பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, 3 December 2012

மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு

மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு

கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு 02.12.2012. ம் திகதி காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரி. கபிபுள்ளா மௌலவி தலைமை தாங்கினார். கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். கவிஞர் பி.ரி. அஸீஸ் மற்றும் பிரதம அதிதிகளான டொக்டர் ஹில்மி மஹரூப்;, ஆர்.எம். அன்வர் ஆகியோர்கள்; உரையாற்றுவதையும் காணலாம். மேலும் புன்னகை இலக்கிய மன்றத்தினால் அதன் தலைவர் கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி மற்றும் பேனா சஞ்சிகை ஆசிரியர் ஜே. பிரோஸ்கான் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.Friday, 23 November 2012

கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல் வெளியீடு
அழைப்பிதழ்

கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல் வெளியீடு

காலம் - 02.12.2012 ஞாயிற்றுக் கிழமை
நேரம் - காலை 08.30 மணி
இடம் - கிண்ணியா பொது நூலக கேட்போர்கூடம்

இந் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கின்றோம்

பாத்திமா றுஸ்தா பதிப்பகம், பெரியாற்றுமுனை கிண்ணியா 07.

பிரதம விருந்தினர்கள்:-
                                நஜீப் அப்துல் மஜீத் (கிழக்கு மாகாண முதலமைச்சர்)
டொக்டர் ஹில்மி மஹரூப் (கிண்ணியா நகர பிதா)  
                                ஆர்.எம். அன்வர் (மாகாணசபை உறுப்பினர்)

நிகழ்ச்சி நிரல்

கிராத்
வரவேற்புரை - எம்.ரி. சபருள்ளா கான் (நூலகர்)
தலைமை உரை - எம்.ரி. கபிபுள்ளா மௌலவி
நூல் ஆய்வு - கவிஞர் எ.எம்.எம். அலி
சிறப்புரை          - கவிமணி கௌரிதாசன்

பிரதம விருந்தினர்கள் உரை

பிரதிகள் வழங்கள்

ஏற்புரை - நூலாசிரியர் பி.ரி. அஸீஸ்

நன்றியுரை - அஸீஸ் அல்ராஸீஸ்

நிகழ்ச்சித் தொகுப்பு - கவிஞர் எ. நஸ்புள்ளாமாண்புறும் மாநபி நூல் வெளியீடு

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 2011 ஆம் ஆண்டில் சிறந்த நூற் தெரிவில் பரிசு பெற்ற கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மற்றுமொறு நூலான மாண்புறும் மாநபி கவிதை நூல் எதிர்வரும் 02.12.2012 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத், கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் உட்பட பல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தின் 07 ஆவது வெளியீடாகும்.
இந்நிகழ்வில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

Thursday, 15 November 2012

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ்

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள 
கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ்
வாழ்க்கைக்  குறிப்பு

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி 
46/3 பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த கவிஞர்  பி.ரி அஸீஸ் பிச்சை தம்பி  ஹாஜரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராவார்.

முள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மாஹாவித்தியாலயம், 
பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை, கிண்ணியா  மத்திய கல்லூரி, 
என்பவற்றின் பழைய மாணவரான இவர் கல்வி, கலை, இலக்கியம், சமூக சேவை, அரசியல் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர்.


இலக்கியத்துறை

இலக்கிய உலக பிரவேசம் 1972
எழுதிய முதலாவது கவிதை – 'பேசும் தெய்வம்' சிறுவர் பாடல்
வெளிவந்த பத்திரிகை தினகரன்
அதன் பின் 'கிண்ணியா செல்வன்'  என்னும் புனைப் பெயரில் பல
ஆக்கங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது.

பத்திரிகை

தினகரன், வீரகேசரி, மித்திர

ன்

, தினமுரசு, 
தினக்குரல, சுடர் ஒளி, 

விடி வெள்ளி  போன்ற பத்திரிகைகளிலும்

சஞ்சிகை

ராதா, சுந்தரி, புதுமை நெஞ்சங்கள், கமல
ம்
, பேனா, சிறகு, 
பூங்காவன
ம்
, மொழி, ஓசை, கவிச்சர
ம்
, அலையோசை, 
நவரசம், புதுப்பாதை  போன்ற சஞ்சிகைகளிலும் 


வலைத்தளம்

தமிழ் மிர்ரர், கிண்ணியா நெட் ,  
பூங்காவன
ம், 
  கலை மக
ன்
கீற்று ஆகிய வலைத்தளங்களிலும்  இவரது ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ள
.


இடைக்காலத்தில் தடைப்பட்டடிருந்த இவரது இலக்கியப் 
பயணம் தற்பொழுது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. 

கவிதை
கிராமியக்கவி
தாலாட்டுப்பாடல்
சிறுகதை
குறுங்கதை

என்பவற்றில் இவர் சிறந்து விளங்குகின்றார்.இதுவரை பெற்ற பட்டங்கள்

01. சாம கவி - 2005 சர்வோதயம்
02. கலைத்தென்றல் - 2008 கிழக்கு மாகாண நூலக ஒன்றியம்
03. கிராமியக் கவிகளுக்கோர் அஸீஸ் - 2011 கிண்ணியா நகர சபை
04. கவிச்சுடர் - 2012 பூங்காவனம் பதிப்பகம்
05. தேச கீர்த்தி - 2012 அகில இன நல்லுறவு ஒன்றியம்விருதுகள் 01. சிறந்த கவிதைக்கான விருது  - 1989 இளைஞர் கலாசார போட்டி
02. சிறந்த நூலுக்கான விருது - 2012 கிழக்கு மாகாண சாகித்திய விருது
03. சிறந்த கிராமியக் கவிக்கான விருது - 2012 தேசிய வாசிப்பு மாதம்
04. சிறந்த கவிதைக்கான விருது - 2012  கிண்ணியா நகர சபை


வெளியிடப்பட்ட சஞ்சிகை

01. அலையோசை - 1980 இருமாத கலை இலக்கிய வெளியீடு
02.  கவிச்சரம் - 1981 காலாண்டு கவிதைச் சஞ்சிகை
03. முத்துக்கள் - 1981 கையெழுத்துப் பத்திரிகை

நூல்கள்

01. உணர்வூட்டும் முத்துக்கள் - 2011
02. சிறுவர் பாடல்கள் - 2011
03. அஸீஸ் கவிதைகள் மேலதிக இணைப்பு  - 2011
04. கிராமிய / நாட்டர் பாடல்கள் - 2011
05. தாலாட்டுப் பாடல்கள்  - 2011
06. மாண்புறும் மாநபி - 2012
07. உதயம் சிறுவர் பாடல்கள் - 2012
08. சுகம் தரும் கிராமியக்கவிகள் - 2012

வெளிவரவிருக்கு

ம் 
நூல்கள்
01. முஸ்லிம்களின் அறிவுக் கண் திறந்த 
முருகுப் பிள்ளை காசி நாதர்
02. நினைவொன்றே போதும்


தொழில்

பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் 1981 - 2008
வெளிக்கள உத்தியோகத்தர்  2008 - இன்று வரை

சுகாதார சேவையில் இலங்கை தொழிநுட்பவியலாளர் சேவையில் 
முதலாம் தர உத்தியோகத்தராக 1996 முதல் 


அங்கத்துவம் வகிக்கும் இலக்கிய அமைப்புகள்

01. கிண்ணியா கலை இலக்கிய மன்றம்
02. புன்னகை எழுத்தாளர் மன்றம்
03. பூங்காவனம் இலக்கிய வட்டம்


நூல் வெளியீட்டு நிகழ்வுகள்தேசிய வாசிப்பு மாத நிகழ்வில்

கவிஞர் பி.ரி அஸீஸ் அவர்களது எதிர் காலம் சிறக்க எமது மனம் திறந்த வாழ்த்துக்கள்.

தொகுப்பு  : - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா

Monday, 5 November 2012

2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவில் விருதும் கௌரவமும் பெற்ற கவிஞர் பி.ரி அஸீஸ்

2011ம் ஆண்டில் கவிஞர் பி.ரி அஸீஸ் எழுதிய அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள் என்னும் கவி நூல் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பபட்டுள்ளது. இதற்;கான கௌரவமும் விருதும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகாணந்தா கல்லூரியில் 18.10.2012ம் திகதி இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்ரம முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீர திசாநாயக்க உட்பட மாகாண சபை அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.அண்மையில் திருகோணமலை இடம்பெற்ற இலக்கிய விழாவின்போது கவிஞர் பி.ரி அஸீஸ் திரு. கே.எஸ் சிவகுமாரன் கவிஞர்கள் திருமலை நவம் ஷெல்லிதாசன் ஆகியோருடனும் மேமன் கவியுடனும் எடுத்துக் கொண்ட படங்கள்.
Monday, 1 October 2012

பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை


பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை

எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை


மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம்இ இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது.


இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.

தமது இலக்கியப் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கைக்கொண்டதனால் தனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும், தந்தை முதற்கொண்டு பல ஆசான்களுக்கும் அவருக்கு எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடியலின் விழுதுகள் 16 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியாகும். இதயத்தின் ஓசைகள் ஒரு கவிதைத் தொகுப்பாகும். முதுசம் 2500 க்கும் மேற்பட்ட பொன்மொழிகளை உள்ளடக்கிய நூலாகவும் காணப்படுகிறது. பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பரீட்சை வழிகாட்டி நூலாகத் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே வேளை, நூல் வெளியீடு என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் என்பதனால் தனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட்டதாகக் குறிப்பிடும் அவர், படைப்புகளுக்கான விமர்சனங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்று. அவை குறைகளை மாத்திரம் சுட்டிக் காட்டாமல் நிறைகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். தனது வானொலித் தொடர்பு 1985 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பின் படிப்பை மேற்கொள்ளும் போது விரிவுரையாளர் திருமதி பூமணி குலசிங்கம் அவர்களின் தொடர்பு கிடைத்ததனால் ஏற்பட்டதாகக் கூறும் அவர், வானொலிக் கலந்துரையாடல்கள் உட்பட நிகழ்ச்சிப் பிரதிகள் மூலம் பங்களிப்புச் செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயன்வத்தை நூராணியா மகாவித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றிலும் ஆசிரியையாகக் கடமையாற்றி 28 வருடங்கள் ஆசிரியப் பணிபுரிந்துள்ளார். இலக்கியத் தாரகை, கலாபூஷணம், சாமஸ்ரீ தேசமான்ய பட்டமும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ள ஒரு பெண் படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தம் சுகம் ஒன்றையே கருதி தவறான வழியை நாடும் ஒவ்வொரு காதலரும், தமக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சமூக அந்தஸ்துடன் வாழ நேரும் போது தப்புக்கள் என்றோ ஒரு நாள் வெளியாகி தமது பிள்ளையை ஈட்டியால் குத்தும் என்பதை உணராது தவறுக்கு மேல் தவறு செய்கின்றனர். களவை நாடுமுன் அன்றே அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டிருந்தால் பர்சான் போன்ற இபாதத்துடன் (மார்க்கப் பற்றுடன்) வாழும் நல்லவர்கள் வாழ்க்கை நாசமாகிவிடாது என்பதைப் புலப்படுத்துகிறது மருதமுனை றாபி எஸ். மப்ராஸ் எழுதிய என்றோ செய்த விணை என்ற சிறுகதை.

அதே போன்று சிறுபிள்ளைகள் மனதில் விதைக்கப்படுகின்ற எண்ணங்கள் உண்மையானவைகளாகவும், தெளிவானவைகளாகவும் இருக்க வேண்டும். சமாளிப்புக்களாக அவை இருக்கும் பட்சத்தில் அந்தப் பிள்ளையின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றதொரு கருத்தினைத் தாட்சாயினியின் தொடராத சொந்தங்கள் என்ற சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

காதல் என்பது வயதின் தேவைதான். என்றாலும் காதலிக்கும் போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் பாதுகாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.  பொய் வாக்குறுதிகளை அளிப்பதனால் ஆணோ, பெண்ணோ இருவருமோ பாதிக்கப்பட நேருகிறது. முடிவில் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும். அத்தகையதொரு காதல் ஜோடியைச் சிதையாத இதயம் தந்திருக்கிறது. கதையில் வரும் காதலி வீணா தன் மாஜிக் காதலன் பாபுவின் நிலை கண்டு இறுதி நேரத்திலும்இ அவனுக்கு உதவ முன்வந்தது அவளது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் போனது பாபுவின் துரதிஷ்டம்தான் என்பதைத் தனது கதையினூடே பொத்துவில் மனாப் எடுத்துக் காட்டுகிறார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இதிலே பலர் இரவலாகத் தன்னிடமிருந்து எடுத்துச் சென்ற பெருமதி வாய்ந்த புத்தகங்கள் திரும்பி வராததைப் பற்றி ஆதங்கித்து எழுதியிருக்கிறார். அவரது குருகுல சீடர்களில் ஒருவரான பதுளை பாஹிரா அழகான ஒரு கவிதையையும் தந்திருக்கிறார்.

பேரும் புகழும் தேடி அலையும் மனிதனைப் பற்றி லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் திருக்குறள்இ அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கிய நூல்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி சிறந்ததொரு கட்டுரையைத் தந்துள்ளார்.

நீலாவணை ம. புவிலக்ஷி, புத்தளம் ஜுமானா ஜுனைட், யோ. புரட்சி, மருதூர் ஜமால்தீன், பூனாகலை நித்தியஜோதி, கலைமகன் பைரூஸ், கிண்ணியா பி.ரி. அஸீஸ், நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரது கவிதைகளும் இதழில் இடம்பிடித்துள்ளன.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலுக்கான மதிப்பீட்டை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். இன்னும் இன்னும் அந்தக் குரலைக் கேட்கக் கூடாதா? என்ற ஆர்வத்தை அது தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு இலக்கியவாதியும், வாசகனும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வாசகர் கருத்துக்கள், வரப்பெற்ற நூல்களின் விபரங்கள் உட்பட பூங்காவனம் துணையாசிரியர் செல்வி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூல்வெளியீட்டுப் புகைப்படங்கள் பின் அட்டையின் உட்பக்கத்தை அலங்கரித்து பூங்காவனத்தின் பத்தாவது இதழை மணம் கமழச் செய்கிறது!!!

இதழின் பெயர்- பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை
இதழாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி – 0775009222
விலை - 80 ரூபாய்

Monday, 24 September 2012

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.

குறிப்பு:- தயவு செய்து உங்களில் ஒவ்வொருவரும் சந்தாதாரராகி எமது இலக்கிய முயற்சிகளுக்கு கைகொடுங்கள். தொடர்ந்து சஞ்சிகையைப் பிரசுரிக்க வேண்டும் என்பது எமது விருப்பம். உங்களால் இயன்ற அன்பளிப்புக்களையும் வழங்கி எமது முயற்சிக்கு கைகொடுக்க முடியும். 

ஏன் என்றால் இப்படி சஞ்சிகைகளைத் தொடர்ந்து வெளியிடும் போது நிதிப்பிரச்சினை ஏற்படுகின்றது. 


நண்பர்களே உங்களால் முடிந்த உதவிகளைச் செய்தால் சந்தோசப்படுவேன். பூங்காவனம் 11 ஆவது இதழ் பிரசுர வேளைகள் ஆரம்பித்துள்ளன.

கீழுள்ள வங்கிக் கணக்கிலக்கத்துக்கு உங்கள் அன்பளிப்புக்களை வைப்புச் செய்யலாம். அல்லது எனது பின்வரும் வங்கிக் கணக்கிலக்கத்துக்கும் வைப்புச் செய்ய முடியும்.

Bank of Ceylon, Dehiwala Branch, M.F.Rimza, A/C No. 2017143. பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்.

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Poongavanam Publication முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் 10 வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சஞ்சிகையின் இதழ்களில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன், ஆக்கங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

இச் சஞ்சிகைக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன, பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது சந்தாவாக 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்துகொள்ளலாம்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank, Mount Lavinia Branch, Best Queen Foundation, Account Number:- 8930016177.

என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza – Dehiwala Post Office)என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

The Editor “Poonga Vanam Magazine” 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.

Mobile:- 077 5009 222

E-mail:- bestqueen12@yahoo.com

Website:- www.bestqueen12.blogspot.com

யாழ் இலக்கிய குவியம் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பற்றி

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த எச்.எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் எழுதி வரும் ரிஸ்னா,

2004 இல் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்ட கவிதைகளைஎழுதியுள்ளார்.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், இருக்கிறம், வேகம், நமது தூது போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், நிறைவு, நிஷ்டை, படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், ஞானம், நீங்களும் எழுதலாம், மல்லிகை, பேனா மற்றும் இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம் இணைய தளங்களான வார்ப்பு, முத்துக்கமலம், கீற்று, தமிழ் ஆதர்ஸ், பதிவுகள், ஊடறு ஆகிய வலைத்தளங்களிலும் ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன்www.poemrizna.blogspot.com,www.vimarsanamrizna.blogspot.com, www.storyrizna.blogspot.comஎன்ற வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் உப தலைவராகவும் பூங்காவனம் காலாண்டு சஞ்சியின் துணை ஆசிரியராகவும் சேவையாற்றி வருவதுடன் முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பிலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்திலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

இவரது கவிதை நூல் - இன்னும் உன் குரல் கேட்கிறது.இவரது கவிதையொன்று.


லயத்து வீடும் கரத்தை மாடும்


கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழா போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி

மானியம், கடனுதவி
அர்த்மெல்லாம் பிழச்சி போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சி போச்சி

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தோரேமாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட சேர்ந்துப் போச்சி

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

நன்றி - யாழ் இலக்கிய குவியம்

Tuesday, 18 September 2012

ஜனாப் உ. நிசார் அவர்களுடனான நேர்காணல்

01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை என்பவற்றைக் கூறுங்கள்?

கண்டி மாவட்டம் உடுநுவரைத் தேர்தல் தொகுதியில் அமைந்த முருத்தகஹமுல கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நான் பிறந்தேன். எனது தந்தையின் பெயர் இ. ஹாமிது லெப்பை மத்திசம். தாயாரின் பெயர் செ. ஹவ்வா உம்மா. எனக்கு ஏழு சகோதர சகோதரிகள் இருந்தார்கள். அவர்களுள் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்து, காலஞ்சென்ற ஜனாப் எச்.எல்.எம். ஜவ்பர் அவர்கள் எனது சகோதரர்களுள் ஒருவராவார்.

மகாவலி நதியின் பிரதான நீர் ஓடைகளில் ஒன்றான கெலிஒயா, எமது கிராமத்தின் ஊடாகவே ஓடுகிறது. அன்று அதன் சுற்றுப்புரங்கள் எங்கும் போல மலைகள், காடுகள், வயல் வெளிகள், நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் நிறைந்ததாகக் காணப்பட்டன. நான் சிறுவயது முதல் இங்கிருந்த இயற்கையின் அழகை இரசித்தது மட்டுமல்லாமல் இயற்கையின் இரகசியங்களை கண்டறியவும் சில முயற்சிகள் செய்துள்ளேன். அதனால்தான் எனது அதிகமான சிறுவர் பாடல்களில் இயற்கையுடனான எனது உறவு பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்ல நான் எழுதிய அதிகமான கவிதைகளில் படிமங்களும் குறியீடுகளும் இயற்கையை ஒட்டியதாகவே அமைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.

நான் தரம் 3 வரையிலான கல்வியை எமது கிராமத்திலும் பக்கத்துக் கிராமங்களிலும் அமைந்திருந்த மூன்று பாடசாலைகளில் பெற்றுள்ளேன். அவற்றுள் முதலாவது பாடசாலை தெஹிப்பாகொடை முஸ்லிம் வித்தியாலயம். இரண்டாவது பாடசாலை தலவத்துரை முஸ்லிம் வித்தியாலயம். மூன்றாவது பாடசாலை தற்போது உடுநுவரை அல்மனார் தேசிய பாடசாலை என அழைக்கப்படும் கல்லூரி. அங்கு நான் 3 ம் வகுப்புக் கல்வியைத் தொடரும் போதுதான் கம்பளை சாஹிரா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் (முன்னால் கல்வியமைச்சர்) அவர்கள் முஸ்லிம் கிராமங்களில் அமைந்திருந்த பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்து, முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். அதன்படி எமது கிராமத்தில் இருந்த ஒரு சில பெற்றோர் தமது பிள்ளைகளை சிங்கள மொழி மூலம் கல்வியைத் தொடர்வதற்காக வேண்டி எமது ஊருக்குப் பக்கத்து ஊரில் அமைந்திருந்த, தற்போது உடுநுவர டீ.பி. விஜேதுங்கா தேசிய பாடசாலை என அழைக்கப்படும் கல்லூரியில் சேர்த்து விட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர் ஐந்தாறு பேர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். மொழி புரியாத, அன்னியோன்யம் இல்லாத புதிய பாடசாலைச் சூழல், எமது கண்களைக் கட்டி காட்டில் கொண்டு போய் விட்ட கதை போலவே ஆரம்பத்தில் அமைந்துவிட்டது.

அவ்வாறு இருந்தாலும் அங்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் போல, எம்மில் எவ்வித வேற்றுமையும் காட்டாது அவர்களது சொந்த இனப்பிள்ளைகளுக்குப் போல் எமக்கும் அறிவைப் பெற்றுத் தந்தனர். அதுமட்டுமல்ல, அவர்கள் அன்று எம்முடன் அன்பாகவும் ஆதரவாகவும் அன்னியோன்யமாகவும் பழகிய அவர்களது உயர்ந்த ஆசிரியப் பண்புகளுக்கு ஒரு நன்றிக் கடனாகவே நான் இங்கு இவ்விடயங்களைக் குறிப்பிட்டுக் கொண்டேன்.

மேற்சொன்ன பாடசாலைக்கு நான் மாற்றப்பட்டது 1956 இல் என்றே நினைக்கிறேன். தமிழ் மொழிப் பாடசாலையில் 3ம் தரம் சித்தி அடைந்திருந்த நாம் சிங்கள மொழிப் பாடசாலை அதிபரின் ஆலோசனைக்கு இணங்க மீண்டும் 3ம் தரத்திலேயே சேர்க்கப்பட்டோம். அதன்படி தரம் 8 வரை அதே பாடசாலையில் தொடர்ந்து கற்ற நான் தரம் 9 இல் கற்பதற்காக வேண்டி கம்பளை சாஹிரா கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இவ்வருடமே சுயபாஷைகள் மூலம் விஞ்ஞானக் கல்வி அறிமுகமாகியது. அதன் படி நானும் விஞ்ஞானப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். சுய பாஷைகள் மூலம் விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் போது ஏற்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் தட்டுப்பாடும் புத்தங்களின் தட்டுப்பாடும் அன்று எமக்கு ஒரு சவாலாகவே இருந்தது. எனினும் சிங்கள மொழி மூலம் கற்று க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தி அடைந்த நான், இன்று கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலை என அழைக்கப்படும் கல்லூரியில் க.பொ.த. (உ.த) வகுப்புக்கு சேர்க்கப்பட்டேன். அங்கிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த நான், 1973 ம் ஆண்டு உகுரஸ்ஸ பிட்டிய மீரா மகா வித்தியாலயத்தில் கணித - விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்றேன்.

02. உங்களது இலக்கிய பிரவேசம் எப்போது நடந்தது?

ஒரு சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆவல் தரம் 7, 8 வகுப்புகளில் கற்கும் போதே எனக்குள் ஏற்பட்டது. அதனால் பல்கலைக்கழகம் வரை சென்று மொழியியல் துறையில் பட்டம் பெற வேண்டும் என ஒரு உந்துதல் சதா மனதுக்குள் இருக்கவே செய்தது. அது அவ்வாரிருக்க தரம் 9, 10 வகுப்புகளில் படிக்கும் போது கவிதை எழுதும் ஆற்றல் தானாக வந்து விட்டது. அவ்வாறு நான் எழுதிய கவிதைகளை சிங்கள மொழியைக் கற்பித்த ஆசிரியர்களிடம் காட்ட அவர்கள் எனது திறமையைப் பாராட்டினார்களே தவிர, வேறு எந்த ஊக்கமும் அவர்களால் எனக்கு அளிக்கப்படவில்லை. அத்துடன் க.பொ.த. (உ.த) வகுப்பில் விஞ்ஞானப்பாடங்களையே கற்றதனால் மொழியில் இருந்த ஆர்வமும் குறைந்துவிட்டது. அவ்வாறு இருந்தாலும் 1979 ம் ஆண்டு நான் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு ஆசிரியப் பயிற்சி பெறச் சென்ற போது, அங்கு ஒரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய பிரபல எழுத்தாளர் அ.ஸ. அப்துல் சமத் அவர்களின் உறவு கிடைத்தது. அத்துடன் ஆசிரிய பயிற்சிக்கு வந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு சில ஆசிரியர்களின் உறவும் கிடைத்தது. அதனால் எனக்குள் எழுத்தார்வம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. எனது முதல் கவிதை 1979 ம் ஆண்டு தினகரன் வார மஞ்சரியில் 'உலகசாதனை' எனும் தலைப்பில் வெளிவந்தது. அதே ஆண்டு தினகரன் வார மஞ்சரியில் சிறுகதை ஒன்றும் வெளிவந்தது. அதிலிருந்து எச்.எல்.எம். நிசார், ஹமீட் எம். நிசார், உடுநுவரை நிசார், உ. நிசார் என பல பெயர்களில் எனது ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் இன்று உ. நிசார் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது உடுநுவரை நிசார் என்பதன் சுருக்கமாக அமைந்திருக்கிறது.


03. இலக்கியப் பணிகளுக்கு உந்து சக்தியாகஇருந்தவர்கள் யார்?

ஏற்கனவே குறிப்பிட்ட பிரபல எழுத்தாளர் அ.ஸ. அப்துஸ் ஸமத் அவர்களை நன்றிக் கடனோடு குறிப்பிட்டாக வேண்டும். அவர் நான் எழுதிய சிறுகதைகளையும் கவிதைகளையும் குறைநிறை பார்த்து என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். அத்துடன் 2000 ஆம் ஆண்டு ஆகும் போது பத்திரிகைகளில் பிரசுரமான ஏராளமான கவிதைகளும் சிறுகதைகளும் என் கைவசம் இருந்தன. அவற்றை நூல் உருவில் கொண்டுவர வேண்டும் என ஓர் ஆவல் சதா மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அதற்கான அனுபவங்களோ ஏற்ற அனுசரணையாளர்களோ கிடைக்கவில்லை.

அப்போது நான் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.எம். நயிமுதீன் அவர்களை அனுகி ஆலோசனையொன்று கேட்டேன். அதற்கான ஏற்ற ஆலோசனையொன்றை அவர் அன்று வழங்கியதனால்தான் எனது முதலாவது கவிதைத் தொகுதியான கனவுப் பூக்களை அச்சுருவில் கொண்டுவர முடிந்தது. அத்துடன் அதிபர் எம்.ஜே.எம். நயிமுதீன் அவர்கள் அந்நூலின் வெளியீட்டு விழாவை கல்லூரி விழாவொன்றாக நடாத்தி சிறப்பித்துத் தந்தார். அதுமட்டுமல்ல, அப்போது இருந்த கல்லூரியின் ஆசிரியர் குழாமும் மாணவர்களும் பெற்றோர்களும் கூட அவ்விழா சிறப்புற தமது பூரண ஒத்துழைப்பை நல்கினார்கள்.

04. நீங்கள் வெளியிட்ட நூல்களைக் கால ஒழுங்கில் குறிப்பிடுங்கள்?

01. கனவுப் பூக்கள் (கவிதைத் தொகுதி) 2005
02. நட்சத்திரப் பூக்கள் (சிறுவர் பாடல் தொகுதி) 2006
03. ஓயாத அலைகள் (கவிதைத் தொகுதி) 2007
04. வெண்ணிலா (சிறுவர் பாடல் தொகுதி) 2007
05. மலரும் மொட்டுக்கள் (சிறுவர் பாடல் தொகுதி) 2007
06. சிறகு விரி (சிறுவர் பாடல் தொகுதி) 2008
07. திராட்சை ரசம் (கவிதைத் தொகுதி) 2009
08. பாவிருந்து (சிறுவர் பாடல் தொகுதி) 2009
09. இளைய நிலா (சிறுவர் பாடல் தொகுதி) 2009
10. உயிர்வலி (சிறுகதைத் தொகுதி) 2009
11. முத்துக்கணையாழி பாகம் 1 (சிறுகதைத் தொகுதி) 2010
12. நல்ல தங்காள் (சிறுவர் பாடல் தொகுதி) 2010
13. யானையும் பானையும் (சிறுகதைத் தொகுதி) 2011
14. முத்துக்கணையாழி 2 (சிறுவர் கதைத் தொகுப்பு) 2011


05. சிறுவர்களுக்கான நூல்களை வெளியிடுவது சிரமம் என்று நினைத்ததுண்டா?

