பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Thursday, 18 March 2010

கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். இவர் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு.

தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.

1997 - 1998 ம் ஆண்டுகளில் பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 20.01.2010 ம் அன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது. அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 2008ம் ஆண்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004-2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்து நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். கணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு ஆகிய 3 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது நான்காவது நூலாக வெளியிட்டிருக்கிறார்.

2004ம் ஆண்டு ஜூலை 04ம் திகதி செந்தூரத்தில் முதன்முதலாக இவரது அறிமுகம் இடம்பெற்றது. அத்துடன் இணைத்து 2007 பெப்ரவரியில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07ல் 175 ஆவது நபராக இவரைப்பற்றின விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் 2007ம் ஆண்டு ஜூன் மாத ஞானம் சஞ்சிகையிலும், 2008ம் ஆண்டில் பெப்ரவரி முதல் வாரத்தில் வெளிவந்த சுடர் ஒளி பத்திரிகையின் உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 ஜூலை 20ம் திகதி நவமணி பத்திரிகையில் வெளியான இலங்கை திசை பரத்தி யிலும், 2008 ஆடி செங்கதிர் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய அறிமுகக் குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன


தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com)பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் மிலேனியம் கல்வி ஸ்தாபனத்திலும் மகளிர் தொடர்பாளராக பணியாற்றியதாலும் அவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பிலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், அஸ்ஸகீனஹ், தூது, ஞானம் மற்றும் இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம,; இணைய தளமான www.vaarppu.com, பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் www.rimzapoems.blogspot.com என்ற தன் வலைப்பூவிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.


சரித்திரத்தில் வளர வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் சரித்திரத்தின் விளிம்பிலாவது வளர ஆசைப்படுகிறேன் எனக்கூறும் இந்தக் கவிக்குயிலின் முகவரி

Miss. M.F. Rimza

21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia,
Sri Lanka.


Mobile - 077 5009222
071 9200580


E-mail – poetrimza@yahoo.com

2 comments: