பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, 28 July 2010

பூங்காவனம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுகளுக்கு உதவுங்கள் !

மதிப்பிற்குரிய உதவும் கரங்களுக்கு,

பொருளாதார உதவிகளை வேண்டுவது சம்பந்தமாக

எமது Best Queen Foundation நிறுவனம் மூலம் வெளியிடப்படும் பூங்காவனம் என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் அறிமுக விழா கடந்த மே மாதம் 30ம் திகதி கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. எனவே தொடர்ந்தும் நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்த சிறிய முயற்சிக்கு (எதிர்வரும் இதழ்களின் வெளியீடுகளுக்கு) தனவந்தர்களின் உதவி மிகவும் அவசியமாக இருக்கிறது.

தொடர்ந்து வெளிவரவிருக்கும் பூங்காவனம் சஞ்சிகையின் வெளியீடுகளுக்காக தாங்களிடமிருந்தும் பொருளாதார உதவிகளை எமது நிறுவனம் எதிர்பார்க்கிறது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் இச்சஞ்சிகையின் சிறப்பான வளர்ச்சிப் போக்குக்கும், தொடர் வெளியீடுகளுக்கும் கைகொடுத்து உதவுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மேற்கூறப்பட்ட சஞ்சிகை வெளியீடு தொடர்பான விடயம்

தினகரன் (2009.11.29 பக்கம் - 20)
வீரகேசரி (2009.11.29 பக்கம் - கதம்பம் 9)
எங்கள் தேசம் (டிசம்பர் 15 - 31, 2009 பக்கம் - 22)
தினக்குரல் (2009.12.27 பக்கம் 39)
ஆகிய பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

Best Queen Foundation
21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.

Mobile:- 077 5009 222.
E-mail:- bestqueen12@yahoo.com
Website:- www.bestqueen12.blogspot.com

Account Number Details ;
Commercial Bank, Mount Lavinia Branch
Best Queen Foundation,
Account Number :- 8930016177.

Tuesday, 13 July 2010

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் இரண்டுக்கான ஆக்கங்களைக் கோரல்

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.

இச்சஞ்சிகையின் இரண்டாவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி

“Poonga Vanam”
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia, Sri Lanka.

Mobile:- 077 5009 222 (Rimza Mohamed)
071 9200 580
E-mail:- bestqueen12@yahoo.com

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது 500/= வை கீழுள்ள இலக்கத்துக்கு வைப்புச் செய்து பற்றுச்சீட்டை உடனடியாக அனுப்பி வைக்கவும். தனிப்பிரதியாக பெற விரும்புவோர் 100/= செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank, Mount Lavinia Branch
Best Queen Foundation, Account Number :- 8930016177.

அல்லது மணியோடர் மூலமும் (M.F. Rimza) சந்தாவை செலுத்தலாம்.

-நன்றி-

இப்படிக்கு
சஞ்சிகைக்குழு
ரிம்ஸா முஹம்மத்
எச்.எப். ரிஸ்னா
டப்ளியூ.எம். வஸீர்