சிறுவர் நூலொன்றுக்குத் தேவையான பாடல்களையோ கதைகளையோ ஏற்கனவே நான் எழுதி வைத்தவற்றில் இருந்து தேர்ந்தெடுப்பது மிக இலகுவானதே. அது அவ்வாறாக இருப்பினும் தேவையான அட்டைப்படத்தையும் ஏனைய படங்களையும் வரைந்து கொள்வதற்கு ஓவியக் கலைஞர்களின் பின்னால் அலைவது மிகவும் சிரமமான ஒரு விடயமாக இருக்கும். எனினும் பல ஓவியக் கலைஞர்கள் அவற்றை உரிய காலத்தில் வரைந்து தந்தமைக்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அதன் பிறகு நூலை அச்சுருவத்தில் கொண்டுவருவதும் பல போராட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில், அதுவும் தமிழ் மொழியில் சிறுவர் நூல்களை வெளியிட்டு வெற்றி அடைவதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும்.

06. மலையகப் பிரச்சினைகள் பற்றி மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களால் மட்டும்தான் அவர்களின் படைப்புக்கள் மூலம் கொண்டு வர முடியும் என்று எண்ணுகிறீர்களா? ஏன்?

இல்லை, மலையகப் பிரச்சினைகள் பற்றி எவரும் தமது படைப்புகள் மூலம் முன்வைக்கலாம். எனினும் மலையகப் பிரச்சினைகளுடன் இரண்டரக் கலந்து வாழும் மலையக எழுத்தாளர்கள் அவற்றைத் தமது படைப்புகள் மூலம் வெளிக் கொண்டுவரும் போது அவற்றிற்காக தமது அனுபவங்களுக்கு ஊடாக பரிகாரமொன்றையும் முன்வைப்பார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். அத்துடன் அப்படைப்புக்களில் ஒரு மண்வாசனையும் தவழும். மேலும் மலையகப் பிரச்சினைகள் பற்றி உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றுக்குப் பரிகாரங்களை முன்வைப்பது மலையக எழுத்தாளர்களின் ஒரு கடமையுமாகும்.

07. மலையத்தின் தற்போதைய இலக்கிய வளர்ச்சி பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மலையக இலக்கிய வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அதே போல மலையக இலக்கியங்கள் ஒரு சிலரால் புறக்கனிக்கப்படுவது போல சில சமயங்களில் மலையகத்துக்குள்ளும் அவை புறக்கனிக்கப்பட்டு வருகின்றன. அதற்கொரு உதாரணம் குறிப்பிடலாம். மத்திய மாகான சபையின் கலாசாரத்திணைக்களம் ஆண்டு தோறும் மத்திய மாகாணத்தில் வாழும் சிங்கள எழுத்தாளர்களிடம் இருந்த பல ஆயிரக் கணக்கான ரூபாக்கள் பெறுமதி கொண்ட நூல்களைக் கொள்வனவு செய்து வருகின்றது.

அது மட்டுமல்ல அந்நூல்கள் மத்திய மாகாணசபைக்கு உட்பட்ட நூலகங்களில் பாவனைக்கு உகந்ததென ஒரு சான்றிதலும் வழங்கி எழுத்தாளர்களை கௌரவிக்கின்றது. அவ்வகையான நூல் கொள்வனவோ சான்றிதழ் வழங்குதலோ தமிழ் மொழி மூல இலக்கியங்கள் சம்பந்தமாக நடைபெறாதது ஒரு கவலைக்குரிய விடயமே. உரிய அதிகாரிகள் இது சம்பந்தமாக ஏற்ற நடவடிக்கையொன்று எடுக்க ஆவன செய்வார்களாயின் அது மலையக எழுத்தாளர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அமையும். அத்துடன் மலையக இலக்கியம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமெனின் புதிய தலைமுறையினரின் பங்களிப்பு மிக மிக அவசியம். பிரதேசத்துக்குப் பிரதேசம் இலக்கிய மன்றங்கள் உருவாக வேண்டும். அவற்றின் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும். இலக்கிய வாதிகளிடையே கலந்துரையாடல்கள் ஏற்பட வேண்டும். போட்டிகள் நடாத்தப்பட்டு எழுத்தாளர்கள் பாராட்டப்பட வேண்டும். நூல் வெளியீடுகளுக்கு அனுசரணையாளர்கள் முன்வந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

08. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள் விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1) கலாசார அலுவல்கள் திணைக்களம் 2008 தேசிய இலக்கிய பெருவிழாவின் பொருட்டு அகில இலங்கை      ரீதியாக நடாத்தப்பட்ட கவிதை ஆக்கப் போட்டியில் முதலாம் இடம் கிடைத்தது.

2) சப்ரகமுவ மாகாணசபை 2009 இல் சாஹித்திய விழாவுக்காக நடாத்திய பாடல்களுக்கான கையெழுத்துப் பிரதிப் போட்டியில் 'பாவிருந்து' சிறுவர் பாடல் தொகுதிக்கு முதலாம் இடம் கிடைத்தது.

3) 2009 மூன்றாம் காலாண்டில் இலங்கையில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகளுள் தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) மதிப்பீட்டில் எனது 'காலம் பதில் சொல்லட்டும்' சிறுகதைக்கு மூன்றாம் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கிடைத்தது.

4) தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் 1993 ம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடாத்திய கவிதையாக்கம் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது.

5) பத்திரிகை சஞ்சிகைகளால் நடாத்தப்பட்ட பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன.

6) கலாசார அலுவல்கள் திணைக்களம் 2008 இல் எனக்கு கலாபூஷன விருதை வழங்கி கௌரவித்தது.

09. கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டும் உங்களுக்கு மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு காட்டும் எண்ணம் இருக்கிறதா?

தமிழ், சிங்கள மொழிகளில் தேர்ச்சி இருப்பதனால் இதற்கான ஆர்வம் இருக்கிறதுதான். எனினும் அதற்கு நேரம்தான் குறுக்கிடுகின்றது. அது எவ்வாறாயினும் எனது உயிர்வலி சிறுகதைத் தொகுதியை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட ஓர் எண்ணம் இருக்கிறது.

10. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலில் தமிழ் மொழி மூலமும் இரண்டாவது சிங்கள மொழி மூலமும் கற்று, தமிழ் மொழி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நேர்ந்த சமயம், இரு மொழிச் சிந்தனைகளில் சிக்கி ஏற்பட்ட தாக்கத்தைப் பொருப்படுத்தாது, தமிழ் இலக்கியத்துக்கு என்னால் இயன்ற ஏதோ ஒரு சிறு பணியைச் செய்துள்ளேன்.

