பின் சீவன் ஆண்டவன் சந்நிதானத்தில் நிற்கிறது.

இதழில் உ. நிசார் அவர்களின் பெண் என்ற கவிதை பெண்ணின் பெருமையைச் சொல்லுவதாக உள்ளது. அதே போன்று மக்களின் ஏக்கம் தீரவில்லை, வீதிகளில் விசர் நாய்கள், கருத்துச் சுரங்கம், நாடோடியின் நாட்குறிப்புக்கள், மரணவலி, நிரந்தரம், அல்லாஹ்வை நினைத்து, சிந்தித்து உணர் போன்ற தலைப்பில் அமைந்த கவிதைகளுடன் மறைந்த எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய இரங்கல் கவிதையை வெலிப்பண்ணை அத்தாஸ் அவர்களும் எழுதியுள்ளார்கள். அத்துடன் குறும்பாக்கள் சிலவற்றை மருதூர் ஜமால்தீன் எழுதியுள்ளார்.

இவைதவிர பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், நூலகப் பூங்காவில் பதினேழு நூல்களுக்கான விபரக் குறிப்புக்களும் காணப்படுகிறது. அத்தோடு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதின் அறுவடைகள் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. குறையேதுமில்லாத நிறைவான ஓர் இதழ். ஆசிரியரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poetrimza@gmail.com
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 21 ஆவது இதழ் பற்றிய ஒரு கணிப்பீடு

பூங்காவனம் 21 ஆவது இதழ் பற்றிய ஒரு கணிப்பீடு

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை

பூங்காவனம் தொடங்கிய காலம் முதல் இன்று 21 ஆவது இதழ் வெளிவந்தது வரை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் ஆசிரியர். பல தடைகளுக்கு மத்தியில் பலரது இகழ்வுகளுக்கு உட்பட்டு மனம் சோர்ந்த நிலையிலும் தைரியம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு விடாப்பிடியாக முயற்சி செய்ததால் 21 ஆவது இதழை அடைய முடிந்தது என்பதை ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பதானது தன்னம்பிக்கை எப்போதும் தோற்றதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. தனது ஆசிரியர் தலையங்கத்தில் மேற்படி விடயங்களுடன் அன்னையர் தினத்தையும் நினைவுபடுத்தி இருப்பது மிக்க மகிழ்ச்சியானது.

பூங்காவனத்தின் உள்ளே படைப்பாளி திருமதி. ஜெனீரா ஹைருல் அமானைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். அத்தோடு ஒன்பது கவிதைகள், மூன்று சிறுகதைகள், நான்கு கட்டுரைகள், நூல் மதிப்புரை, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா என்பன இடம்பெற்றுள்ளன.

கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட படைப்பாளி திருமதி ஜெனீரா ஹைருல் அமான் பூங்காவனம் 21 ஆவது இதழின் முன் அட்டையை அலங்கரிக்கிறார். ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஈ.எச்.எம். தௌபீக் - அபீபா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான இவர், ஓர் ஆசிரியையாவார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று அங்கேயே ஆசிரியையாகவும் கடமையாற்றுகிறார். மூன்று ஆண் பிள்ளைகளுக்கும், ஒரு பெண் பிள்ளைக்கும் தாயான இவர் ஐந்து சகோதர சகோதரியினதும் சிரேஷ்ட சகோதரியாவார். மர்ஹூம் கவிஞர் அண்ணல், கவிஞர் கஹ்ஹார், கவிஞர் கிண்ணியா அமீர் அலி போன்றோர் இவரது குடும்பத்தினராக இருப்பதால் குடும்பப் பின்னணி இவரது எழுத்துலகப் பிரவேசத்துக்குக் காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கலாநிதி கே.எம். இக்பால், உபைதுல்லாஹ், அதிபர் அஷ்ரபா நூர்தீன் போன்ற கல்விமான்கள் குடும்பத்தில் பிறந்ததென்றால் சும்மாவா கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவிபாடுமல்லவா?

இவர் சினேகிதி என்ற சிறுகதைத் தொகுதியையும், பாலர் பாடல், சின்னக்குயில் பாட்டு, சிறுவர் கதைகள், சிறுவர் கானங்கள், மழலையர் மாருதம் என்ற வகையில் ஏழு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். சினேகிதி என்ற சிறுகதைத் தொகுதியை விடுத்து ஏனையவை யாவும் சிறுவர் நூல்கள். இவர் தன் பாடத்துடன் தொடர்புடையதாக சிறுவர்களுக்கான நூல்களை எழுதியுள்ளார். இதன் மூலம் சிறுவர்களது கல்விக்கான அதிக பங்களிப்பையும் வழங்கியுள்ளார். இதன் காரணமாக பாடசாலை மட்டத்தில் வருகின்ற போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவது இலகுவாக அமைந்து விடுகிறது. போட்டிகளில் பங்குபற்றும் மாணவ - மாணவிகள் பிரதேச, மாவட்ட, மாகாண, ஆகிய இலங்கை ரீதியிலான இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து ஊக்குவித்தும் வருகிறார். அன்பான கணவர் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஒருபோதும் குறுக்கே நின்றது கிடையாது.

சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டவராக இருந்ததனால் அவரது தந்தையின் பங்களிப்பும் அதிகமாக காணப்பட்டதோடு பத்திரிகைகளுக்கு எழுதுமாறு ஊக்கமளித்து வந்ததனால் தினகரன் பத்திரிகைக்கு எனது பொழுதுபோக்கு என்ற தலயங்கத்தில் கட்டுரை அனுப்பி வைத்திருக்கிறார். அது மறுவாரமே பிரசுரமானதால் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக ஏற்பட்டதால் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் ஆக்கங்களை எழுதி வந்திருக்கிறார். சகோதரர் கிண்ணியா அமீர் அலி புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுத்ததோடு, கலைவாதி கலீல், எம்.பி.எம். நிஸ்வான், அருளானந்தம் போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்புமே அவர் இன்று ஓர் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெறக் காரணமாயிருந்திருக்கிறது.

இவர் சிறுவர் இலக்கியத்துக்கு தனது கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். வளர்ந்தோர் இலக்கியத்தைவிட சிறுவர் இலக்கியம் படைப்பது மிகவும் சிரமமானதும், வித்தியாசமானதும் என இவர் குறிப்பிடுகிறார். ஏனெனில் சிறுவர் இலக்கியம் படைப்பவர்கள் தாமும் சிறுவர்களாக மாறி சிறுவர்களது உள்ளத்து உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பவே ஆக்கங்களைப் படைக்கவேண்டும் என்று இவர் சிறுவர் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேநேரம் அவர் சிறுவர் இலக்கியம் படைக்கும் காலத்தைவிட இப்பொழுது அதிகளவானவர்கள் சிறுவர் இலக்கியம் படைப்பதில் நாட்டம் கொண்டுள்ளனர். இது சிறுவர் இலக்கியப் போக்கின் வளர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். திறக்கப்படாத சாளரங்கள், விடுதலை வேண்டும், பசிவெக்கை, கருத்துச் சுரங்கம், ஈறலைப் போக்குமா?, மனிதா வாழ்ந்திடு, நாளைய மலையகம், அறிவு, நானும் எனது கவிதைகளும் என்ற தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கவிதைகளை முறையே பதுளை பாஹிரா, ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, புதுக்குடியிருப்பு அலெக்ஸ் பரந்தாமன், சூசை எட்வேட், சட்டத்தரணி எஸ். முத்தமீரான், மருதூர் ஜமால்தீன், குறிஞ்சி தென்றல், ரோஷான் ஏ. ஜிப்ரி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

கவிஞர் ஏ. இக்பால் தனது இலக்கிய அனுபவ அலசலில் இலக்கிய நண்பர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்களையும், 1957ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான இலக்கிய நண்பர்களின் சந்திப்புக்களையும், இக்காலத்தில் நடத்த இலக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் வாசகர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) இவ்விதழில் சங்க இலக்கியங்களில் பவணி வரும் விலங்கினங்களைப் பற்றி தனது கட்டுரையில் சிறப்பாக எடுத்து விளக்கியிருக்கிறார். வன விலங்கினங்களும், வீட்டு மிருகங்களும் சங்க இலக்கியங்களில் எவ்வாறு இடம் பிடித்திருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அத்தோடு கடல் வாழ் மீனினங்களைப் பற்றியும் எடுத்துக் காட்டியிருக்கிறார். தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள அவற்றின் அன்றைய பாவினைப் பெயர்களையும் தந்திருக்கிறார். அதேவேளை விலங்கினங்கள் தெய்வங்களின் வாகனங்களாக அமைந்தது பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். சிவனுக்கு நந்தி, விநாயகருக்கு எலி, ஐயப்பனுக்கு குதிரை, விஷ்ணுவுக்கு பாம்பு, அக்னிக்கு ஆட்டுக்கடா, வயிரவருக்கு நாய், துர்க்காவுக்கு புலி, பார்வதிக்கு சிங்கம், இந்திரனுக்கு யானை, வாயுபகவானுக்கு மான், இயமனுக்கு எருமை, காளிக்கு கழுதை, வருணனுக்கு ஆமை, சுக்கிரனுக்கு முதலை என ஒவ்வொரு கடவுளருக்கும் மிருகங்கள் வாகனங்களாகப் பயன்பட்டன என்பதைப் பற்றி விளக்கியிருப்பது ஏனைய சமயத்தவர்களும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

நூல் மதிப்பீட்டுப் பக்கத்தில் சட்டத்தரணி எஸ். முத்துமீரானின் அண்ணல் வருவானா? கவிதைத் தொகுதி பற்றிய மதிப்பீட்டை நிலாக்குயில் தந்திருக்கிறார். மூத்த படைப்பாளியான எஸ். முத்துமீரான் அவர்கள் 200க்கும் மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100க்கும் மேற்பட்ட உருவகக் கதைகளையும், 250க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகளையும் செய்திருக்கும் இந்த பன்முகப் படைப்பாளி பற்றிய விபரங்களையும் இந்த நூல் மதிப்பீட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்கள் கிராமியப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்களின் தனித்துவத்தைப் பற்றி பல தாலாட்டுப் பாடல்களை உதாரணமாக எடுத்து விளக்கியுள்ளார். மனிதனுக்கு வரும் கோபத்தை அடக்கியாள்பவனே உண்மையான மனிதனாவான். அவன் கோபத்தைக் கொண்டாடுபவனாக இருந்தால் முடிவில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும் என்பதை விளக்குவதாக பூவெலிகடை சப்ரி எம். சாபி தந்திருக்கும் முனி ஒரு பிணி என்ற ஆக்கம் அமைந்து உள்ளது.

இதழில் இடம்பெற்றுள்ள மூன்று சிறுகதைகளில் கினியம இக்ராம் தாஹா எழுதியுள்ள தர்மம் என்ற சிறுகதை முன்னாளில் இட்ட விதை பின்னாளில் விளைந்து பலன் தருவதை விளக்குகிறது. மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் எளிமையை அடைகிறான். ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்களால்தான் தாராளமாக உதவ முடிகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

அதேபோன்று நேர்மை என்ற எஸ்.ஆர். பாலச்சந்திரனின் சிறுகதையானது நேர்மை தவறாது ஒரு தந்தையின் நேர்மை, தன் மகளின் கணவரைக் காப்பாற்றுவதற்காக தான் செய்யாத குற்றம் ஒன்றை, தான் செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டு வேண்டுமென்றே தண்டனையை வாங்கிப் பெற்றுக்கொண்ட நல்லகுணத்தைக் காட்டி நினகின்றது. இறுதியாக ஹட்டன் தே. நிரோஷினியின் இயேசுவைக் கண்டேன் என்ற சிறுகதை அடுத்த மதத்தைச் சேர்ந்த படயல் ஒன்றைச் சாப்பிட்டதற்காக இயேசுவிடம் மன்னிப்புக் கேட்க திருத்தந்தையை நாடியபொழுது இயேசு பிறரிடம் அன்பாக இருக்கவும், ஒரே ஆண்டவரை நேசிக்கவும் கூறினாரே தவிர மற்ற மதத்தவரின் மனம் நோகும்படி நடக்கக் கூறவில்லை எனக் கூறி ஜோன் என்ற சிறுவனை ஆசிர்வதிக்கிறார். இதனையே அடுத்த மதத்தவரை மதித்து நடக்கவேண்டும் என்று இஸ்லாமும் வலியுறுத்துகிறது என்பதை இங்கு குறிப்பிடுவது சிறந்தது.

இலங்கை கம்பன் கழகம் 2015ம் ஆண்டு தேசிய ரீதியில் நடத்திய அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற பூங்காவனம் துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா சுகாதார ராஜாங்க அமைச்சர் கௌரவ. எம்.ரீ ஹஸன் அலி அவர்களிடம் இருந்து தங்கப் பதக்கம் பெறும் புகைப்படமும், நவமணி ஆசிரியபீட ஜனாப். எம்.கே.எம். முனாஸ் 2015ம் ஆண்டு மன்னார் துரையம்மா அன்பகம் நடத்திய சான்றோர் கௌரவிப்பு விழாவில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படும் புகைப்படமும் இதழை அலங்கரிக்கின்றன.

மேலும் வழமைபோன்று பூங்காவனம் பற்றிய வாசகர்களது கருத்துக்களும், பன்னிரண்டு நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய தகவல்களும் அடங்கிய முழுமையான சகல விடயங்களும் உள்ளடக்கிய சஞ்சிகையாக பூங்காவனம் திகழ்கிறது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி இலக்கம் - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை

மாவனல்லை – எம்.எம். மன்ஸுர்

பூங்காவனத்தின் 20 ஆவது இதழ் பன்முகப்படைப்பாளி திருமதி. தாமரைச் செல்வியின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. பூங்காவனத்தின் உள்ளே வாசகர்களை ஒரு நிமிடம் தாமதிக்கச் செய்து அது கடந்து வந்த பாதையைச் சற்று மனதில் நிறுத்திப் பார்த்துவிட்டு மேலே தொடரச் சொல்வது போல ஆசிரியர் குழுவினது கருத்துக்கள் அமைந்துள்ளன.

மலைபோல குவிந்து கிடக்கும் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் அதன் வளர்ச்சிப் போக்கு தங்குதடையின்றி சென்றுகொண்டிருப்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது. கற்களும், முற்களும் நிரம்பிக் கிடந்த இலக்கிய வழி நெடுகிலும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு சொல்லம்புகளாலும், மற்றும் பல்வேறு வலிகளாலும் சிறுமைப்படுத்தப்பட்ட போதெல்லாம் முன்வைத்த காலை பின் வைக்காமல் முன்னேறிச் சென்று இன்று இருபதாவது இதழை வெளியிடும் அளவுக்கு துணிவு பெற்றிருக்கிறார்கள். அதற்கு வாசகர்களும், விளம்பரதாரர்களும்தான் காரணம் என்று இருபாலாரையும் பாராட்டியிருக்கிறது ஆசிரியர் குழு.

அட்டைப்பட அதிதி திருமதி. தாமரைச் செல்வி தனது நேர்காணலில் பல தகவல்களையும், கருத்துக்களையும் தந்திருக்கிறார். திருமதி. தாமரைச் செல்வி 1953 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனில் உள்ள குமரபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கணவர் திரு. வரணியூர் சி. கந்தசாமி அவர்களும் ஓர் எழுத்தாளர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரும் 70 களில் வீரகேசரியிலும், பல பத்திரிகைகளிலும் சிறுகதைகளை எழுதி வந்திருக்கிறார்.

திருமதி. தாமரைச் செல்வி அக்காலத்தில் வானொலி ஆக்கங்கள் எழுதியதன் மூலம் எழுத்தாளராக வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டதால் ஓர் எழுத்தாளராக உருவெடுத்திருக்கிறார். அப்போது வீரகேசரி நிருவாகியாக இருந்த கே.எஸ். பாலசந்திரனின் அறிமுகம் கிடைத்ததால் பெறப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப எழுதத் தொடங்கியதால் பல நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகள், கவிதைகள் என பல்முகம் கொண்ட படைப்பாளியாக அவர் எழுத்துப் பணி செய்ய முடிந்தது என்பதை அறிய முடிகிறது.

வடபுலத்தில் நிலவிய யுத்தத்தினால் ஏற்பட்ட வலிகளை இன்னும் மறக்க முடியாத தாமரைச் செல்வி யுத்தத்துக்குப் பின்னரான வாழ்வு பற்றிய உண்மைகளை இன்றைய இலக்கியங்களில் காணமுடிகிறது என்பதையும் தனது கதைகளில் அவற்றைப் பிரதிபலிக்கச் செய்வதாகவும் கூறியிருக்கிறார். இவர் ஏனைய தனது இலக்கியப் பங்களிப்புகளோடு நாவல், சிறுகதை ஆகிய இரு துறைகளையுமே ஈடுபாடாக எடுத்துக் கொண்டுள்ளார். சி. சிவசேகரம், ஏ.ஜே. கணகரட்ணா, எஸ். ராஜசிங்கம், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் இவரது ஐந்து சிறுகதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். மூன்று சிறுகதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மொழிபெயர்ப்புக்களின் ஊடாக தமது சமூகத்தின் வலிகளை வாசகர் மத்தியில் கொண்டு செல்ல முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் வரைந்த ஓவியங்கள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும், சுடர்ஒளி, குங்குமம் ஆகிய சஞ்சிகைகளலும் வெளிவந்திருக்கின்றன. குடும்பப் பொறுப்புகள் அதிகமாகக் காணப்படுவதனால் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளுடன் ஒப்பிடுகையில் தரமாக இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1977 – 1998 ஆம் ஆண்டு முதல் சுமைகள் விண்ணில் அல்ல, விடிவெள்ளி, தாகம் போன்ற நாவல்களும் வேள்வித்தீ குறுநாவலும், ஒரு மழைக்கால இரவு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி சிறுகதைத் தொகுதிகளும், பச்சை வயல் கனவு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சொந்த நிறுவனமான சுப்ரம் பிரசுராலயம் மூலமாக இரு நூல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இப்படியான இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வரும் திருமதி. தாமரைச் செல்வி இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணும் போது அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேபோன்று அவரது சிறுகதைகள், நாவல்கள் அநேகம் விருது பெற்றவைகளாகக் காணப்படுகின்றன.

மேலும் பூங்காவனத்தில் பள்ளிக்கூடம், நாளைய தூண்கள், மூட நம்பிக்கைகள், இதுதான் மாபிள் பீச், முத்துச் சரம், புன்னகை முலாம், அழைப்பு, புறப்படு ஆகிய கவிதைகள் காணப்படுகின்றன. இவற்றை பதுளை பாஹிரா, அலெக்ஸ் பரந்தாமன், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி, கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், சூசை எட்வேட், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் எழுதியுள்ளார். வழமை போன்று கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இலக்கிய அனுபவ அலசலில் கவிதை பற்றிய சில முக்கியமான குறிப்புகளைத் தந்திருக்கிறார். அதிலும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் தமிழாசிரியர்களுக்குப் பொருத்தமான அறிவுரைகளைத் தந்திருக்கிறார். அவற்றின் மூலம் சிறந்த கவிஞர்களையும், சிறந்த கவிதைகளையும் உருவாக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த இதழில் மூன்று சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இக்ராம் தாஹா எழுதியுள்ள திருப்பம் என்ற சிறுகதை காதலித்து திருமணம் முடித்தாலும் காதலியை இறுதிவரையில் கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்பதனையும், என்னதான் மனக் கஷ்டங்கள் வந்தாலும் வந்தவளை வதை பண்ணக்கூடாது என்பதையும் சிறப்பாக சித்தரிக்கிறது.

பெண் எனும் புயல் என்ற சிறுகதையை எஸ்.ஆர். பாலசந்திரன் எழுதியுள்ளார். இது ஆழம் தெரியாமல் காலைவிடும் காளையர்களுக்கு நல்ல பாடம் புகட்டுகிறது. அதேபோன்று முயற்சி திருவினையானது என்ற சிறுகதை, முயற்சியுள்ளோருக்கு இறைவன் அருள்புரிகிறான் என்பதனையும் அந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வருபவர்களுக்கு தாராள மனமும் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

பேராதனை கா. தவபாலன் 1995 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய உள்நாட்டு கலவரத்தில் யாழ் குடாநாட்டைவிட்டு வெளியேறிய அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சங்கத்தமிழ் இலக்கியமும், அதன் வருங்காலமும் எனும் தலைப்பில் லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் எழுதியுள்ள கட்டுரையில் முச்சங்க காலத்து இலக்கிய வகைகளைப் பற்றியும், அவை எவ்வெந்தக் காலங்களுக்கு உரியவை என்பதைப் பற்றியும் குறிப்புகளுடன் அவற்றின் அட்டவனையையும் தந்திருக்கிறார். புலம்பெயர்ந்தவர்களின் மூலமாக இலக்கியம் படைக்கப்படுகின்ற பொழுது எதிர்காலத்தில் தமிழ் இனிச்சாகாது என்ற உண்மையையும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தலைப்பில் லெனின் மதிவானம் அவர்கள் இலக்கியப் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூலை மதிப்பீடு செய்துள்ளார். மேலும் இதழில் பூங்காவனம் பற்றிய கருத்துக்களும், 16 நூல்களுக்கான அறிமுகக் குறிப்புகளும் காணப்படுகின்றன. ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய அவளுக்குத் தெரியாத ரகசியம் என்ற நாவல் வெளியீட்டின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களும இடம்பெற்று பூங்காவனம் மேலும் அழகுரக் காணப்படுகிறது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி இலக்கம் - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை

கலாபூஷணம் மாவனெல்ல எம்.எம். மன்ஸுர்

பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த  இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி ஷவாழ்க்கை வாழ்வதற்கே| என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

பூங்காவனத்தின் உள்ளே ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, றாபி எஸ். மப்றாஸ், வஸீலா ஷரீப், பதுளை பாஹிரா, மிஹிந்தலை ஏ. பாரிஸ், எம்.எஸ்.எம். சப்ரி, ஷெல்லிதாசன், எச்.எப். ரிஸ்னா ஆகியோரது ஒன்பது கவிதைகளும் தே. நிரோஷனி, நிலாக்குயில், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரது மூன்று சிறுகதைகளும், கவிஞர் ஏ. இக்பால், பி.ரி. அஸீஸ், கீதா கணேஷ் ஆகியோரது கட்டுரைகளும் காவியன், பீ. ஷைலஜா ஆகியோரது நூல் மதிப்புரைகளுடன் வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்பனவும் இடம்பெற்றுள்ளன.

பழைய மாணவிகளின் சங்கத் தலைவியும், தற்போதைய போஷகியும், முன்னாள் ஆசிரியையுமான பொற்கலசம் நூலாசிரியர் ஹாஜியானி திருமதி. ஆயிஷா இப்றாஹீம் அவர்களை ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு பல தகவல்களை வாசகர்களுக்கு அறியப்படுத்தியிருக்கின்றார்.

மாவனல்லை ஹிங்குளோயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் 1963 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியை ஆரம்பித்து 2002 ஆம் ஆண்டில், தான் ஓய்வு பெறும்வரை சமூகத்துக்கும், தான் கடமையாற்றிய பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார். இவர் மாவனல்லை கிருங்கதெனிய அந்நூர் வித்தியாலயம், கனேதன்னை முஸ்லிம் வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்தார். இறுதியாக சேவையாற்றிய தமது ஊரான ஹிங்குளோயாவின் அகில இலங்கையிலும் புகழ்பெற்ற மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடாலையில் சேவையாற்றும்போது பத்து மாணவிகளை சேர்த்துக்கொண்டு ஷஷபழைய மாணவிகள் சங்கம்' என்ற பெயரில் ஆரம்பித்த சங்கத்தில் தற்போது பிரபல அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியைகள், பல்வேறு அமைப்புக்களின் தலைமைத்தவ உறுப்பினர்கள் என பல அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விடயம்.

பஸீஹா, பரீஹா ருஷ்தி, பஹ்மி, பஸ்லி ஆகிய நான்கு பிள்ளைகளின் தாயாக விளங்கும் இவரது தங்கைகள் நால்வரில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாகவும், ஏனையவர்கள் கலை, விஞ்ஞானப் பிரிவுகளில் தேறியவர்களாகவும் காணப்படுகின்றனர். இதில் பஸீஹா என்பவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறை விரிவுரையாளராக விளங்குகிறார்.

இத்தகைய கல்விக் குடும்பம் ஒன்றில் மூத்தவராக விளங்கும் திருமதி. ஆயிஷா இப்றாஹீம், சமூக சேவைப் பணிகள், பாடசாலைச் செயற்பாடுகளுக்கு மத்தியில் வாசிப்பில் ஆர்வம் காட்டி வருபவராகவும் காணப்படுகின்றார். தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு மறக்க முடியாத ஏதாவதொரு சேவையைச் செய்ய வேண்டும் என்று சிந்தித்ததால் விளைந்த பலன்தான் ஷபொற்கலசம்| என்ற ஊர் பற்றிய வரலாற்ற நூல். இதிலே ஊரின் தோற்றமும், வளர்ச்சியும், கல்வி கலாச்சார பொருளாதார முன்னெடுப்புக்கள் பற்றிய தரவுகள், ஊரில் சேவையாற்றிய அரச ஊழியர்கள் பற்றிய குறிப்புகள் என இன்னோரன்ன விடயதானங்களை உள்ளடக்கியதாக புகைப்படங்களுடன் மிகவும் அழகான முறையிலே எவரும் வைத்துப் பாதுகாக்க வேண்டிய ஆவணப் பொக்கிஷமாக பொற்கலசத்தைத் தந்திருக்கின்றார்.

இலக்கிய அனுபவங்ளை அலசி வரும் கவிஞர் ஏ. இக்பால் இவ்விதழிலும் பழைய படைப்புகளைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கின்றார். 1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி மனக்கண் என்ற நாவலை எழுதியதால் அதிலே ஆங்கில, தமிழ், சிங்கள, முஸ்லிம் வரலாற்றுக் கதைகளில் காணப்படும் கதாபாத்திரங்ககளின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார். அதேபோன்று மணிக்கொடிகால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்பில் அவர்களது ஆகர்ஷிப்பால் இலங்கையிலும் எழுத்தாளர்கள் சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாத சுந்தரம், சம்பந்தன், இலங்கையர்கோன், நா. சிவஞான சுந்தரம் போன்றோர் சிறந்த படைப்புகளாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

வாராந்தம் பத்து இலட்சம் இதழ்கள் விற்ற லண்டனில் இருந்து வெளிவந்த ஷடிட்பிட்ஸ்| என்ற பத்திரிகை 103 வருடங்களின் பின் 1984 ஆம் ஆண்டு நின்றுபோன தகவலையும், அதனைப் பின்பற்றி தினகரனில் உதவி ஆசிரியராகவிருந்த ஸெயினுல் ஹூசைன் துணுக்குகளைத் தந்த சுவாசியமான செய்தியையும் தந்திருக்கின்றார். அத்தோடு ஆர்.எம். நௌசாத்தின் தூது, தமிழ் நாட்டின் நடை ஏடு பற்றிய தகவல்கள், கர்நாடக தேசிய விருதுப் படமான ஷதபரானா கதா| மகாகவி மில்டன் பற்றிய தகவல்கள் யாவும் மிக மிக அரிதானவை.

திருமணம் முடித்தும் பிள்ளைச் செல்வம் இல்லாத வீடு பாழ் வீட்டை ஒத்தது. அந்த வீட்டுக்கு ஒளி பரவச் செய்ய வேண்டுமெனில் வேறு திருமணம் முடித்து பிள்ளைச் செல்வத்தைப் பெற முயற்சிக்க வேண்டும் அல்லது அநாதை இல்லத்திலிருந்து ஒரு ஒரு பிள்ளையை எடுத்து வளரக்க வேண்டும். அத்தகைய ஒரு சம்பவத்தை பின்னணியாகக்கொண்டே ஹட்டன் தே. நிரோஷனியின் உறவுகள் என்ற சிறுகதை விளக்குகின்றது.

நிலாக்குயில் தந்திருக்கும் பிஞ்சு மனம் என்ற சிறுகதை குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஒன்றுபோல் கவனிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிள்ளைகளின் மனதில் விரோதமும் குரோதமும் ஏற்படுகின்றது. இதனால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட அது காரணமாகிறது. ஏனெனில் ஒரு பிள்ளைக்கு ஒரு பொருளை வாங்கும்போது மற்றவர்களுக்கும் அதை வாங்க வேண்டும். அதேபோன்று பிள்ளைகளின் முன்னிலையில் ஒப்புவமை கூறக்கூடாது. தவறினால் நிம்மதியற்ற குடும்பமாக அது மாறிவிடும் என்பதை விளக்குகின்றது.

அதே போன்று என்னதான் பெரிய அதிகாரியாக இருந்தாலும் தவறுசெய்து மாட்டிக்கொண்டால் அத்தவறுக்கான தண்டனை பெற வேண்டும் என்பது நியதி. தனது பலத்தைக் காட்ட முயன்ற ராமநாதன் தனது தவறை மறைக்க சந்திரனைப் பயன்படுத்தி செய்த முயற்சி தோல்விலேயே முடிந்தது. முடிவில் தன் தவறை உணர்ந்த ராமநாதன், சந்திரன் செய்ததாகக் கருதப்படும் குற்றத்தை மன்னித்துவிடுகின்றார். சிங்கம் முயலாகின்றது என்பதற்கு எஸ்.ஆர். பாலசந்திரனின் சிறுகதை நல்லதொரு உதாரணமாகும்.

நூல் மதிப்பீடுகளை காவியனும், பீ. ஷைலஜாவும் தந்திருக்கின்றார்கள். நுணாவிலூர் கா. விசயரத்தினம் பல்வேறு பயன்களைத் தரும் பனைமரம் என்ற நூல் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து காவியன் தந்திருக்கின்றார். இது தவிர தடம் தொலைத்த தடயங்கள் கவிதைத் தொகுதிக்கான மதிப்பீட்டைத் தந்திருக்கும் ஷைலஜா தற்காலத்தில் இளம் கவிஞர்கள் காதலைச் சொல்லிச் சொல்லியே கனவு கண்டுகொண்டிருக்கும் காதல் பாடல்களைப் படைக்கின்றனர். அதைவிட கவிஞர் பிரகாசக்கவி இந்நூலில் சமுதாய நோக்குடைய கவிதைகளை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

கீதை கணேஷ் தந்துள்ள சிறுவர்களும் சிறுவர் இலக்கியமும் என்ற கட்டுரை சிறுவர்களின் மனிதப் பண்புகள் வளர்வதற்கான பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. வாழும் சூழல்,  வளர்க்கும் பெற்றோர், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள், கற்கும் நூல்கள் என பலதரப்பட்ட கூறுகளுடன் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் உதவுகின்றது. அவை சிறுவர்களுக்கு விளங்கும் வகையில் இலகு மொழியில் படைக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்திருக்கின்றார்.

உணர்வூட்டும் கிராமியச் சுவைகள் என்ற தலைப்பில் கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் சிறந்ததொரு கட்டுரையைத் தந்திருக்கின்றார். அத்தோடு வாசகர் கடிதங்களும், நூலகப் பூங்காவில் 18 நூல்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றிருக்கின்றமை சிறப்புக்குரியது.

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

Thursday, 15 December 2016

பூங்காவனம் 18 ஆவது இதழ் மீதான பார்வை

பூங்காவனம்  18 ஆவது இதழ் மீதான பார்வை

கலாபூஷணம் மாவனல்லை எம்.எம். மன்ஸுர்

காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் 18 ஆவது இதழ் கையில் கிடைத்தது. திருமதி சுகந்தி இராஜகுலேந்திராவின் முகப்புப் படத்தைத் தாங்கி அட்டைப்படம் வந்திருக்கிறது. உள்ளே நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை, நூல் விமர்சனம் என்பவற்றோடு வழமையான அம்சங்கள் இதழில் இடம்பிடித்திருக்கின்றன. இதில் நேர்காணல், மூன்று சிறுகதைகள், பதினொரு கவிதைகள், இரு கட்டுரைகள், நூல் மதிப்புரை, ஒரு குறுங்கதை என்பன காணப்படுகின்றன.

திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணலில் அவர், தனது வாழ்க்கை அனுபவங்களையும், கலை உலக ஈடுபாடுகளையும் விளக்கியிருக்கிறார். இவர், சட்டத் துறையைத் தேர்ந்து எடுத்துக் கொண்டதால் சட்டத் தரணியாக கடமையாற்றினாலும் எழுத்து ஈடுபாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். என்றாலும் அதற்கான கால நேரம் அதிக இடம் கொடுப்பதில்லை. திருமதி. இராஜகுலேந்திரா வடமாராட்சி பருத்தித் துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். பாடசாலை நாட்களில் நடனம், நாடகம், விளையாட்டு, பேச்சு, கவிதை என பல்துறை ஈடுபாடு கொண்டவராகக் காணப்படுகிறார். இரண்டு மகள்களுக்குத் தாயாக இருப்பதோடு, கணவர் உட்பட இவர்கள் நாள்வருமே இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களாகக் காணப்படுவது சிறப்புக்குரியது.

சிறுகதைகளை நோக்குவோமேயானால் கினியம இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள ஷமுயற்சி| என்ற சிறுகதை ஒரு மாணவனின் விடா முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. போட்டிச் சிறுகதை ஒன்றுக்காக அந்த மாணவன் மேற்கொள்ளும் முயற்சியினால் அகில இலங்கைப் போட்டியில் போட்டியிட்டு முதல் இடத்தைப் பெறக்கூடிய வாய்ப்பை அந்தச் சிறுகதை ஏற்படுத்தித் தருகிறது.

எஸ்.ஆர். பாலசந்திரன் எழுதியுள்ள ஷசபலம்| என்ற கதை மனித உணர்ச்சிகளுக்கு மனிதன் முதலிடம் கொடுப்பதனால் ஏற்படப் போகின்ற விபரீதத்தை விளக்குகிறது. வீட்டுப் பணிப் பெண்ணாக சிறு வயது முதல் ஈடுபட்டு வரும் சிறுமி பெரியவளாக வளர்ந்து வனப்பு மிகு கன்னிப் பெண்ணாக காட்சி தரும் போது வீட்டு எஜமானுக்கு விருந்தாகப் போகும் போது ஏற்படுகின்ற ஷசலனம்| மயிரிழையில் உயிர் தப்புகிறது.

கிண்ணியா ஜெனீரா ஹைருள் அமான் எழுதியுள்ள ஷமலரைத் தாவிச் செல்லும் வண்டு| என்ற கதை தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருப்பதைச் சாட்டாகக் கொண்டு வேறு ஒரு திருமணம் முடித்து குடித்தனம் செய்யும் கணவனின் கொடுமையைப்பற்றி விளக்குகிறது. எத்தனை எத்தனை குடும்பங்களில் இத்தகைய நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றனவோ?

சூசை எட்வேட்டின் ஷஇரந்துண்டு வாழ்வதில் சுகமுண்டு| என்ற சிறுகதை, அன்றாடம் பிச்சை எடுத்துப் பிழைக்கும் இரண்டு பெண் பிறவிகளைப் பற்றியது. அவர்கள் பிறவிப் பிச்சைக்காரர்கள் அல்லாவிட்டாலும் கூட சந்தர்ப்ப வசத்தால் பிச்சை எடுக்க நேரிடுகிறது. சிவப்பிரகாசம் - பத்மாவதித் தம்பதியினருக்கு இப்பிச்சைக்காரப் பெண்களால் புதிய அனுபவம் ஒன்று ஏற்படுகிறது. தம்மிடம் பிச்சை கேட்டு வந்த இரு பெண்களையும் பிச்சை எடுக்கவிடாது உழைத்து உண்பதற்கு புத்திமதி சொல்லி தனது தோட்டத்தில் வேலை செய்யும்படி பணித்துவிட்டு உண்ண உணவும், வேலைக்குக் கூலியும் கொடுத்துவிட்டு, உடுக்க உடையும் கொடுக்கத் தயாரான போது மீண்டும் வேலைக்கு வருவதாகக் கூறிச் சென்ற பெண்கள் அதன்பிறகு அங்கு வரவேயில்லை. பிச்சையே மேல் என மீண்டும் மேனி நோகாமல் உழைப்பதற்கு பிச்சைத் தொழிலுக்கே சென்றுவிடுகின்றனர். இச்செய்கையானது அட்டையைத் தூக்கி மெத்தையில் வைத்த கதையாகிவிட்டது.

வழமைபோன்று கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இவ்விதழிலும் இடம்பெற்றிருக்கிறது. இம்முறை கவிதை பற்றிய அரிய பல குறிப்புக்களை கவிஞர் ஏ. இக்பால் தந்திருக்கிறார். கவிதையின் ஆரம்பம், அதில் நாட்டுப் பாடல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய குறிப்புக்களை எல்லாம் சங்க கால கவிதை எடுத்துக் காட்டுகளோடு நன்றாகவே ஆராய்ந்து இருக்கிறார்.
 
மேலும் லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் குறந்தொகையில் இரு காட்சிகள் என்ற தலைப்பில் தனது கட்டுரையைத் தந்திருக்கிறார். குறுந்தொகைக் காட்சிகள் இரண்டில் முதலாவதைக் கூடலூர் கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல்களில் இருந்து 167 வது பாடலைத் தெரிவு செய்து காட்சியை விரித்திருக்கிறார். அதே போன்று காட்சி இரண்டுக்கு இரயனாரகப் பொருளில் இருந்து இரண்டாவது செய்யுளைத் தெரிவு செய்து அதற்கான காட்சியைத் தந்திருக்கிறார். இரண்டாவது எடுத்துக் கொள்ளப்பட்ட செய்யுளில் ஷஷகொங்குதேர் வாழ்க்கை|| என்ற செய்யுள் அரச சபையில் புலவர் நக்கீரரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட அருமையான செய்யுள். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்டவர். வாதிட்டு இறைவனுக்கே சவால் விடப்பட்ட அருமையான பாடல் காட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஜீவநதி வெளியீடான கவிஞர் ஷெல்லிதாசனின் ஷஷநகர வீதிகளில் நதிப் பிரவாகம்|| என்ற கவிதைத் தொகுதியைப் பற்றிய நூல் மதிப்பீட்டினை நிலாக்குயில் தந்திருக்கிறார். இவர் நூலில் இருந்து எடுத்துக் காட்டாக சில கவிதைகளைத் தந்து நூல் மதிப்பீட்டினைப் பெறுமதியாக்கி இருக்கிறார்.

இன்னும் பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், புதிதாக வெளிவருகின்ற நூல்களைப் பற்றிய விபரங்களோடு நூலகப் பூங்காவும் இடம் பிடித்திருக்கின்றன. மொத்தத்தில் இந்த சஞ்சிகை தரமான பூங்காவனமாகக் காட்சி தருகிறது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

பூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல

ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பாளராகத் திகழும் எழுத்தாளர் கெக்கிறாவ சுலைஹாவின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனத்தின் 17 ஆவது இதழ். ஜுன் மாதம் 26 ஆம் திகதியான சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை நினைவூட்டி, மதுவும் போதைப் பொருள்களும் இன்று மக்கள் மத்தியில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், மாணவர்கள் மத்தியில் அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆசிரியர் தனது ஆசிரியர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். இதழின் உள்ளே பதுளை பாஹிரா, ஷெல்லிதாசன், எல்.தேனுஷா, எம்.எம். அலி அக்பர், த. ஜெயசீலன், செ. ஞானராசா, வெலிப்பண்ணை அத்தாஸ், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோர்களது மூன்று சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.

இன்று ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருப்பவர்கள் ஒரு சில படைப்பாளிகளே. இதில் கெக்கிறாவ சுலைஹா அத்தகையதொரு சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றார். நேர்காணலில் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் படைப்பாளி கெக்கிறாவ ஸுலைஹாவை, ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு அவர் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளார். உண்மையில் கெக்கிறாவ ஸுலைஹாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தத் தகவல்கள் பெரிதும் உதவுகின்றன.

அநுராதபுர மாவட்டத்தில் கெக்கிறாவையில் பிறந்த சுலைஹா, கெக்கிறாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் கண்டி பெண்கள் உயர் கல்லூரியிலும், பேராதனை விஷேட ஆங்கில ஆசிரியர் கல்லூரியிலும் கற்று ஓர் ஆங்கில ஆசிரியையாக தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். நிறைய வாசிப்பும், பண்ணாமத்துக் கவிராயரான ஜனாப் எஸ்.எம். பாரூக், மேமன் கவி ஆகியோரின் ஊக்குவிப்புமே இவரது இலக்கியத் தடத்துக்கு வழிவகுத்ததோடு 1989 ஆம் ஆண்டு மல்லிகையில் மொழிபெயர்ப்புக் கவிதையான ஓ...! ஆபிரிக்கா என்ற கவிதையும் வெளிவரக் காரணமாகியது. அன்று முதல் இன்று வரை மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் என்ற இவரது முதலாவது மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதி பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம். பாரூக் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு என்ற பெயரில் மொழி பெயர்ப்புக் கட்டுரைத் தொகுதியும், 2011 இல் இந்த நிலம் எனது என்ற பெயரில் மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. இவரது படைப்புக்கள் மல்லிகை உட்பட ஜீவநதி, ஞானம், விடிவெள்ளி, அலைகள் போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

பாடசாலை அதிபராகத் தற்போது கடமையாற்றிக்கொண்டிருக்கும் கெக்கிறாவ ஸுலைஹா மொழிபெயர்ப்புத் துறையில் தனது இலக்கியச் செயற்பாடுகளைச் செய்து வருபவர் என்பதனால் மொழி பெயர்ப்பைப் பற்றிச் சொல்லும் போது இலகு மொழி நடையில் பொருள் சிதையாது ஆங்கிலத்தில் அவர் தருவதை நாம் கொடுத்துவிட்டாலே போதும், நாம் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் தாம். அவர்களது பண்பாட்டுக் கலாச்சார வேறுபாடுகள், அந்தப் பின்னணியில் அவர்களது உணர்வுக் கோலங்கள் போன்றவற்றை அதி தீவிரமான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தித் தீண்டாமல் வைத்திருப்பதைவிட அவற்றை நமக்குப் புரிந்த வண்ணம் மாற்றங்களுக்கும் புரிய வைக்கின்ற மாதிரி மொழி மாற்றினால் அந்தப் புதுச் சிந்தனைகளுக்கு கௌரவம் கொடுத்ததாக ஆகும். இலக்கணச் சுத்தத்தோடு எழுதும் பண்டிதர்கள் தேவையில்லை நமக்கு. அந்தப் புதுச் சிந்தனையின் வரவு அதைவிட முக்கியமானது என்ற அருமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.

மேலும், பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் என்ற இவரது முதலாவது மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதியும், இந்த நிலம் எனது என்ற மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதியும் இலங்கை கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றுள்ளது. அத்தோடு வானம்பாடியும் ரோஜாவும் என்ற கவிதைத் தொகுதியும், பூக்களின் கனவுகள் என்ற கவிதைத் தொகுதியும் வெளிவரக் காத்திருக்கிறது என்ற தகவலையும் அறிய முடிகின்றது. இவ்விரு நூல்களுமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இந்த இதழில் அல்ஹக் காலாண்டு சஞ்சிகை பற்றிய நூல் மதிப்பீட்டை பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியும், வருமுன் காத்திடு என்ற உருவகக் கதையை மருதூர் ஜமால்தீனும் தந்திருக்கிறார்கள். தொடர்ந்து கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசலில் இஸ்லாமிய இலக்கியச் சிற்றிதழ்களின் தோற்றப்பாட்டின் வளர்ச்சிப் போக்கினை கால வகுப்புக்களோடு பட்டியலிட்டிருக்கிறார். ஆறாம் நூற்றாண்டில் சீனத் தலைநகரான பீஜிங்கில் பிரசுரமான ட்ஸிங் பவோ எனும் அரசாங்கச் செய்தித் தாளே உலகத்தில் முதன் முதலாக வெளிவந்த தினசரியாகும். இது 1835 ஆம் ஆண்டு வரையிலான கால நீட்சியைக் கொண்டு வெளிவந்தது என்ற தகவல்களோடு, 1869 முதல் 1980 வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் வெளியான இஸ்லாமியச் சிற்றிதழ்கள் பற்றிய அரும் தகவல்களைத் தந்திருக்கிறார்.

மேலும், கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வினா விடைகளைத் தந்து, பழந் தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பதிவுகளைத் தந்திருக்கிறார். எழுத்தாளர் அறிமுகம் பக்கத்தில் ஹட்டனைச் சேர்ந்த தே. நிரோசனி என்பவரை அறிமுகப்படுத்தி அவரது அன்புத் தாயே என்ற கவிதையையும், ஒரு பெண் தெய்வமாகிறாள் என்ற சிறுகதையையும் பிரசுரித்து இருக்கிறார்கள்.

வழமைபோன்று பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், நூலகப் பூங்காவில் பதினான்கு நூல்களைப் பற்றிய குறிப்புக்களும் தரப்பட்டள்ளன. மொத்தத்தில் வாசிக்கவும், நேசிக்கவும் ஏற்ற இதழாக இவ் இதழ் வெளிவந்திருக்கிறது. ஆசிரியர் குழுவுக்கு எனது பாராட்டுக்கள்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

பூங்காவனம் 16 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

பூங்காவனம் 16 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனல்லை.

பூங்காவனம் சஞ்சிகையின் 16 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் வசம் வந்துள்ளது. திருமதி ஷானாஸ் பர்வீன் பிர்தௌஸின் புகைப்படத்தை முன் அட்டையில் தாங்கி வந்துள்ள இவ் இதழின் ஆசிரியர் தலையங்கம் பெண்ணுரிமை, பெண்ணியத்தைப் பற்றிப் பேசுகிறது. கால மாற்றம் ஆண்களே பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் காலம் ஒன்று உருவாகியிருப்பதனால் இனிவரும் தலைமுறையினர் ஆண் பெண் என்;ற கட்டமைப்புக்களை உடைத்தெரிந்து சகல துறைகளிலும் கால் பதித்து முன்னேறலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருப்பதாக ஆசிரியர் வாசகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். 

வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரை, எழுத்தாளர் அறிமுகம், வாசகர் கடிதம், நூலகப் பூங்கா எனப் பல்வேறுபட்ட இலக்கிய அம்சங்கள் இதழை அலங்கரிக்கின்றன. கவிதைகளை எல். தேனுஷா, ஈழக்கவி, குறிஞ்சி நிலா, த. எலிசபெத், எச்.எம். சுஐப், வவுனியா சுகந்தினி, எம்.எம். அலி அக்பர், மிகிந்தலை ஏ. பாரிஸ், வெலிப்பன்னை அத்தாஸ், நிந்தவூர் ஷிப்லி, நமுனுகுல வி. சந்திராதேவி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

சிறுகதைகளை மருதூர் ஜமால்தீன், எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், நமுனுகுல வி. சந்திராதேவி ஆகியோர் படைத்திருக்கிறார்கள். அறிமுக எழுத்தாளர் என்பதினால் இந்த இதழில் மேற்படி சந்திராதேவியின் ஏங்குகிறேன் என்ற தலைப்பில் கவிதையும், அதிர்ஷ்டம் என்ற தலைப்பிலான சிறுகதை ஒன்றும் இடம்பிடித்திருக்கின்றது.

திருமதி ஷானாஸ் பர்வீன் பிர்தௌஸை, ரிம்ஸா முஹம்மத் சந்தித்து பல தகவல்களை பெற்றுத் தந்திருக்கிறார். கொழும்பைச் சேர்ந்த ஷானாஸ் பர்வீன் ஒரு தையல் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் விளங்குகிறார். கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர், கல்லூரி அதிபர் ஆசிரியர்களின் ஊக்கத்தினால் எழுத்துத் துறைக்குள் வந்ததாகக் கூறுகிறார். சிறுவயதில் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்ததாகவும், தற்பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கவிஞர் ஏ. இக்கபால் தனது இலக்கிய அலசலில் பெண்ணியம் குநஅinளைஅ பேசும் பெண் படைப்பாளிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சிரேஷ்ட படைப்பாளிகளான பெண் எழுத்தாளர்கள் புனைவுகளின் மூலமாக பெண்ணிய சமூகத்தின் நிலபரங்களை உலகத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகவும், வானொலிப் பெண் கலைஞர்கள் மூலமாக தமது நாடகங்களின் மூலம் பெண்ணுரிமை பற்றிய கருத்துக்களை வெளியுலகத்துக்கு உணர்த்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தவகையில் கோகிலா மகேந்திரனின் ஷதுயிலும் ஒருநாள் கலையும்| என்ற நூல் எத்தகைய தாக்கத்தினை ஆணாதிக்கச் சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்.

மேலும், இதழில் உறவின் உச்ச நிலை உணர்த்தும் பாலும் நீரும் என்ற தலைப்பில் பாலினதும், நீரினதும் முக்கியத்துவத்தைப் பற்றி பழம் பெரும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி முன் உதாரணம் காட்டி சிறந்ததொரு கட்டுரையை லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம்  தந்திருக்கிறார். மனிதநேயம் பற்றி எஸ்.ஆர். பாலசந்திரனும், கெட்ட தொடுகையைப் பற்றி சூசை எட்வேட்டும் சிறுகதைகளைத் தந்திருக்கிறார்கள். மங்கையர் தினத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மலையகப் பெண் தொழிலாளர்களினதும், வெளிநாடு செல்லும் பெண்களைப் பற்றியும் பயனுள்ள தகவல்களைத் தனது கட்டுரையில் பதித்துள்ளார் பேராதனை கா. தவபாலன். சுபாசினி சந்திரகாந்தன், நாச்சியாதீவு பர்வீனின் கவிதைகள் மீது தனது பார்வையைச் செலுத்தி மண் வாசைன சுமக்கும் அவரது கவிதைகளைப் பற்றிய சிறந்ததொரு விளக்கத்தினைத் தந்திருக்கிறார்.

மொத்தத்தில் கடந்த இதழ்களுக்கு சற்றும் குறைவு ஏற்படாத வகையில் இந்த இதழினையும் வாசகர்களுக்குத் தந்த அதன் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
முகவரி - 21 ஈ, ஸ்ரீ தர்மபால வீதி, கல்கிசை. 
தொலைபேசி - 0775009222

பூங்காவனம் 15 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

பூங்காவனம் 15 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனல்லை.

மனித உரிமை என்றால் என்ன? அதனைப் பேணிப் பாதுகாப்பது எவ்வாறு? மனித உரிமை என்ற பதத்தின் சரியான உள்ளடக்கத்தை அறிந்து கொள்வதன் மூலம் நமது கடமைகளைச் சரிவரசந் செய்வதனால் மனித உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற அரிவுரையோடு 2014 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான இதழ் தற்பொழுது வாசகர் கைவசம் வந்துள்ளது.

வழமையான நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், குட்டிக்கதை, கட்டுரைகள், மதிப்புரை, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற அம்சங்களுடன் ஷதளிர்களின் சுமைகள், எதனை வேண்டுவோம்| என்ற இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் படைப்பாளி திருமதி. குகதாசனின் முன்னட்டைப் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இம்முறை பூங்காவனம் கொள்கை அளவில் பெண் படைப்பாளிகளின் முன்னட்டைப் படத்தைப் பிரசுரிக்க வேண்டும் என்ற நோக்கோடு, அத்தகையவர்களை நேர்கண்டு ஆசிரியர், இலக்கியத் தகவல்களைப் பெற்று வாசகர்களுக்கு வழங்கி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் தொடர்ந்து கொண்டிருக்க இவ்விதழில் அறாபியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் உள்ள வர்த்தகத் தொடர்புகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தொடர்பானதும் அறாபியர்களிடம் இஸ்லாமிய மார்க்கம் அறிமுகமாவதற்கு பல நூற்றாண்டுளுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தது என்பதையும், இருசாராருக்கு இடையில் வர்த்தகத்திலும், கலாசாரத்திலும் தொடர்புகள் கலந்திருந்தன என்பதைப் பற்றியும் அழகாக விளக்கியுள்ளார். அதேபோன்று இஸ்லாமியப் புலவர்கள் காப்பியம், புராணம், அந்தாதி, உலா பரணி, கோவை, கலம்பகம், தூது, பிள்ளைத்தமிழ் புஞ்சம், சதகம் மாலை மஞ்சரி, வண்ணம், திருப்புகழ் எனும் இலக்கியங்களை நிறையப் படைத்ததோடு, முனாஜாத்து, கிஸ்ஸா, மஸ்ஆலா எனும் புதிய பிரபந்தங்களைத் தமிழுக்குத் தந்து தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.

`நிம்மதி யாருக்கு, உறவுகள், எப்படி எடுத்துறைப்பேன், மலாயன் பென்சனியர்| என்ற தலைப்புகளில் நான்கு சிறுகதைகளும், தெளிவு பிறந்தது, யார் அவள் என்ற பெயர்களில் இரண்டு குட்டிக்கதைகளும், இருமுனை மாந்தர், பணி செய்வோம், தமிழ் எனக்கொரு ஆனந்தம், கானல் நீர், இருட்டின் காகிதம், சாய்ந்துக்கொள்ள தோள்கள் கிடைக்க, நீயே புகழின் சொத்து, விஞ்ஞானமே ஒரு வேலி தருவாயா?, முருங்கை மரத்தின் கடைசி நாள், பச்சோந்தி போன்ற தலைப்புகளில் முறையே எல். தேனுஷா, கவிஞர் நித்தியஜோதி, மருதூர் ஜெமால்தீன், கிண்ணியா எம்.எம். அலி அக்பர், வெலிவிட்ட ஏ.சி. ஜரீனா முஸ்தபா, மட்டுவில் ஞானக்குமாரன், நாச்சியாத்தீவு பர்வீன், குறிஞ்சி நிலா ஆகியோர் சிறந்த கவிதைகளை தந்திருக்கிறார்கள்.

தியத்தலாவை எச்.எப். ரிஸ்னாவின் `உறவுகள்|' என்ற சிறுகதை, தான் கடமையாற்றும் அலுவலகங்களில் கிடைக்ககூடிய உறவுகளைப் பற்றிச் சொல்கிறது. நாம் கடமையாற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஓரே மாதிரியாக, ஓரே குணம் படைத்தவர்களாக இருப்பதில்லை. பலரும் பல கொள்கைகளையும், குணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலது எமக்கு பிடிக்கும், பலது எமக்குப் பிடிக்காது. பிடிக்கிறதோ இல்லையோ பணியகம் எனும் பொழுது அவர்களுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டும் என்ற உண்மையை விளக்குகிறது.

ச. முருகானதனின் `எப்படி எடுத்துரைப்பேன்' என்ற சிறுகதை, சந்தேகக் கோடு அது சந்தோஷக்கேடு என்பதைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது மட்டுமல்லாது தான் தவறைப் புரிந்துக்கொண்டு மற்றவர்களைத் தவறு செய்யாதே என்று சொல்வதற்கு எந்தப் புத்திவானாலும் முடியாது. நாம் சொல், செயல், நடத்தை என்பற்றில் சுத்தமாக இருந்தால்தான் நாலுபேருக்கு நல்லது சொல்வதற்குத் துணிவு இருக்கும். என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதேவேளை தனது மனைவி முன்னால் இன்னொரு பெண்ணை வர்ணிப்பதில் மிகமிகக் கவனமாக இருக்கவே வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் எச்சரிக்கை விடுவது போல அமைந்துள்ளது சிறுகதை.

சூசை எட்வேட்டின் ஷநிம்மதி யாருக்கு| என்ற சிறுகதை நிம்மதி தேடும் எத்தனையோ ஜீவன்கள் இவ்வுலகில் இருக்க, நிம்மதியாய் வாழ்வதற்கு உரிய வாழ்க்கை முறை ஒன்றினை ஏற்படுத்தித்தர தொண்டு நிறுவன அதிகாரி முன்வரும் போது அவற்றைப் பெற்று நிம்மதியாக வாழ அந்த ஜீவன் தயாராயில்லை. தனக்குக் கிடைக்கின்ற அல்லது தான் அனுபவிக்கின்ற வறுமையிலும் வெறுமை கொண்ட வாழ்க்கையில் பெருமை கொள்ளும் ஜீவன்கள் சீறும் சிறப்புமாக வாழத் தெண்டிக்காதது சமூகக் கொடுமைகளில் ஒன்றல்ல தனது சுயநலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்தான் காரணம். பழகிப் போன வாழ்க்கையே எல்லாவற்றுக்கும் மேலானது என்று எண்ணுவதுதான் தவறு என்பதை எடுத்துக் காட்டுகிறது.

எஸ்.ஆர். பாலச்சந்திரனின் ஷமலாயன் பென்சனியர்| என்ற கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடிய ஒருகதை, குறைகளையே காணும் சிலர், நினைவுகளைக் காணத் தவறிவிடுகின்றனர். பொதுவான ஓரிடத்தில் பல குறைகள் இருக்கத்தான் செய்யும் அவற்றையெல்லாம் பெரிதுபடுத்துவதால் எதுவும் ஆகப்போதில்லை என்பதை கதை விளக்குகிறது.

இதழில் வழமைபோன்று நூலகப் பூங்காவில் நூல்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஏனைய அம்சங்களும் இடம்பிடித்துள்ளன. பூங்காவனம் தொடர்ந்து பூத்துக்குலுங்க எனது வாழ்த்துக்கள்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
ஈமெயில் - poongavanam100@gmail.com
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

பூங்காவனம் 14 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

பூங்காவனம் 14 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல


பூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.

சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தி உலகில் யுத்த நிலைப்பாடுகள் அகன்று சமாதானம் மலர வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர் தன் கருத்தாகத் தந்துள்ளார். பூங்காவனத்தின் உள்ளே திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணலில் அவரது இலக்கியச் செயற்பாடுகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த இவர் மலாய் இனத்தவராவார். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான் என்பவர், ஒரு காரியாவார் (குர்ஆன் ஓதுபவர்). இவர் மார்க்க உபன்னியாசகராக இருந்து அச்சுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில்தான் திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் இலக்கிய ஆர்வமும், கலையார்வமும், விளையாட்டுத் திறனும் கொண்டவராக இருப்பதைக் கண்டு கல்லூரி ஆசிரியை திருமதி. பியற்றிஸ் லூக்கஸ் பெர்ணாண்டோ அவர்கள் பயிற்சிகள் அளித்ததன் மூலம் ஆடல், பாடல், நடனம், நாடகம் என்ற துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இதுதவிர நீர்கொழும்பில் சிங்கள சினிமாவில் தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும், நாடகக் கலைஞருமான பிரபல நகைச்சுவை நடிகர் ஹியூகோ பர்ணாண்டோவின் தலைமையில் பயிற்சிகள் இடம் பெற்றதனாலும், காலஞ்சென்ற பிரபல சிங்கள நடிகை ருக்மணி தேவியின் தொடர்பினாலும் கலை ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டார்.

இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடிஷன் ஆர்டிஸ்டாகக் காணப்பட்டதனால் ரூபவாஹினி, இலங்கை வானொலி நாடகங்களில் முஸ்லிம் நிகழ்ச்சி, சிங்கள மொழி நாடகங்கள், இளைஞர் இதய நாடகங்கள் எனப் பல்வேறுபட்ட நாடகங்களில் நடித்து தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாரிசவாதம் கண்டு படுத்த படுக்கையாகி விட்டதனால், இவருக்கான நாடக ஈடுபாட்டுச் சந்தர்ப்பங்கள் கை நழுவிப் போய்விட்டன. இவர் வானொலிக்காக சிறுகதை, கவிதை, கட்டுரை, உரையாடல், நாடகங்கள் முதலியவற்றுக்கான பிரதிகள் எழுதி பங்களிப்பும் செய்துள்ளார். சிங்கள மொழித் தேர்ச்சி பெற்ற ஆசிரியராக இருந்ததனால் அமைச்சு காரியாலயங்களுக்கான மொழி பெயர்ப்புச் சேவையும் செய்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டு ``சஹன'' என்ற சிங்களப் பத்திரிகையில் சிங்களக் கட்டுரை ஒன்றினை எழுதியதன் மூலமாக அறிமுகமாகி, ஷஷமீப்புர|| சிங்களப் பத்திரிகையின் எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான படைப்புக்களைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு அவற்றைப் புத்தகங்களாக பிரசுரிக்க வசதிகள் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறான ஆளுமையுள்ள படைப்பாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது இலக்கியப் புரவலர்களினதும், தனவந்தர்களினதும் கடமையாகும்.

2009 ஆம் ஆண்டு கலாபூஷண விருது பெற்றுள்ள இவர், ஞானம், அல்ஹஸனாத், ஓசை போன்ற சஞ்சிகைகள் தேசிய ரீதியாக நடாத்திய போட்டிகளில் பரிசுச் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். தற்பொழுது நோயாளியாகி அனாதரவற்ற ஒரு எழுத்தாளராக இருக்கின்றார் என்ற செய்திகளை அறியும் போது பரிதாபப்படாத உள்ளங்கள் இருக்க முடியாது.

மலரில் சூசை எட்வேடின் குரங்குப்பிடி, எஸ்.ஆர். பாலசந்திரனின் தேய்வத் தண்டனை, மருதமுனை றாபி எஸ். மப்ராஸின் நிவாரணி ஆகிய தலைப்புக்களிலான மூன்று சிறுகதைகளும், வவுனியா சுகந்தினியின் பணம் கொடுத்துப் பிணமாதல், அளம்பில் இராமசாமி ரமேஷின் எப்படி முடிகிறதோ?, மிஹிந்தலை ஏ. பாரிஸின் படுகொலை, கிண்ணியா எம்.எம். அலி அக்பரின் மனித காவோலைகள், பேராதனை கா. தவபாலனின் வலியாரும் மெலியாரும், திவித்துறை தர்ஷியின் காரணம் கண்டறிவோம், ஷெல்லிதாசனின் அவளுக்கு அவளே நிகர், பதுளை பாஹிராவின் புளியமரத்துப் புதிர்கள் ஆகிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர கிண்ணியா எஸ். பாயிஸா அலி கவிதைகளும், கிண்ணியா பி.ரி. அஸீஸ், இரத்தோட்டை சந்திரசேகரன் ஆகியோரது ஹைக்கூக்களும் இடம்பெற்றுள்ளன.

கலாபூஷணம் ஸக்கியா சித்தீத் பரீத் அவர்களது பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூலுக்கு சிறந்ததொரு நூல் மதிப்பீட்டினை கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அஹமது தந்திருக்கிறார். மேலும், வழமைபோன்று கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இவ்விதழிலும் தொடர்கிறது. நுணாவிலூர் கா. விசயரத்தினம் எழுதியுள்ள இலக்கியங்கள் பேசும் உலகச் சமாதானம் என்ற தலைப்பிலான கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. நூலாசிரியர் வெலிப்பண்ணை அத்தாஸின் பூவும் கனியும் சிறுவர் பாடல்கள் பற்றிய நூலுக்கான விமர்சனத்தை நிலாக்குயில் எழுதியிருக்கிறார். 48 பக்கங்களில் சகல கலை அம்சங்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் பூங்காவனம் சஞ்சிகையில் நூலகப் பூங்கா, வாசகர் கருத்துரையுடன், ஆசிரியரின் கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை நூல் வெளியீட்டின் புகைப்படங்களும் இடம் பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஞ்சிகை பெயர் - பூங்காவனம் (இதழ் 14)
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி – 0775009222
ஈமெயில் - poetrimza@gmail.com
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

இலக்கிய அனுபவ அலசல்

இலக்கிய அனுபவ அலசல்

கவிஞர். ஏ. இக்பால்


பரீட்சை மண்டபம் ஒன்றில் மேற்பார்வையாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றுவதற்கு வந்தவர்களில் பேராசரியர் கா. சிவத்தம்பியும், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இடைவேளையின்போது இலக்கியம் மட்டுமல்ல பலதையும், பத்தையும் கதைத்துக்கொள்வோம்.

தமிழில் அகராதி வருமுன் நிகண்டுதான் அவ்விடத்தை நிரப்பியது. பெஸ்கி எனும் வீரமா முனிவரின் சதுரகராதிதான் 1732 இல் தொகுக்கப்பட்ட முதல் அகராதி. இந்த அகராதி என்னிடத்தில் உண்டு எனும் சங்கதியை அகராதி பற்றிய கதையின்போது நான் கூறினேன்.

நுஃமான் என்னிடம் ஷஇக்பால் அதை எனக்குத் தாருங்கள். போட்டோ பிரதி எடுத்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்க வேண்டும்| எனக்கேட்டார். மறுநாள் நான் அதை எடுத்துச் சென்றேன். அட்டை இல்லை. இடைக்கிடை பூச்சரித்த நிலை. என்றாலும் முழுமையாக இருந்தது. முன்பக்க முகவுரைக்கு மேலே `கார்த்திகேசு' என பேனையால் எழுதியிருந்தது. இதைக்கண்ட சிவத்தம்பியவர்கள் ஷஇது எனது தகப்பனாரின் எழுத்து. இது எங்களுடைய சொத்து| என உரிமை கொண்டாடினார்.

`உங்களுடைய சொத்தாக இருக்கலாம். இப்போது நான் அதனை சொந்தமாக்கியுள்ளேன். உரிமைக்கு வழக்குப் போட வேண்டும்' என்றேன்.

'சரி. இது எப்படிடா கிடைத்தது' எனக்கேட்டார்.

`பேராதனை தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்த எனக்கு 15.03.1966 இலிருந்து அட்டுலுகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு மாற்றம் கிடைத்தது. அன்று கடமை ஏற்க அங்கே சென்றேன். ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்த பலா மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து கூட்டமாக ஆசிரியர்கள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அதிபர் அறைக்குச் சென்று கடமை ஏற்ற கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். எதிரில் பத்திரிகைகள், பழைய கழிவு நூல்கள் குப்பையில் கொட்டப்பட்டு, மாணவர்களால் நெருப்பு வைத்து எரிவதைக் கண்டேன். பக்கத்தில் உள்ள பெருந்தடி ஒன்றை எடுத்து எரிந்துகொண்டிருந்த குப்பையைக் கிளறினேன். அட்டையில்லாத இந்தக் கோலத்துடன் இந்த அகராதி வெளிவந்தது. எடுத்துத்தட்டி எனது கைப் பைக்குள் வைத்துக்கொண்டேன். மீண்டும் விரித்துப் பார்த்த போதுதான் சதுரகராதி என பளிச்சிட்டது. இந்தப் பாடசாலையில் ஆரம்பகால அதிபராக இருந்த கார்த்திகேசுவின் நாமம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் தனது தந்தையார் அங்கு கற்பித்த கதையை பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்கள் கூறினார்.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அதைப்பிரித்து போட்டோ பிரதி எடுத்தார். நான் அதை பைண்ட் செய்துகொள்வேன் என வாங்கிக்கொண்டேன்.

சதுரகராதி என்றால் நால்வகைப்பட்ட அகராதி என்று பொருள். பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகை அகராதியின் தொகுப்புத்தான் அவை. தமிழில் ஏராளம் அகராதிகள் வெளிவந்தபோதும் நால்வகைப்பட்ட அகராதி சதுரகராதிக்குப்பின் ஒன்றே ஒன்றுதான் வெளிவந்துள்ளது. ஷஇருபதாம் நூற்றாண்டு தமிழ்ப் பெயரகராதி| என்பது அதன் பெயர். இதன் ஆசிரியர் பி. இராமநாதன். இதன் முதல் பதிப்பு 1909 ஜனவரியில் வந்துள்ளது. மறுபதிப்பு 1991 மார்ச்சில் வெளிவந்தது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இவ்வகராதி பொருள், தொகை, தொடை, நெடிற்கீழெதுகை என்ற நான்கு வகைகளைக் கொண்டது.

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தொடர்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஏற்பட்டது. பாடநூல் ஆலோசனை சபை, கல்வியியல் சுற்றோட்டம், பரீட்சை நிலைய தொடர்புகள் எனும் கல்விசார்ந்த இணைப்பு நிறைய எங்களிடம் உண்டு. அதுமட்டுமல்ல இலக்கியம் சார்ந்த உறவும் அதிகமுண்டு. அவற்றை அலசும்போது, பல்கலைக்கழக தொடர்புகளுக்கு முன்னுள்ள விஷயங்கள் நிறைய வரும். பின்பு தொடர்ந்து அலசுவோம்.

                                       (இன்னும் வரும்)

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்து உயர் மதியுரைக் கழகத்தின் தமிழ் உப குழுவில் ஒருவனாக 1971 ஏப்ரல் 8ம் திகதியிலிருந்து நானும் நியமிக்கப்பட்டேன். தமிழ் ஆசிரியன் என்பதைவிட இலக்கிய உலகின் செயற்பாடே இதற்குக் காரணம் எனலாம். குறிப்பிட்ட தினத்தில் வெளியீட்டுத் திணைக்களம் சென்றேன். அங்கே பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி எம்.எம். உவைஸ், ஆசிரியக் கலாசாலை அதிபர் ஐ.எல்.எம். மஸ்ஹூர், கல்வியதிகாரிகளான திருமதி. முஹிதீன், எம்.ஐ.எம். ஷரீப் இன்னும் பலர் வீற்றிருந்தனர்.

கல்வி வெளியீட்டுத் திணைக்கள நூலாக்க குழுவிலுள்ள இ. முருகையன், த. கனகரத்தினம், சு. வேலுப்பிள்ளை, எம்.சி. சலீம், க. கந்தசாமி, சபா ஜெயராசா, சண்முகம் சிவலங்கம் ஆகியோருடன் பாட விதான அபிவிருத்தி மத்திய நிலையத்திலிருந்து செ. வேலாயுதம்பிள்ளை, திருமதி. ந. சண்முகநாதன், எம்.எஸ். ஜமால், கா. ஜெயராசா இன்னும் சிலரும் வந்திருந்தனர்.

ஷதமிழ் மலர்| எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் பாடநூலை ஷதமிழ்| என்ற பெயருக்கு மாற்றி புதிய கல்வித் திட்டத்துக்கு அமைய வெளியிடுவதன் நோக்கமே அப்பொழுது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தன்னுடைய கருத்தைக் கூறும்போது பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி டிப்ளோமா செய்த பின் கீழ் வகுப்பில் படிப்பிப்பதில்லை. மேலை நாட்டில் இவர்கள் தான் கீழ் வகுப்புக்களுக்கு படிப்பிப்பார்கள். எனவே கீழ் வகுப்புக்களுக்கு கற்பித்த அனுபவமுடையோரைப் பற்றி வினவினார். நான் அந்த அனுபவமுடையவன் என்பதைத் தெரிவித்தேன். ஷஅப்படியானால் இந்த இடத்தில் இக்பாலின் கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்| என்றார்.

பாடநூல், பாடங்களின் அமைப்பு, மொழியியல் தொடர்ச்சி என்பன பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதன்படி பாடநூலை ஆக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டோம். அடுத்த சந்திப்பில் எழுதிவந்த பாடங்களின் தராதரம் பற்றி ஆராய்ந்தோம். பாடங்கள் முழு இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பித்தலில் வெற்றி காண முடியாது. இக்கருத்தில் பேராசிரியரும் நானும் ஒரே கோட்பாட்டில் இருந்தோம். சில பாடங்கள் சரிவராது என்ற நிலைக்கும் ஆளானோம். பாடங்களை அச்சிடுவதற்கு முதல் நானும் பேராசிரியரும் பல இடங்கள் சென்று அப்பாடங்களை வகுப்பில் படிப்பித்துப் பார்த்தோம். அப்போது இடர்கள் புரியும். சரி செய்யவும் முடியும்.

இப்படி கலாசார சம்பந்தமான பாடம் இரண்டில் சந்தேகம் கொண்டு காரசாரமான விவாதம் நடந்தது. முடிவு ஏற்படாத நிலையில் அப்பாடங்களை குக்கிராமம் ஒன்றில் கற்பித்துப் பார்க்க வேண்டும் என்றனர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு என்னை அழைத்தார். நானும் அவரும் அவரது வாகனத்திலேயே வெலிகம சென்று வெலிப்பிட்டியை ஊடறுத்து சொரகொட என்ற குக்கிராமம் சென்று அங்குள்ள பாடசாலையில் நானொரு வகுப்பிலும், அவரொரு வகுப்பிலும் கற்பித்துப் பார்த்தோம். சில திருத்தங்களுடன் பாடங்கள் வெற்றியளித்தன. வெற்றிக்களிப்பில் திரும்பி வந்தோம். தற்காலம் தனது சொந்த செலவில் இவ்விதப் பணியை யாரும் செய்யமாட்டார்கள். அவ்விதம் செய்ய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எந்நேரமும் தயாராக இருந்தார்கள். காரணம் இலக்கியக் கிடங்குள் நீச்சலடித்த பெரும் அனுபவம் தான் அது. நானும் அவரும் இவ்விடயங்களில் செலவைப்பற்றிச் சிந்திப்பதேயில்லை.

(இன்னும் வரும்)

1995 களில் கௌரவ லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்கள் கலாசார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் சமய கலாசார அமைச்சின் ஆலோசகராகவும், பதிவாளராகவும் கடமை புரிந்தார். அக்காலம், தேசியக்கல்வி நிறுவனத்தில் தமிழ் பாடநூல் எழுதும் குழுவில் அமர்ந்து நூல் எழுதிக் கொண்டிருந்தேன். எங்களது செயற்பாட்டை மேல்பார்வை செய்வதற்கு பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள்தான் கடமை புரிந்தார். அப்போது நுஃமான் என்னை அழைத்து ஷ1996ல் கலாபூசண விருது கொடுப்பதற்கு ஆட்தெரிவு செய்கிறார்கள். மூத்த இலக்கியவாதிகளுள் நீங்களிருப்பதால் உங்கள் விருப்பத்தைக் கேட்டறியுமாறு என்னிடம் கூறினார்கள். நான் விருப்பத்தைப் பெற்றுத்தருவேன்| எனக் கூறிவிட்டேன். ஷவிருப்பந்தானே!| எனக்கேட்டார். நான் ஷவிருப்பமில்லை| எனக் கூறிவிட்டேன். ஷபின்னேரம் வருவேன் யோசியுங்கள்| என்றார்.

பின்னேரம் வந்தார். விருப்பமில்லை என்றதும் ஷநாளை காலை வருவேன். இன்றும் யோசியுங்கள்| என்றார். மறுநாள் இதுபற்றி மல்லாடும்போது குழுவிலுள்ள ஏனையோர் ஷஎன்ன நீங்கள் இருவரும் மல்லுக்கட்டுவது?| எனக்கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். ஷஐயோ கலாபூஷணம் எப்படிப் போனாலும் பணம் பத்தாயிரம் உண்டு. எடுத்துச் செலவழிப்பதுதானே| என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார்கள. எனக்கும் அப்போதுதான் அது சரியாகப்பட்டது. விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன்.

22.05.1996 இல் கலாபூஷணப் பட்டமளிப்புக்கு அழைப்பு வந்தது. அதற்கிடையில் எழுத்தில் ஏதும் இல்லாமல் ஜெமீல் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து, ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியின் விருப்பக் கடிதமொன்று வாங்கி அனுப்புமாறு கேட்டார். ஷஅப்படித்தான் அது விதியானால் எழுத்தில் அறிவியுங்கள்| எனக்கூறிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டேன்.

எதற்கும் மத்துகமப் பிரதிநிதி அணில் முனசிங்காவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஷஇன்னும் உனக்கு கலாபூஷணம் கிடைக்கவில்லையா?| என எழுத்திலேயே கேட்டார். இச்சங்கதியினால் ஜெமீல் மீதிருந்த அபிமானம் எனக்கு தூளாகிவிட்டது.

1996 மே 22 ஆந் திகதி கலாபூஷண விருதைப்பெற அழைப்பு வந்தது. உரிய தினத்தில் உரிய நேரத்தில் அங்கு சென்ற போதும் ஜெமீலுடன் நான் கதைக்கவேயில்லை.

மேடையில் கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி, அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், கலாசார திணைக்களப் பொறுப்பாளர்கள் யாவரும் வரிசையாய் வந்து நின்றார்கள். பெயர்கள் அழைக்கப்பட்டு வரவேற்று விருதைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனது முறை வந்ததும் நான் சென்று கொண்டிருந்தேன். கலாசார அமைச்சர் கையில் விருதுக்குரிய ஆவணம், பணத்துக்குரிய காசோலை இருந்தன. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்னைக் காட்டி ஷஇவர் எனது ஆசிரியர்| என கலாசார அமைச்சரிடம் கூறினார்.

கையிலிருந்த காசோலை, விருது யாவற்றையும் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கையில் கொடுத்து, எனக்கு அவரையே கொடுக்குமாறு பணித்தது மட்டுமல்ல, அவற்றை எனக்கு கொடுக்கும்போது கைதட்டி மகிழ்ச்சியையும் தெரிவித்தார். ஆசிரியம், இலக்கியம் இணைந்த செயல்பாட்டால் நான் மிக மகிழ்ந்தேன்.

அக்காலம் கலை இலக்கியவாதிகளை கலாசார திணைக்களம் தெரிவு செய்தே கலாபூஷண விருதளித்தனர். தற்காலம் விண்ணப்பம் கோரியே இவ்விருதை அளிக்கிறார்கள்.

அழகிய கலையம்ச வேலைப்பாடுடன் வீடு கட்டும் மேசன், கலையம்ச உத்தியுடன் அழகுபடுத்தும் தச்சன், குயவன் போன்றோருக்கும் கலாபூஷண விருதளித்து கௌரவிப்பது முக்கியமானது. அவற்றை எப்போது செய்வார்களோ???

(இன்னும் வரும்)                                    

பாடசாலையில் கல்வி கற்கும் போது ஷகலாவல்லி| எனும் கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தேன். அக்காலம் நான் ஷதினமணிக்கதிர்| தொடர்ந்து வாங்குவேன். உடன் மாணவன் அபுலசன் ஷகல்கி| வாங்குவார். மாற்றி வாசித்துக்கொள்வோம். ஏனைய பத்திரிகைகளை எல்லாம் வாசிகசாலையில் தான் வாசிப்போம்.

அக்காலம் எனதூரான அக்கரைப்பற்றில், ஆசிரியர்களான செய்யத் அஹமத், செய்யித் மீரா, சகீதண்ணன், சின்னலெவ்வை, ஜமால்தீன், இன்னும் பலர் சேர்ந்து ஜின்னா வாசிகசாலை எனும் பெயரில் பொது வாசிகசாலை ஒன்றை அமைத்து பராமரித்து வந்தனர். எங்களது வாசிக வேட்கையை அது தீர்த்து வைத்தது.

நான் அதிகமாக தூங்குவேன். என் தாயார் என்னைக் கடிந்துகொள்வார். சொற்ப வேளை ஓய்வு கிடைத்தாலும் அதைத் தூக்கத்தில் தான் கழிப்பேன். அதனால் ஷஉனக்கு ஆயுசு குறைவு| எனத் தாயார் கடிந்துகொள்வார்.

1957 மே 6 ஆந்திகதி ஆசிரிய நியமனம் எனக்குக் கிடைத்தது. ஹாலி எலத் தமிழ் வித்தியாலயந்தான் எனது பாடசாலை. அடிக்கடி பதுளை செல்வேன்.  1959 களில் தான் புத்தகம் வாங்க எத்தனித்தேன். பதுளை ஷலோவர்ஸ் ரீட்டில்|, ஷகேஅன்கே| கடைக்கு அதிகமாகச் செல்வேன். அதற்கு முன் கடைதான் ஷமீனாம்பிகைப் புத்தகசாலை|. அங்கே எனது முதலாவது புத்தகமாக ஷதூக்கம் ஓர் கலை| எனும் நூலை வாங்கினேன்.

ஊர் சென்றதும் தூங்கும் போது எனது தாயார் வழமைபோல் கடிந்து கொண்டார். ஒரு பேச்சும் இல்லாமல் ஆர்.எஸ். மணி எழுதிய தூக்கம் ஓர் கலையை தாயிடம் கொடுத்தேன். அதை மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டி வாசித்த பிறகு எனது தாய் தூக்கத்திற்காக ஏசுவதில்லை.

இலக்கிய ஆர்வலர்கள் கேஅன்கே கடைக்குத்தான் வருவார்கள். முதன் முதல் தமிழோவியனை நான் அங்கு தான் சந்தித்தேன். பசறை பாரதி கல்லூரியின் தலைமை ஆசிரியர் கே. இராமசாமியுடன் தான் அவர் வருவார். அக்காலம் நிறைய எழுதிக்கொண்டிருப்பவர்தான் தமிழோவியன். அங்கே தெளிவத்தை ஜோசப், முஹம்மது சமீம் ஆகியோரும் வருவார்கள். தெளிவத்தை ஜோசப்பைவிட தமிழ் ஓவியன் தான் அக்காலம் பிரபல்யம். சில வேலைகளில் ஊவாக் கொலிஜ்ஜில் மேல் வகுப்பில் கற்கும் சோ. சந்திரசேகரனும் அங்கு வந்து நிற்பார். இப்போது பேராசிரியர் சந்திரசேகரனைப் பார்த்தால் என்னைவிட வயதில் மூத்தவர் என்றுதான் மற்றவர்கள் கணிப்பார்கள். நான் கற்பிக்கும் போது அவர் கற்கின்றார்.

நான் பதுளை செல்வதின் முக்கிய நோக்கம் பிங்கறாவையில் வசிக்கும் மல்லிகை மணாளனைப் பார்ப்பதற்காகவே. அவர் இலக்கிய ரசனையுள்ளவர் மட்டுமல்ல ரோஜாமலர்த் தோட்டம் ஒன்றையே கண்காணிப்பவர். மலர்கள் கன்னி கட்டியதிலிருந்து மலர்ந்து கருகும் காலம் வரை பார்த்து மகிழ்வார். என்னிடம் கதைத்து மகிழ்வார். அவர் முத்துச்சரம் எனும் சஞ்சிகையை நடாத்தியவர். 1960 களில் அவர் நடாத்திய சஞ்சிகையின் முதல் பிரதியில் அழகு ஆபத்து எனும் சிறுகதையொன்றினை எழுதினேன்.

1962 களில் பதுளை முஸ்லிம் மஹா வித்தியாலயம் - இப்போது அல் அதான் வித்தியாலயத்தில் கற்பிக்கத் தொடங்கினேன். அந்நேரம் அப்துல்லாஹ் என்பவர் தான் அதிபராக உயர்வு பெற்று வந்தார். அவர் வருமுன் அங்கே அப்துல் காதர் லெவ்வைதான் அதிபராயிருந்தார். மேல் வகுப்புக்கு பாடம் எடுப்பதை அப்துல் காதர் லெவ்வையின் மாணவர்கள் மறுத்ததால், அதிபர் என்னையே வற்புறுத்தினார். நான் மறுக்காது நன்கு ஆயத்தப்படுத்திக் கற்பித்தேன். அதன் விளைவு அநேக மாணவர்கள் சித்தியெய்தினர். இன்று எழுத்துலகில் புதுக் கவிதைகளை எழுதிக் குவிக்கும் பதுளை பாஹிராவும், அன்று சித்தியெய்திய மாணவர்களில் ஒருவர் தான். மேல் வகுப்பில் வெளியாக்கிய சிந்தனை கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியரும் பாஹிரா தான்.

பசறை பாரதி கல்லூரியின் பாரதி விழாவில் என்னைப் பேசுவதற்கு அழைத்தனர். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் எனும் தலைப்பில் அக்காலமே புதுமையாகப் பேசினேன். இலக்கிய உலகம் விதந்து போற்றியமையும், தேசிய பத்திரிகைகளில் அது வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கதே.

சம்பளத்தில் அக்காலம் ஒரு மாதம் 25 ரூபாவுக்கு புத்தகம் வாங்குவேன். 81 பக்கங்கள் கொண்ட தூக்கம் ஓர் கலை மனோ தத்துவ நூலின் விலை 1.25 சதம் தான். அப்படியானால் ஒரு மாதம் எத்தனை நூல்கள் வாங்கியிருப்பேன் என்பதை உணரலாம். இந்தத் தேட்டத்தின் பயன் எனது நூலகத்தில் 5800 நூல்கள் இப்போதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் புத்தகங்களுக்காக என்னை அண்டுவர். இப்படி  அண்டியவர்களில் நூல்கள், பத்திரிகை பைண்ட்கள் எடுத்து இதுவரை தராதவர்கள் பற்றிய பட்டியலைப் பார்ப்போம்.
(இன்னும் வரும்)பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ஆய்வுகள் நடத்தும் போதெல்லாம் என்னிடமும் நூல்கள் வாங்குவார். மொழியியல் சம்பந்தமாக ஆய்வின் போது மு. வரதராசனின் நூல்களை உடனடியாக திருப்பிவிடுவார். ரா. சீனிவாசனின் மொழியியல் நூலை வாங்கியவர் உடனடியாகத் தரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டே அவரிடம் திரும்பப் பெற்றேன்.

மு.வ. வின் மொழி நூல், மொழி வரலாறு, டாக்டர் சக்திவேலின் தமிழ் மொழி வரலாறு, டாக்டர் முத்துச் சண்முகனின் இக்கால மொழியியல், கா. சுப்பிரமணியப் பிள்ளையின் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வெளியீடான மொழி நூற் கொள்கையும், தமிழ் மொழி அமைப்பும் இவ்விதம் நிறைய நூல்களை கொடுத்து வாங்கியுள்ளேன். இவற்றுள் சீனிவாசனின் மொழி நூலையும் சுப்பிரமணியப் பிள்ளையின் மொழி நூற் கொள்கையும், தமிழ் மொழி அமைப்பும் ஆகிய நூல்களை திரும்பப் பெற அவதிப்பட்டேன்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையொன்றின் இறுதிப் பகுதியில்

ஷஇக்பாலுக்கு இப்பொழுதும் கூட என்னிடத்தில் ஓர் அதிருப்தி என்பதிலும் பார்க்க ஆதங்கம் கலந்த பயம் உண்டென்று கருதுகிறேன். ஏனெனில் ஏறத்தாழ பத்துப் பதினொரு வருடங்களுக்கு முன்னர் ஈழத்து இலக்கிய வரலாறு பற்றி ஒரு தனி நூலை எழுதத் தீர்மானித்த போது இக்பாலிடமிருந்து அதற்கு வேண்டிய முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றான கனக செந்தி நாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி பிரதியைப் பெற்றுக் கொண்டேன். அப்பிரதியில் அதைப் பற்றி எதிர்த்தெழுதிய சில்லையூர் செல்வராசனின் கட்டுரைத் தொகுப்பு சேர்த்துக் கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்பால் அப்பிரதியைத் தருமாறு அடிக்கடி கேட்பார்|.

இப்பிரதியை இன்னும் அவர் எனக்குத் தந்ததில்லை. அவர் குடும்பத்தார் முடியுமானால் அதை எனக்குத் தந்துதவுமாறு இன்று கேட்கிறேன்.

கனக செந்தி நாதன் எழுதிய அந்த நூலின் முதற்பதிப்பல்ல இது. எஸ். பொன்னுத்துரை, எம்.ஏ. ரஹ்மான் கூடி திரிவுபடுத்திய நூல் தான் இது. செந்தி நாதனின் சேட்டைக்குச் சாட்டையாக தினகரனில் தொடர்ந்த கட்டுரையையே நான் அதில் சேர்த்துக் கட்டியுள்ளேன்.

இதன் பின் எவ்வளவு கெஞ்சினாலும் பேராசிரியருக்குப் புத்தகமே கொடுப்பதில்லை. ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளியாக்கிய பாரதியின் கருத்துப் படங்கள் நூல் என்னிடம் உண்டு என்பதை அறிந்த பேராசிரியர் அவர்கள் கேட்டு மன்றாடினார். 9'' ஒ 11 - 1ஃ2' அளவு, 210 பக்கங்களைக் கொண்ட அந்நூல் இலங்கையில் என்னிடம் மட்டுமே உண்டு என நினைக்கிறேன். அதை எடுத்துச் சென்று பேராசிரியரிடம் ஒரு பகல் முழுதும் நின்று காட்டிவிட்டு கையோடு கொண்டுவந்து விட்டேன்.

ஷபாரதி கவித்துவம் ஒரு மதிப்பீடு| எனும் நூலை இராசேஸ்வரி நீலமணி எழுதியுள்ளார். 84 பக்கங்களைக் கொண்ட அந்நூல் பாரதிக்கு தமிழே தெரியாது என அடித்துக் கூறுகிறது. இந்நூலும் இலங்கையில் என்னிடம் மட்டும்தான் உண்டு. பேராசிரியர் இதைக் கேட்டும் காட்டுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. (இடையில் ஒரு சொருகல்) தமிழ்ச்சங்கம் பாரதி விழாவை சிறப்புற நடாத்தியது. அங்கு கலந்து கொண்டவர்கள் எவருக்கும் பாரதி பற்றி முழுமையாக தெரியாது என்பது எனது கருத்து. மகாகவி பாரதியார் பற்றிய குறிப்பு என ஜீவநதியில் தொடரவிருக்கிறேன்.

சிலர் புத்தகங்களை எடுத்துச் சென்று தொலைத்துவிட்டனர். அவற்றை எனக்கு விளங்கக் கூடியதாய் இருந்தது. 1974களில் விமர்சகர் ஸ்ரீபதி, பேராசிரியர் சிவத்தம்பி பெயரைக்கூறி என்னை அண்டினார். கூறிய ஷபைண்டு|களை எடுத்துச் சென்று திரும்பத் தந்தார். புத்தகங்கள் நிறைய வாங்கி வாசித்துத் திரும்ப தந்தார். 30.08.1974களில்; வெளியான ஷஎழுத்து| ஒருவருட ஷபைண்ட்| உதிரியாக ஏழு பிரதிகளை 97ல் எடுத்துச் சென்றவர் திரும்பத் தரவில்லை. இன்னொருகால் கண்டியில் சந்தித்து கழுத்துடன் சேர்த்து ஷேர்ட்டைப் பிடித்தேன். ஷஎனது பொருள்களெல்லாம் களவு போய்விட்டது. அதிலே பைண்ட் உதிரிகள் அடங்கும்| என அழுதார். என்ன செய்வது விட்டுவிட்டேன்.

18.02.1977 களில் டாக்டர் அமீர் அலி என்னைச் சந்தித்து ஷஷஅல்பாக்கியத் ஸாலியாத்|| மலரை அவசரமாக உடன் தருவேன் எனக் கூறி எடுத்துச் சென்றார். இன்று வரை அவரையும் காணோம். மலரையும் காணோம்.

அக்கரைப்பற்று இப்றாலெவ்வை என்பவர் அரசியல், இலக்கியத்தில் எல்லாம் எடுபிடி. மார்க்ஸிம் கோக்கியுடைய ஷஷதாய்||, நேரு மகளுக்கெழுதிய கடிதங்கள்- ஷஷநேரு சரித்திரம்|| இவற்றை 1979 களில் எடுத்துச் சென்றார். அவரை இன்னும் காணவில்லை. கலைவாதி கலீல் இலங்கையர் கோனின் ஷஷவெள்ளிப் பாதசரம்|| நூலை அவசரமாக வாங்கிச் சென்றார். இதுகால வரை நூலையே காணோம். துக்கமான விசயம் அந்த நூலை எங்கேயும் வாங்க முடியாது. நஹியா அவர்கள் ஷஷமெய்ஞ்ஞானப் பேரமுதம்|| நூலை வாங்கிச் சென்றார். அதை எங்கேயோ தொலைத்துவிட்டார். எப்படியோ ஒரு பழைய பிரதியை எங்கிருந்தோ தேடித் தந்துவிட்டார்.

சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்த எனது சிறுவர் பாடல்கள் 26 அடங்கிய பைல் ஒன்றை குமரன் புத்தக இல்லம் டாம் வீதியில் இருக்கும் காலம், குமரனிடம் கொடுத்தேன். அதை இன்று வரை புத்தகமாக வெளியிடவுமில்லை. திருப்பித் தந்ததுமில்லை. கேட்ட போது அதை என்னுடன் அங்கே சென்ற ஜவ்ஸகியிடம் கொடுத்ததாகச் சொன்னார். சொன்னபடி கொடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் குமரனுக்கு செல்வதையும் நிறுத்திக்கொண்டேன்.

இன்னும் வாங்கக் கூடிய புத்தகங்களை இழந்து, வாங்கியிருக்கிறேன். அவர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் அல்லர்;. இளையவர்கள், புத்தகம் பற்றி அறியாதவர்கள் இன்னும் என்னை அண்டுகிறார்கள். பைண்டுகளையும், ஆய்வுக்குரிய நூல்களையும் எடுத்துச் செல்ல நான் அனுமதிப்பதேயில்லை.
(இன்னும் வரும்)

எவ்விதக் கொள்கைகளும் இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஆசையில் எழுத்துலகில் புகுந்த நான், 1960 களுக்கு இரண்டு மூன்று வருடங்கள் முன்னிருந்தே, தேசியம், முற்போக்குச் சிந்தனைகள் செறிந்த படைப்புக்களைப் படைக்கத் தொடங்கினேன்.

இக்காலத்தே யாழ். தமிழ் இலக்கிய மன்றத்தை உருவாக்கி ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் இம்மன்றத்துடன் இணையுமாறு வேண்டினார். அந்த இணைப்பினால், இலக்கியப் பரப்பினை அறிவதற்கு வாய்ப்பேற்பட்டது. 1961 களில் கவிதைச் செல்வம் எனும் கவிதைத் தொகுப்பொன்று வெளியிடுவதற்காக ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் கவிதைத் தொகுதி ஒன்று கேட்டெழுதினார். தேசியச் சிந்தனையுள் அமைந்த ஷஷசெல்வம் பெருக்குவோம்|| என்ற தலைப்பில் கவிதை ஒன்றை அனுப்பினேன்.

கவிதைச் செல்வம் எனும் ச.வே. பஞ்சாட்சரம் தொகுத்த கவிதைத் தொகுதி 1962 களில் வெளிவந்தது. இதை வெளியிட்ட விலாசம் யாழ். தமிழ் இலக்கிய மன்றம், கந்தரோடை, சுன்னாகம் என்பதாகும். 32 பக்கங்களை அடக்கிய இக்கவிதைத் தொகுப்பின் விலை ஒரு ரூபாதான். இக்காலமெனின் ரூபா நூறு பெறுமதி எனலாம்.

இருபத்தொன்பது கவிஞர்களுடைய கவிதைகள் இடம்பெறும் இந்நூலின் பதிப்புரையை சி.சரவணபவன் - கலைச் செல்வி ஆசிரியர் எழுதியுள்ளார். இவர்தான் இதைப் பதிப்பித்திருக்கிறார். இந்த சூழலுக்கு சிறந்த முன்னுரை ஒன்றை கவிஞர் இ.முருகையன் அவர்கள் எழுதியிருக்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள 29 கவிஞர்களின் பட்டியலைப் பாருங்கள்: 01. பா. சத்தியசீலன், 02. செ.து. தட்சணாமூர்த்தி, 03. திமிலை மகாலிங்கம், 04. கரவைக் கபிலன், 05. பஸீல் காரியப்பர், 06. உமா மகேஸ்வரன், 07. மணியம், 08. வே. இராமநாதன், 09. ஆரையூர் அமரன், 10. ஆ. லோகேஸ்வரன், 11. மு. சுந்தரம், 12. முகிலன், 13. ஏ. இக்பால், 14. இளங்குமரன், 15. மு. பொன்னம்பலம், 16. குமரன், 17. புரட்சிமாறன் (யூ. ஸெயின்), 18. திமிலைக் கண்ணன், 19. ஆ. காமாட்சி, 20. ஜீவா, 21. ஆடலிறை, 22. ஆ.ச. கண்ணன், 23. ச.வே. பஞ்சாரட்சரம், 24. ஐயன்னா, 25. சோ. பரமசாமி, 26. துரைசிங்கம், 27. சபா ஜெயராசா, 28. வ. கோவிந்தபிள்ளை, 29. முத்து சிவஞானம்.

இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னெழுதியவர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தீர்கள். இதில் சிலர் உயிருடன் இல்லை. இவர்களது இலக்கிய வளர்ச்சியின் இன்றைய நிலையை நோக்குங்கள். இவர்கள் யாவரும் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் உயர்வினில் சிறந்து நிற்கிறார்கள். தனித்தனியாகப் பார்க்கும் போது, ஒவ்வொருவரது சிறப்பையும் விரித்து நோக்கலாம். ஐம்பது வருடங்களுக்கு முன் இவர்கள் எவரும் ஒரு நூலையாவது எழுதியதில்லை. இன்றையக் கணக்கில் ஒவ்வொருவரும் அநேக நூற்களை எழுதியிருக்கிறார்கள். இச்சிறப்பினை விரித்துப் பார்க்க வழிவகுத்தவர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் தான். யாழ். இளம் எழுத்தாளர் சங்க உபதலைவராயிருந்து கொண்டே, யாழ். தமிழ் இலக்கிய மன்றத்தையும் வழி நடத்திய பஞ்சாட்சரம் அவர்கள் வசதி படைத்தவரல்ல, இலக்கிய உணர்வில் ஊறியவர்.

