பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, 15 November 2013

பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இல. 46/3, பெரியாற்றுமுனை, கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1972ம் ஆண்டு இலக்கிய உலகில் கிண்ணியாச் செல்வவன் எனும் புனைப் பெயரில் கால்பதித்த இவர், தனது 40 வருட கால இலக்கிய சேவையின் பின்னர் இவ்விருதுக்கு உரித்தாளியாகியுள்ளார்.

கவிதை, கிராமியக் கவி, சிறுவர் பாடல், சிறுகதை, குறுங்கதை என இலக்கிய உலகின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து வரும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்படி விருதுக்காக தெரிவு செய்யப்படும் 25 முஸ்லிம் கலைஞர்களில் இவ்வாண்டுக்காக இவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் - அ. அல்பாஸீஸ்

குறிப்பு – பூங்காவனம் சஞ்சிகை இவரை வாழ்த்ததுவதில் பெருமையடைகிறது.

No comments:

Post a Comment