''இலங்கையில் ஆசிரிய வழியிலான சிறுவர் ஆக்க மரபில் வித்துவான் க.வேந்தனார், புலவர் மு.நல்லதம்பி, அல்வாயூர் மு.செல்லையா... ஏ.இக்பால், கேனிப்பித்தன், ஏ.குணநாதன், உ.நிசார் முதலியோர் தடம்பதித்தனர்'' என பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள். தனது 'சிறுவர் இலக்கியம்' எனும் நூலில் இலங்கையில் சிறுவர் இலக்கியத்துக்கு தொண்டாற்றிய ஒருவர்களுள் என்னைப்பற்றியும் குறிப்பிடுவது மனதுக்கு திருப்தியாய் இருக்கிறது.  இதே திருப்தி கவிதை, சிறுகதை, நாவல் துறைகளிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அப்போதுதான் சிறுவயதிலேயே ஒரு சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என எனக்குள் ஏற்பட்ட ஆவல் நிறைவுரும் என நினைக்கிறேன்.

பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக கண்டி, கேகாலை மாவட்டகங்களில் அமைந்த பல அரசாங்கப் பாடசாலைகளில் 35 வருட கால சேவையின் பின் ஓய்வுபெற்று பிறந்து வளர்ந்த உடுநுவரைப் பிரதேசத்துக்கு சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் மாவனல்லையில் தற்போது நான் மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கியம் மேலும் வளம்பெற இன்னும் பல ஆக்கங்களை அளிக்க வேண்டும் என்பதே எனது இன்றைய அவாவாக இருக்கிறது!!!

2012.10.14 தினகரன் வாரமஞ்சரியில் திரும்பிப் பார்க்கிறேன் பக்கத்தில் இவரது நேர்காணலை வாசிக்க கீழே க்ளிக் பண்ணவும்.

http://thinakaran.lk/Vaaramanjari/2012/10/14/?fn=f12101417


Monday, 17 September 2012

கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்

கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்


கிழக்கு மண்ணின் பாரம்பரிய சிறப்பம்சங்களில் ஒன்று கிராமியக் கவிகள் எனும் நாட்டார் பாடல்களாகும். இது இம்மண்ணின் பெருமைக்கு புகழ் சேர்த்து நிற்கின்றது.


அமைதியான கிராமத்து வாழ்க்கை தெளிந்த நீரோடையாக மக்களது மனங்களில் நிம்மதியை ஏற்படுத்தி நிற்கும்.

இத்தகைய வாழ்கையானது அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே இன்ப மூட்டும்.
இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் கிராமத்தவர் வாழ்க்கை ஆனந்தமாக் கழிகிறது.
இருந்தும் இவர்களது வாழ்விலும் பல்வேறுபட்ட துன்பங்களும், துயரங்களும் ஏற்படத்தான் செய்கின்றன.

இவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை பாடல்கள் மூலம் இம்மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

உள்ளக் கிடக்கைகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் கிராமிய கவிகள் ஆழமான கருத்தும் சுவை நயமும் கொண்டதாக விருக்கும்.

இவ்வாறான பாடல்கள் கிண்ணியாவில் 1950க்கு முந்திய காலப்பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது.

வயல் வேலை, சூடடித்தல், காவலுக்கு நிற்றல் போன்ற தொழிலோடு சம்பந்தப்பட்ட பாடல்களும் காதல் நயங்களும் பிரிவுத் துயரை எடுத்துக் கூறும் பாடல்களும் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கின.

இது கிண்ணியா மண்ணின் ஒரு சிறப்பம்சமாகும். கிண்ணியாவில்; கிராமத்துக்கவி ஒரு தனிக்கலை. மேலோங்கி நின்ற இக்கலை இன்று முற்றிலும் அருகிவிட்ட நிலையிலே காணப்படுகிறது.

இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கிராமியக் கவிகளுக்கு புத்துயிரளிக்க என்னால் மேற் கொள்ளப்பட்ட முயற்ச்சியில் பல கவிகள் உருவானது. அவை இரு புத்தகங்களாகவும் வெளி வந்தது. இக்கவிகள் இன்று மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்று வருவது கண்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.

உதாரணத்திற்கு சில பாடல்கள்

அல்லாஹ்விடத்தில் உதவி தேடும் ஒரு தாயின் வேண்டுதல் இவ்வாறு 
சித்தரிக்கப்படுகிறது.

ஆலம் படைச்சவனே
எனை ஆளும் ரஹ்மானே!
எக் கோலமும் அறிஞ்சவனே
என் கொம ரெல்லாம்
கரை சேர
வகை செய்வாய்...


வயல் காவலில் நின்றிருக்கும் ஒரு இளைஞன் தனது துனைவியை நினைத்து ஏங்கி இவ்வாறு பாடுகிறான்.

காவலிலே நின்றிருக்கேன்
கன நாளாத் தானிருக்னே;
கோவம் பழ நிறத்தழகி
ஓன் சேதி ஒன்னும் தெரியலயே

கதிர் கொடல
காய் வணக்கம்
காண வர நேரமில்ல

ராப்பகலா
ஒன்னினைவு
என் நெஞ்சமெலாம்
வாட்டுதடி

பசும் பால
காச்சி வெச்சி
பச்சரிசி சோறாக்கி
பாவ ஒன்ன
நெனச்சி வுட்டன்
பசியெல்லாம்
போச்சிதடி...

கணவனை எதிபார்த்து காத்து நிற்கும் ஒரு மனைவியின் ஏக்கம் இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது.

சுத்தி வெச்ச பாயும்
அடுக்கி வெச்ச
தலையணையும்
விரிச்சி வெச்சிப்
பாத்திருந்தேன்
விரும்பியவர்
வருவாரென்டு...


ஒரு விவசாயி படும் மனக் கவலையை இப்பாடல் பிரதி பலிக்கின்றது.

வயலுக்குள்ள
நெல் வெதச்சி
வெளயும் வர
பாத்திருந்தேன்

சூடடிக்கும் வேலையிலே
பெரு வெள்ளம்
போட்டிருச்சி...


ஒரு தாயின் மன உளைச்சலின் சிறு துளி இது.

காது தோடு
வித்து
பழைய
ஓடு வித்து
ஓன்ன
படிக்க வெச்சன்
மகனே...


இளம் பெண்ணின் மன வேதனை இப்பாடலில் பிரதிபலிக்கப்படுகிறது.

ஈரச் சுவரானேன்
இடிஞ்சி விழுந்த
மண்ணானேண்
பாரா முகமானேன்
என்ன பாக்க
ஒரு மனுசரில்லை


ஒரு ஏழை விதவையின் துயரம் இது.

பென்னம் பெரிய
வயல் வெளியில்
சுத்தி வந்தேனே
என் சின்னஞ் சிறிய
போர உரயும்
நெரயவில்லையே


இவ்வாறு சுவை நயம் கருத்தாழமிக்க பல கிராமிய பாடல்கள் என்னால் உருவாக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல்கள் கிண்ணியா மண்ணிண் பாரம்பரியத்தை என்றும் பறைசாற்றி நிற்கும் என்பது எனது நம்பிக்கை.