இன்று புரவலர் புத்தகப் பூங்கா வெளியீடாக முப்பது நூல்கள் வந்துள்ளன. முப்பது நூலாசிரியர்களை தனது பணத்தின் மூலம் நிலை நிறுத்திய பெருமை புரவலர் ஹாஷீம் உமரைச் சாரும். ஐம்பது வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை நூலாசிரியர்கள் வரலாற்றில் பதியப்படுவார்கள். இம் முப்பது நூல்களின் பரவல் போதாது. அதை விரிவுபடுத்தல் அவசியம். தகவல் தொழில் நுட்பக் காலமிது. தொழில் நுட்பத்தால் தகவல்கள் பெருகினாலும், புத்தகப் பெருக்கத்தால் ஏற்படும் விரிவுக்கு எதுவும் நின்று பிடிக்காது. அறிவு விருத்திக்கு அதிக பலனளிப்பது புத்தகம்தான்.

இலக்கிய வரலாற்றைச் செம்மையாக எடுத்தியம்புவதும் புத்தகமே. புரவலர் புத்தகப் பூங்காவும் வரலாற்றில் இறுக்கமான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

இலக்கிய உலகில் நேர்மையாகக் கால் பதித்தவர்களை வரலாறு விட்டுவிடாது. அவர்களது வழிமுறைகள் மிகவும் நேர்த்தியானது. அவ்வழிமுறைகளுக்கு உதாரணமாக அமைந்த சிறப்பானவர்கள் மூவரைப் பற்றி அடுத்த அலசலில் பார்ப்போம். அம் மூவரின் பெயர்களையும் முறையாகத் தருகிறேன். பேராசிரியர் ஏ.எம்.ஏ. அஸீஸ், பேராசிரியர் சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் எம்.எம். உவைஸ்.  இவர்களுக்கிடையேயுள்ள மனிதத் தொடர்பு, கல்வித் தொடர்பு, இன்னும் பலவற்றை இறுக்கமாய்ப் பார்ப்போம்!!!

(இன்னும் வரும்)


1964 களிலெல்லாம் ஆக்க இலக்கியங்களில் ஈடுபாடுடைய என்னை சமூக ஆய்வு இலக்கியத்துள் திருப்ப முயன்ற அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் கல்வி, அரசியல், சமூகத்திற்கு உழைத்த முஸ்லிம்கள் பற்றிய வரலாற்று நூலொன்றை எழுதுமாறு பணித்தார்.

இளமைத்துடிப்பு, எழுத்தார்வம், தேடுதல் முயற்சியில் ஈடுபாடுடைய நான், உடனே அப்பணியை ஏற்றுக்கொண்டேன். தனிப்பட்ட ஓரிருவரை எழுதுவதைவிட பலரைத் தேர்ந்து எழுதுவதாக உத்தேசித்தேன். அதன் விளைவுதான் ஷமுஸ்லிம் கலைச்சுடர் மணிகள்| எனும் எனது முதலாவது நூல்.

ஒன்பது சுடர் மணிகள் பற்றிய நூல்தான் அது. அப்போது அறிஞர் சித்தி லெவ்வை, எம்.ரி. அக்பர், டி.பி. ஜாயா, அஹமத் பாரி இந்நால்வரும் உயிருடன் இல்லை. ஏனைய பதியுதீன் மஹ்மூத், ஏ.எம்,ஏ. அஸீஸ், சேர் ராசிக் பரீட், ஐ.எல்.எம். மஸ்ஹூர், திருமதி காலித் ஆகியோர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களை சந்திக்கும் வாய்ப்பிருந்தது. இப்போது இவர்கள் யாருமே உயிருடன் இல்லை.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட சம்பவம் அது. கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதயுதீன் மஹ்மூத் அவர்களைச் சந்திக்க அனுமதி பெற்றுச் சென்றேன். விஷயத்தை விளக்கமாகச் சொன்னேன்.

ஷஎன்னைத் தெரியுமா? நான் இரு அமைச்சர்களாக இருந்திருக்கிறேன். இந்தப் பதவிகள் சிறுபான்மை ஒருவருக்கு கிட்டாது. என்னைத்தான் முதலாவதாகப் போட வேண்டும்| என்றார்.

ஷஇந்தப் புத்தகம் எழுதுபவன் நான். அதை வெளியிடுபவன் நான். முதலாவது இரண்டாவது எனத் தெரிபவனும் நான் தான்| என்றேன்.

ஷஅப்படியென்றால் தர முடியாது| என்றார்.

ஷநீங்கள் குறுகிய காலத்துள் செய்த சேவைகள் அநேகம். தமிழ் படித்தவர்கள், எங்கள் சமூகத்தவர்கள் உங்களை அறிந்தது குறைவு. அதை நிறைவு செய்யவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். அது உங்களுக்கு விருப்பமில்லையானால் விடுகிறேன்| என்றேன்.

ஷநில்! இப்போது யாவற்றையும் தர முடியாதே| என்றார்.

ஷஎப்போது வர வேண்டுமோ அப்போது வருவேன்| என்றேன்.

ஷஅறிவிக்கின்றேன்| என்றார். வந்து விட்டேன். பின்பு அறிவித்து யாவற்றையும் பெற்றுக்கொண்டேன்.

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களைத் தவிர்ந்த ஏனையோரை இலகுவாய்ச் சந்திக்க முடிந்தது. ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களை அனுமதி பெற்று, அவர் தரும் நேரத்தில்தான் சந்திக்கலாம். அவ்விதம் அவரைச் சந்தித்தேன். கல்வி நிலையிலும், அறிவு நிலையிலும் கால்தூசான நானே அவரைச் சந்தித்தபோதே அவரது மேன்மை புரிந்தது. மனந்திறந்து தாராளமாகவே என்னை மதித்து அவர் கதைத்தார். காரணம் பின்புதான் புரிந்தது. அவர் அல்லாமா இக்பாலை மிகமிக விரும்புபவர். அதனால் இக்பால் என்ற பெயருடன் மிகப் பற்றுள்ளவர். அவரது மகனுக்கும் இக்பால் என பெயர் சூட்டி மகிழ்ந்தவர். எனது பெயர் இக்பால் ஆனதால் எடுத்த எடுப்பிலே மிகப் பற்றுள்ளவரானார். அதனால் அவர் இவ்வுலகை நீக்கும் வரை என்னுடன் இறுக்கமான தொடர்பு வைத்திருந்தார். நான் ஷபதியுதீன் மஹ்மூத் அவர்கள் தனது பெயரை முதன்மையாக்கச் சொன்னார்| என்ற விஷயத்தைச் சொன்னேன். அதற்கு அஸீஸ் அவர்கள் ஷஇலங்கை இந்தியா மாதிரி பெரிய நாடல்ல. இந்தியாவில் சகல விஷயத்திலும் சேவை செய்தவர்போல் இங்கு யாரும் இல்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பார்களே அந்தளவு செய்திருக்கிறார்கள். பதியுதீன் மஹ்மூத் அவர்களும் அவ்விதம் சேவை செய்தவர்தான். செய்துகொண்டுமிருக்கிறார். ஏன் நீ அவரை முதன்மையாகப் போடலாம் தானே| என்றார். நான் அதிர்ந்தே போனேன். அறிவியல் மேன்மை உடையவர் அஸீஸ் என்பது இவ்விடத்தில் புலனானது.

1965 பெப்ருவரியில் எனது ஷமுஸ்லிம் கலைச் சுடர் மணிகள்| நூல் வெளியானது.  அறிஞர் அஸீஸ் அவர்களையும் சேர்த்தெழுதிய நூலது.  அறிஞர் அஸீஸ் பற்றி எழுதியவர்களெல்லாம் நான் எழுதிய பின்பே எழுதியவர்கள் தான்.

1942 களில் அறிஞர் அஸீஸ் அவர்கள் உதவி அரசாங்க அதிபராக கல்முனையில் பதவியேற்றார். 1920 களில் யாழ்ப்பாணத்தில் சந்தித்த சுவாமி விபுலானந்தரின் உறவு இங்கே அஸீஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. 1943 களில் கல்லடி உப்போடை சிவானந்தாவில் சுவாமி விபுலானந்தரின் வேண்டுதலால் அஸீஸ் அவர்கள் அங்கே சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். 1944 களில் கண்டியில் அரசாங்க அதிபராக அஸீஸ் அவர்கள் கடமையாற்றிய காலம், சுவாமி விபுலானந்தர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றினார். இங்கேயும் அஸீஸ் விபுலானந்தர் உறவு மிக இறுகியது. இக்காலம் சுவாமி விபுலானந்தருக்கு தொற்று நோயான கொப்பளிப்பான் - அம்மை நோய் ஏற்பட்டதால் அஸீஸ் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்குச் சுவாமியைக் கூட்டி வந்து ஓர் அறையில் சுகமாகும் வரை பூட்டி வைத்துப் பராமரித்தார்.

சுவாமி விபுலானந்தர் கல்முனைக்கு அடுத்த காரைத்தீவில் பிறந்தவர். யாழ்நூலை  உலகறியச் செய்த மேதை விபுலானந்தருக்கு முஸ்லிம்களுடைய உறவும் இணைப்பும் அதிகம். அவருடைய பட்டமளிப்பு விழாவில் இரண்டாவது இடத்தை சாய்ந்தமருது மாளிகைக்காட்டைச் சேர்ந்த பிரபல வைத்தியர் முத்தலிப் பரிகாரி அவர்களுக்கே வழங்கினார்.

பாணந்துறை ஹேனமுல்லையில் கார்த்திகேசு மாஸ்டரிடமும் கா. சிவத்தம்பியின் தந்தை கார்த்திகேசு தலைமையாசிரியரிடமும் கல்விகற்று பல்கலைக் கழகத்துப் பிரவேசப் பரீட்சையில் சித்தியடைந்த எம்.எம். உவைஸ் அவர்களை பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களே பரீட்சிக்கிறார்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் பிரவேசப் பரீட்சையில் முதலாவது கேட்ட கேள்வி ஷசீறாப்புராணத்தை இயற்றிவர் யார்?| உவைஸ் அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பதில் தெரியாத உவைஸ் அவர்களை ஏற்றுக் கொண்ட சுவாமி அவர்கள் சீறாப்புராணம், இஸ்லாமிய இலக்கியங்கள் யாவற்றையும் அறிமுகம் செய்து படிக்குமாறு வேண்டுகிறார். சுவாமி விபுலானந்தர் அவர்களின் வழிகாட்டலான எம்.எம். உவைஸ் அவர்கள் இன்று இஸ்லாமிய இலக்கிய வரலாற்றாசிரியர், நூலாசிரியர் என தமிழ் நாடு, இலங்கை, தமிழ் கூறும் நல்லுலகெலாம் பிரசித்திபெற்று மிளிர்கிறார்.

1950 களுக்குப் பின் அறிஞர் அஸீஸ் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகிறார். அதிபர் அஸீஸ் அவர்களின் கீழ் ஆசிரியராக கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் பதவியேற்கிறார்.

இலக்கிய உலகில் அறிஞர் அஸீஸ் அவர்கள் எழுதிய ஏழு தமிழ் நூற்கள் முக்கியமானவை.

01. இலங்கையில் இஸ்லாம் - 1963
02. மொழிபெயர்ப்புக்கலை - 1965
03. மிஸ்ரின் வசியம் - 1967
04. கிழக்காபிரிக்கக் காட்சிகள் - 1967
05. தமிழ் யாத்திரை - 1968
06. அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் - 1968
07. ஆபிரிக்க அனுபவங்கள் - 1969

ஆங்கில நூல் ஒன்றும் உண்டு. அது மிகப் பிரசித்தமானதொன்று:- வுர்நு றுநுளுவு சுநுயுPPசுயுஐளுநுனு - 1964.

பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களும் தமிழ் இலக்கியம் சமயம் சார்ந்த பதினைந்து நூல்களை வெளியாக்கியுள்ளார். சிங்களத்தில் இரு நூல்கள் வெளிவரச் செய்துள்ளார். ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். காமராசர் பல்கலைக்கழகத்தின் வெளியீடான ஷஇஸ்லாமியத் தமிழ் இலக்கியம்| நான்கு பாகங்கள் மிக முக்கியமான நூல்களாகும். 22-1ஃ2ஓ14 மில்லிமீற்றர் அளவுள்ள அந்நூல்கள் முதலாம் பாகம் 631 பக்கங்களைக் கொண்டது. தொடக்கக் காலத்துடன் கி.பி. 1700 வரை இது ஷஇஸ்லாமிய இலக்கியம்| பற்றிக் கூறும். இரண்டாம் பாகம் 662 பக்கங்களைக் கொண்டது. இது இஸ்லாமியக் காப்பியங்கள் பற்றிக் கூறும். மூன்றாம் பாகம் 614 பக்கங்களைக் கொண்டது. இது சிற்றிலக்கியங்கள் பற்றிக் கூறும். நான்காம் பாகம் 680 பக்கங்களைக் கொண்டது. இது சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் பற்றிக் கூறும். இந்நூல்கள் வெளிவர, எழுத பக்கபலமாக நின்றவர் பேராசிரியர் டாக்டர் பி.மு. அஜ்மல்கான் அவர்களாகும்.

விபுலானந்த அடிகளார் கூட ஐந்து நூல்களை வெளியிட்டார்கள். அதில் முதலாவது ஷயாழ் நூல்| என்பதாகும். இது பழந்தமிழ் இசை நுட்பங்களை விஞ்ஞானமுறை ஆராய்ந்த பெருநூல். இந்நூல் உலகப் பிரசித்தமானது.

இம் மூன்று மிக ஆழமான கல்வி, அறிவு, இலக்கிய நோக்குடைய  சமுத்திரங்கள் பற்றிச் சுருக்கமாகவே அலசியுள்ளேன். இந்த அலசலை வைத்து விரித்துப் பாருங்கள். அதன் சிறப்பு விளங்கும்!!!

(இன்னும் வரும்)


1962 பெப்ருவரி 07ஆந் திகதி புதன் கிழமை கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது பொதுக் கூட்டம் கவிஞர் நீலாவணன் தலைமையில் நடந்தேறியது. கல்முனை எழுத்தாளர் சங்கம் உதயமானதன் நோக்கம் எஸ். பொன்னுத்துரைக்கு பாராட்டு விழா ஒன்று எடுப்பதற்காகவேதான். அக்கூட்டத்தில் எஸ். பொன்னுத்துரையை பாராட்டும் விதத்தில் ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும் என என்னைக் கேட்டனர்.

சிறுகதை எழுதுவதில் மிக ஆர்வமுள்ள எஸ். பொன்னுத்துரை, எதையும் எழுதியவுடன் வெளியாக்குவதில்லை. ஊறப் போட்டு மீண்டும் மீண்டும் திருத்தம் செய்தே வெளியாக்குவார். வாசிப்பில் மிக அக்கறை செலுத்தும் நான் சிறுகதையின் நுணுக்கங்களை ஆய்வதுடன், நானும் சிறுகதை எழுதுவேன். இந்த அனுபவத்தால் ஷஷசிறுகதையும் உத்திகளும்|| எனும் தலைப்பில் பேசுவதாக ஒத்துக்கொண்டேன்.

கல்முனை எழுத்தாளர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தவர்கள் நீலாவணன், எம்.ஏ. நுஃமான், யூ.எல்.ஏ. மஜீத், பஸீல் காரியப்பர், நானும் இன்னும் சிலரும். எனது பேச்சில் பொன்னுத்துரையின் கதைகளுக்கே முதலிடம் அளித்தேன்.

உத்தி (வுநஉhnஙைரந) களில் முதலாவதாக பிரக்ஞை ஓட்டம் (ளுவசநயஅ ழுக ஊழளெஉழைரளநௌள) தன்னிலைப் போக்கானது. பாத்திரம் தன்மை நிலையை உணர்த்தி வெளிப்படும். எஸ். பொன்னுத்துரை ஷஷசைவர் (0) பூஜ்யமல்ல|| என்றொரு கதை எழுதியுள்ளார். அ. முத்துலிங்கம் கூட ஷஷஅக்கா|| எனும் கதையை எழுதியுள்ளார். அவரது ஷஷஅக்கா|| எனும் கதைத் தொகுதியில் இக்கதை உண்டு.

ஷஷஅக்கா|| எனும் கதையை எட்டாம் வகுப்பு தமிழ் நூலில் பிற்காலத்தில் சேர்க்க எத்தனித்தபோது, க. கைலாசபதி அவர்கள் ஷஅந்த வகுப்புக்கு உரியதல்ல| என்றதால், காவலூர் இராசதுரையின் கதை ஒன்றையே சேர்த்தேன்.

அடுத்து எஸ். பொன்னுத்துரையின் ஷஇரத்தம் சிவப்பு| எனும் கதை உப பாத்திரம் மேலெழுந்தே கதை கூறும். இதை சுஐNபு டுயுசுனுநுN வுநுஊர்Nஐஞருநு என்றே கூறுவர்.

