பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, 23 May 2010

“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்Best Queen Foundation மூலம் வெளியிடப்பட்டிருக்கும் பூங்காவனம் சஞ்சிகையின் அறிமுக விழா எதிர்வரும் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இடம்பெற இருக்கிறது.

தமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த அறிமுக விழா, உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்க இலங்கைக் கிளையின் காப்பாளரான புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் நடைபெறுவதுடன் சஞ்சிகையின் முதல் பிரதியையும் புரவலர் ஹாஷிம் உமரே பெற்றுக்கொள்வார். இவ்விழாவுக்கு பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை வகிக்கவுள்ளதுடன் கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் சிறப்புரையும் இடம் பெறும். ஏற்புரையை வெலிகம ரிம்ஸா முஹம்மத் வழங்கவுள்ளார்.

No comments:

Post a Comment