நன்றிகள்:- கவிஞர் சாமசிரி  பி.ரி. அஸீஸ்அழகுமிகு கிண்ணியாப் பாலம்
உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு


கவிஞர் பி.ரி. அஸீஸின் சிறுவர் பாடல்கள்

Friday, 14 September 2012

திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்


மாவனல்லை தெல்கஹகொடயை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பீ.ஏ பட்டதாரியாவார். இதுவரை 04 நூல்களை வெளியிட்டுள்ள இவர் அகில இலங்கை சமாதான நீதிவான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூங்காவனம் பத்தாவது இதழுக்காக அவரை நேர்கண்டபோது பகிர்ந்துகொண்ட விடயங்களை வாசகர்களுக்கு தருகிறோம்.உங்கள் இலக்கியப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

எனது தந்தை தினமும் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவர். சிறு வயதிலிருக்கும் போதே என்னையும் பத்திரிகை வாசிக்கத் தூண்டினார். விடுமுறை நாட்களில் தந்தையின் முன்னால் இருந்து பத்திரிகை வாசித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. தினகரன் வார இறுதியில் வெளியாகும் சிறுவர் மலர் என்ற பகுதியை விரும்பி வாசிப்பேன். அதிலுள்ள ஆக்கங்களை வாசிக்கும்போது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வெண்ணிலாவே என்று தலைப்பிட்டு ஒரு சிறு பாடலையும், கிராமக் காட்சி என்ற ஆக்கத்தையும் எழுதினேன். அதனை தபாலில் சேர்க்க தந்தை உதவினார். அடுத்தடுத்த சிறுவர் மலர்களில் அவை வெளிவந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தேன். எனது தந்தை என்னைப் பாராட்டி ஒரு பேனையை பரிசாக தந்தார். அதுவரை பென்சிலால் எழுதிய எனக்கு பேனாவால் எழுதக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனையே எனது இலக்கியப் பிரவேசமாகக் கருதுகிறேன்.


உங்களது முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்?

எனது பெற்றோருக்குப் பின் மத்ரஸாவில் எனக்கு குர்ஆனைக் கற்றுத் தந்த ஹிங்குலோயாவைச் சேர்ந்த முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மிகவும் அழகான முறையில் தலைப் பாத்திஹா, மவ்லூது, பைத்களைச் சொல்லித் தந்தார். அல்குர்ஆனில் காணப்படும் எதுகை, மோனை, சந்தம் என்பன என்னைக் கவர்ந்தன. அத்தோடு எனது கல்விக் கண்களைத் திறந்துவிட்ட எல்லா ஆசான்களும் ஏதோ ஒரு வகையில் எனது முன்னோடிகளாகின்றனர்.


உங்களது இலக்கியப் பணி, எழுத்துப் பணிகளின் வளர்ச்சிப் போக்கு எத்தகையது?

நான் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் மாணவர் மன்றத்தில் பாடுவேன். பேசுவேன். கதை சொல்வேன். போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளேன். உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்கும் காலத்தில் கலா மன்றத்தால் வெளியிடப்பட்ட தேனருவி என்ற கையெழுத்து சிற்றிதழை எழுத கல்லூரியில் பணிபுரிந்த பண்டிதர் சிவசம்பு என்ற ஆசான் என்னை வழிப்படுத்தினார். ஏனைய ஆசான்களினதும் நெறிப்படுத்தலின் கீழ் எழுதுவதற்கு களமமைத்துக் கொண்டேன்.

1985 களுக்குப்பின் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரதிகள் எழுதவும், பங்கு பற்றவும் சந்தர்ப்பம் கிட்டியது. கொழும்புப் பல்கழைக் கழகத்தில் நான் டிப்ளோமா பட்டப்பின் படிப்பு நெறியை மேற்கொள்ளும்போது சமூகவியல்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்த மதிப்புக்குரிய பூமணி குலசிங்கம் அவர்கள் இன ஐக்கியம் சம்பந்தமான கலந்துரையாடல்களுக்கு என்னை இலங்கை வானொலிக்கு அழைத்துச் சென்றார். அப்போது நிகழ்ச்சிக்கான பிரதிகளையும் எழுதிப் பங்கு பற்றினேன்.

அத்துடன் இலங்கை வானாலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பகுதிக்கு பல வருடங்களாக பிரதிகள் எழுதியதுடன் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியும் வந்தேன். முன்னைய நாள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர்களாகப் பணிபுரிந்த எனது அன்புக்குரிய மாணவன் நூராணியா ஹசன், அல்ஹாஜ் எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்களும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சகோதரி புர்கான் பீ. இப்திகார் அவர்களும் இதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்தனர். அவர்களை நன்றியோடு ஞாபகப்படுத்துகிறேன்.


இதுவரை நீங்கள் எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள். அதுபற்றி கூறுங்கள்?


இதுவரை 04 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். நான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் விழிப்பு என்ற சிற்றிதழை மாணவர் ஆக்கங்களைக் கொண்டதாக வெளியிட்டேன்.


நான் எழுதிய முதலாவது நூல் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற தலைப்பில் எழுதிய ஓர் ஆவண நூலாகும். இந்நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இந்நூலை எழுதுவதற்கு என்னை ஆர்வப்படுத்தியவர் அன்று ஸாஹிராவின் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களாவார். இந்நூலை எனது அறிவுக் கண்களை திறந்துவிட்ட ஆலிம் முஹம்மது லெப்பை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

எனது இரண்டாவது நூல் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், கஷ்டங்களைப் பிரதிபலிக்கும் 16 சிறுகதைகளைத் தொகுத்துள்ளேன். இச் சிறுகதைகளுக்கான கருக்கள் அனைத்தும் யதார்த்தமானவையாகும். இந்நூலை எனது அருமைப் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.


மூன்றாவதாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுப்பில் தம்பிக்கு, தங்கைக்கு, தோழிக்கு போன்ற தலைப்பிட்ட சில கவிதைகளோடு சமாதானம், தாலாட்டு, அகதி, தேயிலைத் தோட்டப் பெண் என்ற தலைப்பில் கவிதைகளும், மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையும், எனது அன்புக்குரியதொரு மாணவனுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையுமாக எழுதி இத்தொகுப்பை பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபர் ஆயிஷா ரவூப் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

முதிசம் என்ற தலைப்பிட்ட எனது நான்காவது நூல் நான் கணவனை இழந்து இத்தா அனுஷ்டிக்கும் காலப் பகுதியில் எழுதியதாகும். இது 2500க்கும் மேற்பட்ட மொன்மொழிகளை உள்ளடக்கியதொரு தொகுப்பாகும். இதனை எனது அன்புக் கணவர் அப்துர் ரஸாக் பரீத் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.


ஐந்தாவது நூலாக பொது அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பில் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது.


நூல்களை வெளியிடும்போது நீங்கள் சந்தித்த சவால்கள்?


எல்லோரும் சொல்வார்கள் ஒரு நூலை வெளியிடுதல் என்பது, ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போன்று கஷ்டமானது என்று. அதைத்தான் நானும் சொல்ல வேண்டும். நான் ஒரே மேடையில் மூன்று நூல்களை வெளியிட்டு வேலையை இலகுவாக்கிக் கொண்டேன். எனது முதலாவது நூல் வெளியீடு கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் 2004ல் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழ்தின விழாவின் ஓர் அங்கமாக நிறைவேறியது.