அடுத்து குடுயுளுர் டீயுஊமு பின்னோக்கல் உத்தியில் ஷமேடை|, ஷவீழ்ச்சி| எனும் கதைகளை எஸ்.பொ. எழுதியிருக்கிறார். ஷஜீன்போல் சாட்டோ| எனும் மேல்நாட்டவரே இவ்வுத்தியை அதிகமாகக் கையாண்டவர் எனலாம்.

பத்திரிகைச் செய்தி போல படர்க்கை உத்தியை ஷஹெமிங்வே| என்பவர் கையாண்டார். இந்த உத்தியில் எஸ்.பொ. எழுத முனையவில்லை. இது பத்திரிகை செய்தி போல இருக்கும்.

முக்கியமான ஒரு விசயம்! எஸ்.போ. ஷகுமிழ்| என்ற ஒரு கதையை எழுதி, இது நான் உண்டாக்கிய உத்தி எனக் கூறி, அந்த உத்திக்கு ஷநினைவுக் குதிர்| எனப் பெயரிட்டார். அவரது கர்வம் காரணமாக இந்தச் செய்திகள் இலக்கிய உலகத்துக்குத் தெரியவில்லை. அவரது போக்குக்கும் திறமைக்கும் ஒற்றுமை ஏற்படவில்லை. நாங்களும் ஒதுங்கிக் கொண்டோம்.

புதுமைப் பித்தன், ரகுநாதன், தி. ஜானகி ராமன், கு. அலகிரிசாமி, தி. ராஜ நாராயணன் என்று தொடரும் முக்கிய எழுத்தாளர்களை கரைத்துக் குடித்து சர்ச்சை செய்தபோதும் லா.ச. ராமாமிருதம் எழுதியவைகள் மற்றவர்களிலும் வித்தியாசமானவையே. இவரது ஜனனி, தயா, மீனோட்டம், சிந்தாநதி, பச்சைக் கனவு, அலைகள், முற்றுப் பெறாத தேடல் அவள் பிராயச்சித்தம் ஆகிய நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும். இன்றும் இவரது நடையழகு மனதில் நின்று மகிழ வைக்கின்றது.

இந்த உணர்வில் உத்திகளை சிறப்பாகக் கையாண்டு சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நினைப்பில் உண்மைச் சம்பவங்களை வைத்தே ஷமாயத் தோற்றம்| சிறுகதைத் தொகுதி நூல் ஒன்றை தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகை பெற்று 1998 களில் வெளியாக்கினேன்.

தற்காலம் சிறுகதை பற்றியெல்லாம் கருத்துரை வழங்குபவர்களுக்கு இந்நூலிலுள்ள ஒன்பது கதைகள் கண்ணில் பட்டதாகத் தெரியவில்லை. இந்நூலை வாசித்த `றிம்ஸான் பாறூக்' எனும் சிங்கள மொழி எழுத்தாளர் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். தெற்கிலிருந்து மிக விரைவில் இந்நூல் வெளிவரும்.

இலங்கையிலிருந்து வெளியான சிறுகதைகள், சிறுகதை எழுத்தாளர்கள் பற்றி நானிங்கு சிலாகிக்கவில்லை. அம்முயற்சியை இன்னொரு அலசலில் தெளிவாக்கயிருக்கிறேன்.

தற்காலம், சம்பவங்களைப் பத்திரிகைச் செய்திபோல் எழுதும் சிறுகதைகளே வெளிவருகின்றன. அவற்றை எழுதுபவர்கள்கூட சிறுகதைகள் பற்றி அறிந்தவர்களா? என்பது கேள்விக்குறியே. இம்முயற்சியில் ஒரு சிலர் இருந்தபோதும் வாசிப்பு, வரலாறு தெரிந்தவர்களாகத் தெரியவில்லை.

எழுதத் துணியும் இளவட்டங்கள் நிறைய வாசிக்க வேண்டும். ஷதி. ஜானகிராமன் நாவல் கலை|, ஷபுதுமைப் பித்தன் தழுவல்கள்|, `கு. அழகிரிசாமியின் எழுத்துக்கள்' என வெளியாகியுள்ள நூல்களை எழுத்துலகில் புகுபவர்கள் நிச்சயமாகப் படிக்க வேண்டும்.

க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், இலக்கியமும் திறனாய்வும், ஒப்பியல் இலக்கியம், இலக்கியச் சிந்தனைகள், திறனாய்வுப் பிரச்சனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஆகிய நூல்களை நிச்சயம் படிப்பதுடன் இன்னும் பலர் எழுதிய விமர்சன நூல்களைப் படிப்பதால் நமது சிந்தனை தெளிவு பெறும்!!!

(இன்னும் வரும்)இலக்கிய அனுபவ அலசல் - 09

கவிஞர். ஏ. இக்பால்

இலக்கியம் என்பது சமூக அமைப்பையும், பிரதேச வாழ்க்கை முறைகளையும், சிந்தனைப் போக்குகளையும் அடக்கியதாகவே காணப்படும். இலங்கை இலக்கியம் இருவேறுபட்ட மொழிகளில் பிறந்தபோதும் வரலாற்று ரீதியில் மனிதத்துவ பண்பாட்டைப் பிரதிபலிக்கும். அவ்விதம் பிரதிபலித்தே வந்துள்ளமை கண்கூடு. பண்பாட்டின் ஏற்றத்தாழ்வை மதிப்பீடு செய்து உணர்த்த முடியும். பண்பாடு மாறுமே ஒழிய அழிந்து விடாது. இலங்கை இலக்கியங்கள் இலங்கைப் பண்பாட்டை வரலாற்று ரீதியில் எடுத்துக்காட்டும்.

இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றிய இலக்கியங்கள் வர்த்தக நோக்கில் முதலாளித்துவ சிந்தனையுடன் பிரிடிஷ்ஷாரின் கல்வி முறையோடு ஒத்ததாக அமைந்துள்ளன. இச்சிந்தனை வேறுபாட்டைத் தீர்க்கக்கூடிய தேசிய கல்வி 1956 இற்குப் பின்தான் ஏற்பட்டதெனலாம். வடக்கு, கிழக்கு, மேற்கு, மலைநாடு ஆகிய பிராந்தியங்களில் சிங்களத்திலும், தமிழிலும் இலக்கியத் தோன்றல் வரலாறு பெரும் வித்தியாசமாகவில்லை. பாளி, பிராக்கிருதம், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளின் ஊடாட்டம் இலங்கை தேசிய இலக்கியத்தை கட்டியெழுப்பியதெனலாம். இலக்கியத்தின் சாதனை தேசியத்தை பின்னணியாகக் காட்டுவதுதான்.

தேசியவாதத்தின் முன்னும் பின்னும் எழுந்த சிங்கள தமிழ் இலக்கியங்களின் பொருளை ஆய்ந்து நோக்கும்போது, இலங்கைப் பண்பாடு எவ்விதம் வளர்ந்துள்ளது என்பதை அறிய முடியும். ஒருநாட்டின் பாரம்பரிய பண்பாட்டு முறைகள் உயிரிலும் மேலாக பாதுகாக்கப்பட வேண்டியவைகள். இவை இலக்கியத்தில் பொதிந்துள்ளமையால் தேசிய இலக்கிய பரிணாமம், பரிமாணம் எவ்விதம் விரிந்துள்ளன என்பதைக் காணலாம்.

இலங்கையில் எழுந்த சிங்கள தமிழ் இலக்கியங்கள் காலவேறுபாடில்லாமல் அடுத்தடுத்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதனால் தேசிய இலக்கியப் பண்பாட்டின் இடைவெளியை நெருக்கிச் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இந்நாட்டின் மூன்று இனங்கள் இருமொழி பேசுவதினால் இருமொழிகளின் இறுக்க பலம், மூவினத்தையும் ஒன்றாக்கிச் சமாதானத்தை ஏற்படுத்தும். இந்த வழியை இனவாதிகள் எங்களுக்குக் காட்டித் தரவில்லை. இனிமேலும் இவ்விடயத்தில் நாம் இடர்பட முடியாது.

ஒருமுறை இலங்கையில் கடுமையான யுத்த சூழல் காலத்தில் கலைஞர் ரோஹண பத்த அவர்கள் களுத்துறைக் கல்வித் திணைக்களத்தில் சந்தித்த போது 'இலங்கையின் சிங்கள தமிழ் முஸ்லிம் கலை இலக்கியவாதிகளை ஒன்று கூட்டி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என என்னிடம் கேட்டார். 'இந்தக் கடுமையான யுத்த காலச் சூழலிலா?' என நான் பதில் கேள்வியைத் தொடுத்த போது, 'கலை இலக்கியவாதிகளுக்கும், யுத்தம், எதிர்ப்புகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை' என மனந்திறந்து கூறினார். உண்மையில் இந்நாட்டின் இலக்கியத்தாலும், கலை இலக்கியவாதிகளாலும் மட்டுமே ஒரு சமாதான சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர முடிகிறதல்லவா?

1940களில் டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்தபோது அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உண்டாக்க முயற்சி எடுத்தவர் மலைநாட்டைச் சேர்ந்த கே. கணேஷ் அவர்கள்தான். சிங்கள தமிழ் எழுத்தாளர்களை முதன் முதல் இணைத்து உருவாக்கிய சங்கம் இதுதான். கொம்பனித் தெருவில் உள்ள பொல்ஸ்கி ஹோட்டல் (தற்போது இது நிஸ்போன் ஹோட்டல்) இங்கே தான் இச்சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் சுவாமி விபுலானந்தர், உப தலைவர் மார்டின் விக்கிரமசிங்க, இணைச் செயலாளர்கள் டாக்டர் சரத் சந்திர, கே. கணேஷ், பொருளாளர் பி. கந்தையா. இச்சங்கம் நினைத்திருந்தால் நிச்சயம் இந்நாட்டில் இன்றைய குழப்ப நிலை ஏற்பட்டிராது. இலக்கியத்திற்கு இத்தனை உந்து சக்தி உண்டு. நாம் இனிமேலாவது இச்சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

மனித மதிப்பீடுகளை மிக உன்னதமாகத் தருவது இலக்கியம்தான். மனித மதிப்பீடுகளைப் பற்றிய குறிக்கோளுடன் தேசியக் கல்வி அமையும் போதுதான் ஜனநாயகமும், இலக்கியமும் முன்னேற்றமடையும். இலக்கியத் தத்துவம், வரலாறு ஆகிய சலாசாரப் பாடங்களுக்கு, கற்கும் இடங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கலாசாரப் பிரக்ஞை ஆழமாக நடைமுறைப்படும். இந்நடைமுறை நம் தேசியக் கல்வியில் இருந்த போதும் கற்பிப்பவர்கள் இதை ஆழமாக நோக்குவதில்லை. அதனால்தான் கலாசாரப் பிரக்ஞை கற்பவருக்கு இல்லை. இந்த உணர்ச்சியை நம்நாடு உன்னிப்பாக கற்பவர்களிடத்தில் ஊன்றுதல் வேண்டும். அப்போதுதான் கற்பவர்களிடையே ஒழுக்க விழுமியம் மிக இறுகி நிற்கும். இலக்கியத்தை தீவிரமாகக் கற்கும் மாணவனால்தான் மனித அனுபவங்களின் தாற்பரியத்தை உணர முடியும். மனிதத்துவத்தை உணராதவிடத்து பண்பாட்டு விருத்தி ஏற்படாது. பண்பாட்டு விருத்திதான் இலக்கியத்தில் ஊன்றி நிற்கும் மிக உன்னத பொருளாகத் தொனிக்கும்.

மனித குலத்தின் வளர்ச்சியை இலக்கிய வரலாறே எடுத்துக் காட்டும். வரலாற்றுப் பாரம்பரியம் இலக்கியத்துள் நுழைந்திருப்பதால் கடந்த காலத்தையும் தற்காலத்தையும் புரிந்து கொள்ளலாம். சிந்தனையை வளர்க்கக் கூடிய இலக்கியங்கள் ஆய்வுகள் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றன. ஆகையால் இலங்கையன் ஒருவன் இருமொழி இலக்கியப் பயிற்சியுடன் உலக இலக்கியத்தை நோக்க வேண்டும். அப்போதுதான் தேசிய இலக்கியம் உலக இலக்கியத்துள் சென்றடையும்.

உலக இலக்கியம், தேசிய இலக்கியம் யாவும் விரிவடைதலுக்கு வெகுசனத் தொடர்பு சாதனங்கள் செல்வாக்குச் செலுத்தும். இச் செல்வாக்கு சில வேலைகளில் சிந்திக்கும் பழக்கத்தையே மறதியிலாக்கும். இச் செயற்பாட்டைச் செய்வதற்குரிய அபாயத்திலிருந்தும் இலக்கியத்தைக் காப்பாற்றுதல் மிக முக்கியம். ஊடகவியலாளர்கள் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் அல்லர். அதே வேளை இலக்கிய கர்த்தாக்கள் ஊடகவியலாளர்களாக முடியும். இலக்கிய கர்த்தாக்கள் அவ்வாறு இருப்பதனால்;தான் பண்பாட்டு ஒழுக்க சீலம் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்பதை இலக்கியமே உணர்த்தும்.

கடந்த காலங்களில் உன்னத மதிப்பீடுகளைக் காத்து நின்ற சமயம், தத்துவம், கலைகளின் கலாசாரக் கேந்திரங்கள் இன்று கரைந்துவிட்டனவா? என எண்ணத் தோன்றுகின்றது. அவ்விதம் நடந்து விடாமல் இத்தொடர்பைத் தீவிரப்படுத்தல் அத்தியாவசியம்.

நமது கலாசாரத்தைப் பேணும் இலக்கியங்களை விமர்சனம் செய்யும் சிந்தனைப் பலம் நம்மிடையே இருக்க வேண்டும். அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையை முழுமையாகத் தரிசிக்கும் சீரிய இலக்கியத்தை வாசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மனித குலத்தை இலக்கியமே உய்விக்கும் எனும் உன்னதக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்குரிய இலக்கியத்தை நமது தேசியம் ஆக்கித் தர வேண்டியது அவசியமே.

இன்றைய இலக்கிய உலகில் உயிரோடுள்ள இலக்கியப் படைப்பாளிகளை ஒன்று சேர்த்தல் வேண்டும். இலக்கிய சிந்தனை விரிந்த இக்காலத்தே அறிவுத் தேர்ச்சி பெற்ற உலக வல்லுனர்களைக் கொண்டே ஆராய்ச்சி நடத்தி உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

ஐ.நா வின் யுனெஸ்கோ, கலாசார முறையில் புதிய நடைமுறையாக அரபு மொழி, பர்மிய மொழி, சீன மொழி, கொரிய மொழி, இந்தோனேசிய மொழி, ஹிப்ரு மொழி, ஜப்பானிய மொழி, உருது மொழி, தாய்லாந்து மொழி, வியட்னாமிய மொழிகளிலெல்லாம் இருந்தும், இந்திய மொழிகளான வட மொழி, ஹிந்தி, வங்காளி, தமிழ் மொழிகளில் இருந்தும் சிறந்த புனைக் கதைகளையும், கவிதைகளையும் பிரென்சு, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக இலக்கியத் துறை நோக்கி ஓர் அணியை உருவாக்கி உள்ளது. இம் முயற்றி 1971களில் தொடங்கியது. இக்காலம் அதன் வளர்ச்சியின் எல்லை என்ன? எனக் கணக்கிட்டு, இலங்கை இலக்கியத்தின் உலகளாவிய நிலையைக் கண்டு இன்னும் நமது இலக்கியத்தை உயர்த்தி வளர்த்தல் மிக முக்கியம்.

தேசிய ரீதியில் சிங்கள தமிழ் இலக்கியங்களின் பண்பாட்டுக் கலாசார வழி இரு மொழி பேசும் சிங்கள, தமிழ், முஸ்லிம்களான மூவின மக்களையும் இணைக்கும். இந்த வழியை இலக்கியம் மூலம் நாம் வழிநடத்தும் போது தேசியப் பண்பாடும் மனிதத்துவ சமாதான நிலைப்பாடும் ஒன்றித்து மனித குலத்தை மேன்மைப்படுத்தும். இந்த உன்னத வழியை மேன்மைப்படுத்த இலக்கியமே முன்னின்று உழைக்கும் வல்லமை உடையது. மனித குலத்தைச் சமாதானப்படுத்தும் முக்கிய சாதனம் இலக்கியம்தான்.

(இன்னும் வரும்)