அன்று பிரதமராக இருந்த மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்தியாவிலிருந்து கவிக்கோ அப்துல் ரஹ்மான், பேராசிரியை பர்வீன் சுல்தானா போன்றோர் சிறப்பதிதிகளாகவும், நாடறிந்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் பார்வையாளர்களாகவும் வருகை தந்திருந்த அச்சிறப்பான விழாவில் எனது முதலாவது நூலை வெளியிடக் கிடைத்தமையை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்நூல் மூலம் என்னை மிகவும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஸாஹிராக் கல்லூரிக்கு நன்றி பாராட்டுவது எனது கடமையாகும்.


 
அடுத்த மூன்று நூல்களையும் வெளியிடுவதற்கு நான்z பலரிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது. பெண்களைப் பொறுத்தவரை நூல்களை எழுதலாம். ஆனால் வெளியீடு என்பதில் அலைந்து திரிவது சிரமமான காரியம் என்று நினைக்கிறேன். இறைவனின் கிருபையால் எனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ யின் தலைமைப் பீடம் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த மண்டபத்தை வழங்கி உதவி செய்தது. ஏ.எல்.எம். இப்றாஹிம், என்.எம். அமீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வை வை.எம்.எம்.ஏ. யின் மாதர் பிரிவாகிய வை.டப்ளியு.எம்.ஏ. யின் தலைவி மக்கியா முஸம்மில், திருமதி ஸித்தீக், பவாஸா தாஹா மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

இலங்கை முற்போக்கு இஸ்லாமிய இலக்கியச் சங்கத் தலைவர் மருதூர் ஏ. மஜீத், செயலாளர் டாக்டர். தாஸிம் அஹமத், ஊடகவியலாளர் எம்ஏ.எம். நிலாம், கலைவாதி கலீல் போன்ற சகோதரர்கள் விழாவை சிறப்பாக நடாத்தி நூல்களை வெளியீடு செய்து, எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும் தந்தார்கள் என்பதை நன்றியோடு கூறுகிறேன். மண்டபம் நிறைந்த எனது அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இப்போதும் என் கண்முன்னே தோன்றுகிறார்கள்.படைப்புகளுக்கான விமர்சனங்களை எப்படி நோக்குகிறீர்கள்?

விமர்சனங்கள் கட்டாயம் அவசியமானது. விமர்சனங்கள் இருந்தால்தான் படைப்பாளிகளால் முன்னேற முடியும். ஆனால் விமர்சனங்கள் குறை கூறுவதாக மட்டும் இருக்கக் கூடாது. குறைகளோடு நிறைகளும் பேசப்பட வேண்டும். அப்போதுதான் படைப்பாளிகள் மேலும் ஊக்கமடைவார்கள். உதாரணத்துக்கு ஒரு புறாவைப் பறக்கவிட்டு கைகளைப் பலமாக தட்டும் போது புறா மேலே மேலே உயர்ந்து பறப்பதைப் போல கலைஞர்களையும் பாராட்டப் பாராட்ட அவர்கள் உயர் நிலைக்குச் சென்று சமூகத்திற்குப் பயனுள்ள படைப்புக்களை வழங்குவார்கள். அத்தோடு படைப்பாளிகளைப் பொறுத்தவரை போட்டி போட்டு முன்னேறலாம். ஆனால் மற்றொருவரை வீழ்த்துவதற்கு எத்தனிப்பதும், பொறாமைப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.எதிர்காலத்தில் எத்தகைய இலக்கிய பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ளீர்கள்?


சிறுவர் இலக்கியங்களின் வளர்ச்சி போதாது என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் பெண்கள் சம்பந்தமான வலுவூட்டல், சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கப் பணிகளோடு சிறுவர் இலக்கியம் சம்மந்தமாகவும் கவனத்தைத் திருப்ப நினைத்துள்ளேன்.

நீங்கள் பல வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளீர்கள். இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு? எழுத்துத்துறை பற்றி என்ன கூறுவீர்கள்?

இன்றைய மாணவர்களின் இலக்கியம், எழுத்து, வாசிப்புத் துறைகள் கவலைக்கு இடமானதாகவே காணப்படுகின்றது. வாசிப்பு என்பது மாணவர்களைவிட்டு வெகு தூரமாகி விட்டது. மாணவர்கள் தொலைக்காட்சி, மின்னஞ்சல், சினிமா என்று வீண் பொழுது போக்குகளில் நேரத்தை வீணடிப்பதைக் காண்கிறோம். இலக்கியம் எழுத்துத் துறை வளர்ச்சிக்குப் பதிலாக இன்றைய மாணவர்களிடையே விரும்பத்தகாத மாற்றங்களும், துர்நடத்தைகளும் மலிந்துவிட்டன.

மாணவியர் ஓரளவு இலக்கியம், எழுத்துத் துறைகளில் ஈடுபாடு காட்டினார்கள். அண்மைக் காலங்களில் அவர்களும் கையடக்கத் தொலைபேசிகளோடும், டியூஷன் கலாச்சாரத்தோடும் தமது காலநேரத்தை வீணடிக்கும் போக்கைக் காண முடிகிறது.

பன்முக ஆளுமை கொண்டவர்களாக மாணவ சமுதாயத்தை மாற்ற பெற்றோரும், ஆசான்களும், சமூகமும் முன் வரவேண்டியது அவசரமும் அவசியமுமாகும் எனக் கருதுகிறேன்.


இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

* நான் பாடசாலையில் கற்கும் காலத்தில் மாகாண, மாவட்ட மட்டப் பரிசில்கள் பெற்றுள்ளேன். நான் கல்வி கற்ற, கற்பித்த உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலய மண்டபத்தில் உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் கீழ் இயங்கும் ப்ரியநிலா இலக்கிய வட்டம் 2005 இல் எனக்கு இலக்கியத் தாரகை என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.

* 2009 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய கலை இலக்கிய மகோற்சவத்தின் நிமித்தம் நடாத்திய கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும், நற்சான்றிதழும் கிடைத்தது.

*  இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டிணம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் அனைத்திலும் பங்கு பற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

* 2006 இல் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆளுனர் சபை நல்லாசிரியர் விருது வழங்கி என்னை கௌரவித்தது. எனது 28 வருடகால ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அதனைக் கருதி மனத்திருப்தி கொள்கின்றேன்.

* இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தில் தொடர்ந்து 30 வருடங்கள் சேவை புரிந்த என்னை அச்சங்க உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

* 2011 இலங்கை அரசாங்கத்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலாபூஷண விருது கலாச்சார அமைச்சால் எனக்கு வழங்கப்பட்டது.

* 2011 இல் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் மூலம் சாமஸ்ரீ, தேசமான்ய விருதுகள் கிடைத்தன.

* 2012ல் அகில இலங்கை மனித உரிமை அமைப்பின் நான்காவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் சேவைக்கான விருதும், தங்கப் பதக்கமும், நற்சான்றிதழும் கிடைத்தன.

என்னைப் பொறுத்தவரை பட்டம், பதவிகள், கௌரவங்களை விட மேலும் என்னைத் தகுதியாக்கிக் கொள்வதும், சமூகத்திற்குச் சேவை செய்வதுமே எனது நோக்கமாகும்!!!